பெக்கான் நானாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெக்கான் நானாஸ்
Pekan Nanas
நகரம்
பெக்கான் நானாஸ் நகரம்
பெக்கான் நானாஸ் நகரம்
பெக்கான் நானாஸ் Pekan Nanas is located in மலேசியா மேற்கு
பெக்கான் நானாஸ் Pekan Nanas
பெக்கான் நானாஸ்
Pekan Nanas
தீபகற்ப மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 1°31′0″N 103°31′0″E / 1.51667°N 103.51667°E / 1.51667; 103.51667ஆள்கூறுகள்: 1°31′0″N 103°31′0″E / 1.51667°N 103.51667°E / 1.51667; 103.51667
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம்Flag of Pontian, Johor.svg பொந்தியான்
பரப்பளவு
 • மொத்தம்36 km2 (14 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்21,784
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு81500
தொலைபேசி குறியீடு+6-07
போக்குவரத்துப் பதிவெண்கள்J

பெக்கான் நானாஸ், (மலாய்: Pekan Nanas; ஆங்கிலம்: Pekan Nanas; சீனம்: 北干那那); என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், பொந்தியான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்.[1]

மலேசியாவில் அன்னாசிப் பழ உற்பத்திக்கு பெயர் பெற்ற இடமாகும். நாட்டில் அன்னாசிப் பழங்கள் அதிகமான அளவில் இங்குதான் உற்பத்தியாகின்றன. இந்த நகரத்தின் பெயரிலும் அன்னாசிப் பழத்தின் பெயர் பதிவாகி உள்ளது. பெக்கான் (Pekan) என்றால் நகரம். நானாஸ் (Nanas) என்றால் அன்னாசி.[2]

பொது[தொகு]

பெக்கான் நானாஸ் நகரத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 10,000 ஆகும். இந்த பெக்கான் நானாஸ் நகரத்தில் குடிநுழைவுச் சாவடியும்; மற்றும் அன்னாசிப்பழம் பதப்படுத்தல் ஆலைகளையும் கொண்டு உள்ளது.[3]

மலேசியாவின் அன்னாசிப் பழ வேளாண்மையில், பெக்கான் நானாஸ் நகரம் மிகப் பெரிய உற்பத்தித் தளமாக இருந்தது. நாட்டிலேயே முதல் இடத்தைப் பிடித்தது. நகர்ப்புற; கிராமப்புற துரித நவீன மயத்தினால் அன்னாசிப் பழ உற்பத்தி மிகவும் குறைந்து விட்டது.

பூலாய் மலை நீர்வீழ்ச்சி[தொகு]

முன்பு அன்னாசித் தோட்டங்கள் இருந்த இடங்களில் இப்போது வீடைமைப்புத் திட்டங்கள் உருவாகி விட்டன. எண்ணய்ப் பனை தோட்டங்களும் உருவாக்கப்பட்டு உள்ளன.

ஜொகூர் மாநிலச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பூலாய் மலை நீர்வீழ்ச்சி, இந்தப் பெக்கான் நானாஸ் நகரத்திற்கு அருகில் தான் உள்ளது.[4]

அமைவிடம்[தொகு]

தீபகற்ப மலேசியாவின் சொர்க்க வாசல் என்றும் புகழப் படும் தஞ்சோங் பியாய் துறைமுகப் பட்டினம், பெக்கான் நானாஸ் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சோங் பியாய் தேசியப் பூங்கா (Tanjung Piai National Park) எனும் ஓர் அழகிய வனப்பூங்காவை அங்கு அமைத்து இருக்கிறார்கள்.[5]

பெக்கான் நானாஸ் தஞ்சோங் பியாய் கடலோரச் சதுப்புநிலம், அனைத்துலக அளவில் ஒரு முக்கியமான ராம்சார் தளமாகும். ராம்சார் ஒப்பந்தத்தின் கீழ், சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்பை உறுதிப்படுத்த இந்த இடம் அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தேசிய அளவில் முக்கியமான இயற்கை தளமாகும். ஜொகூர் தேசிய பூங்கா கழகத்தினால் உருவாக்கப்பட்ட மூன்றாவது பூங்காவாகும்.[6]

வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா) வழியாக தஞ்சோங் பியாய் தேசியப் பூங்காவிற்குச் செல்பவர்கள், பெக்கான் நானாஸ் நகரத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். அதனால் இந்த நகரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pekan Nenas: From quiet town to political hotbed". The Star (ஆங்கிலம்). 24 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "History - Malaysian Pineapple Industry Board". 24 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Pekan Nanas Explained". everything.explained.today. 24 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Google Travel". www.google.com.sg. 24 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Reminiscing the history of Tanjung Piai". www.thesundaily.my (ஆங்கிலம்). 24 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Tanjung Piai Ramsar site draws international nature lovers". youth.bernama.com. 24 November 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்கான்_நானாஸ்&oldid=3419658" இருந்து மீள்விக்கப்பட்டது