பத்து அன்னம்

ஆள்கூறுகள்: 2°35′N 102°43′E / 2.583°N 102.717°E / 2.583; 102.717
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்து அன்னம்
Batu Anam
 ஜொகூர்
பத்து அன்னம் நகரம்
பத்து அன்னம் நகரம்
Map
ஆள்கூறுகள்: 2°35′N 102°43′E / 2.583°N 102.717°E / 2.583; 102.717
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம் சிகாமட் மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு85100
73430 (பாலோங் தீமோர்)[1]
தொலைபேசி எண்கள்07-948
07-949
06-466 (Palong Timur)
போக்குவரத்து பதிவெண்கள்J

பத்து அன்னம் (மலாய்: Batu Anam; ஆங்கிலம்: Batu Anam; சீனம்: 峇都安南) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். இந்த நகரம் சிகாமட் நகரத்திற்கு தெற்கே அமைந்து உள்ளது.[2]

மலேசிய ஆயுதப்படையின் 4-ஆவது அரச பீரங்கி படைப்பிரிவு (4th Royal Artillery Regiment); மற்றும் அரச மலேசியக் காவல் துறையின் பயிற்சி மையம் (PULAPOL) ஆகியவை இங்கு உள்ளன. புலாபோல் பயிற்சி மையம், பத்து அன்னம் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.

இந்த நகரம் சிகாமட் நகரத்திற்கும் நெகிரி செம்பிலான், கிம்மாஸ் நகரத்திற்கும் இடையில் உள்ளது .

பொது[தொகு]

பத்து அன்னம் நகரம், இரப்பர் மற்றும் செம்பனை தோட்டங்களால் சூழப்பட்டுள்ள நகரமாகும். பெல்டா பாலோங் தீமோர், சுங்கே செனாருட் தோட்டம், பாயா லாங் தோட்டம், கோமாளி தோட்டம் போன்ற பெரிய தோட்டங்களும்; மற்றும் சிறிய தோட்டங்களும் இந்த நகரைச் சுற்றி உள்ளன.

1850-ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட எச்&சி லெத்தெக்ஸ் (H&C Latex) எனப்படும் பழைய இரப்பர் தொழிற்சாலை இன்னும் பயன்பாட்டில் உள்ளது. முன்பு பாயா லாங் தோட்டத்தில் அழகான குழிப்பந்தாட்டத் திடல் இருந்தது. பாயா லாங் தோட்டம் விற்கப்பட்ட பின்னர், தற்போது அந்தத் திடலில் செம்பனை மரங்கள் நடப்பட்டு உள்ளன.

போக்குவரத்து[தொகு]

இந்த நகரத்தில் ஒரு தொடருந்து நிலையம் உள்ளது. அதன் பெயர் பத்து அன்னம் தொடருந்து நிலையம். ஆனால், தற்போது பயன்பாட்டில் இல்லை. இருப்பினும் தொடருந்து சேவையை நாடும் பயணிகள், கிம்மாஸ் தொடருந்து நிலையத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கிம்மாஸ் தொடருந்து நிலையம், பத்து அன்னம் நகரில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.

சாலைப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, மலேசியக் கூட்டரசு சாலை 1 இந்த நகரின் முதனமைச் சாலையாக விளங்குகிறது. இந்தச் சாலை பத்து அன்னம் நகரத்தை கிம்மாஸ் மற்றும் சிகாமட் நகரங்களுடன் இணைக்கிறது.

பத்து அன்னம் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

பத்து அன்னம் நகர்ப்புறத்தில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 99 மாணவர்கள் பயில்கிறார்கள். 30 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[3]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD7069 சுங்கை செனாருட் தோட்டம் SJK(T) Ldg Sg Senarut[4] சுங்கை செனாருட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 85100 பத்து அன்னம் 12 8
JBD7070 பத்து அன்னம் SJK(T) Batu Anam[5] பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி 85100 பத்து அன்னம் 78 16
JBD7071 கோமாளி தோட்டம் SJK(T) Ladang Gomali[6] கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி 85109 பத்து அன்னம் 9 6

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kampung Baru Batu Anam, Batu Anam - Postcode - 85100 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
  2. "Batu Anam, Malaysia - Facts and information on Batu Anam - Malaysia.Places-in-the-world.com". malaysia.places-in-the-world.com. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
  3. "Senarai Sekolah Rendah Kementerian Pendidikan Malaysia - MAMPU". archive.data.gov.my (in ஆங்கிலம்). Malaysia Education Ministry. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
  4. "GPK SJKT Ldg Sg Senarut, Puan Elanggeswary sempena Perayaan Tahun Baru Cina". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  5. "பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  6. "கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_அன்னம்&oldid=3923799" இலிருந்து மீள்விக்கப்பட்டது