உள்ளடக்கத்துக்குச் செல்

உலு திராம்

ஆள்கூறுகள்: 1°36′N 103°49′E / 1.600°N 103.817°E / 1.600; 103.817
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலு திராம்
Ulu Tiram
நகரம்
உலு திராம் நகரம்
உலு திராம் நகரம்
உலு திராம் Ulu Tiram is located in மலேசியா மேற்கு
உலு திராம் Ulu Tiram
உலு திராம்
Ulu Tiram
உலு திராம் அமைவிடம் மலேசியா
ஆள்கூறுகள்: 1°36′N 103°49′E / 1.600°N 103.817°E / 1.600; 103.817
பரப்பளவு
 • மொத்தம்239 km2 (92 sq mi)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்1,23,860
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+8 (பயன்பாடு இல்லை)
அஞ்சல் குறியீடு
81800
Area code+6-07861
போக்குவரத்துப் பதிவெண்கள்J


உலு திராம், (மலாய்: Ulu Tiram; ஆங்கிலம்: Ulu Tiram; சீனம்: 乌鲁地南; ஜாவி: اولو تيرم) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். இந்த நகரம் தெப்ராவ் நெடுஞ்சாலைக்கு அருகாமையில் உள்ளது. செனாய் - டெசாரு நெடுஞ்சாலை (Senai–Desaru Expressway) வழியாகவும் இந்த நகரத்திற்குச் செல்லலாம்.[1]

ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து வடக்கே சுமார் 18 கி.மீ. தொலைவிலும்; கோத்தா திங்கி நகரில் இருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவிலும் உலு திராம் நகரம் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

உலுதிராம் ஒரு சமவெளியான பகுதி. வேளாண்மைக்குப் பொருத்தமான இடமாகக் கருதப்பட்டது. அதனால் 1900-ஆம் ஆண்டுகளில் அந்தப் பகுதியில் பல ரப்பர், காபி, அன்னாசித் தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. தொடக்கக் காலத்தில் தமிழர்களின் நடமாட்டமும் அதிகமாக இருந்தது.

ரப்பர் மிளகுத் தோட்டங்கள்[தொகு]

நில மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அப்போதைய ஜொகூர் சுல்தான் அனுமதி வழங்கியதும் சாதகமாக அமைந்தது. பிரித்தானியக் காலனித்துவ முதலாளிகள் ரப்பர்த் தோட்டங்களைத் தோற்றுவித்தார்கள். தவிர மிளகுத் தோட்டங்களும் தோற்றுவிக்கப்பட்டன.[2]

ரப்பர்த் தோட்டங்களில் பெரும்பாலும் தமிழர்கள் வேலை செய்தார்கள். தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து அழைத்து வரப் பட்டார்கள். சீனர்கள் சுயமாகத் திறந்த காபி, அன்னாசித் தோட்டங்களில் சீனர்களே பெரும்பாலும் வேலை செய்தார்கள்.

நெல் சாகுபடித் தொழிலிலும்; மீன்பிடிக்கும் தொழிலும்; இதர வேளாண்மை துறையிலும் மலாய்க்காரர்கள் ஈடுபட்டு வந்தார்கள். இந்தோனேசியாவில் இருந்து குடியேறியவர்கள் படகுகள் கட்டும் தொழிலில் ஈடுபட்டார்கள்

உலு திராம் காண்டா காடுகள்[தொகு]

1990-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் உலு திராம் நகரம் தனிமைப் படுத்தப்பட்ட நகராகவே இருந்தது. காட்டுப் பகுதியாகவும் காண்டா காடுகள் நிறைந்த சதுப்பு நிலப் பகுதியாகவும் இருந்தது.

1900-ஆம் ஆண்டுகளில், ரப்பர் விலையில் வீழ்ச்சி. அதனால் ரப்பர்த் தோட்டங்களுக்குப் பதிலாகச் செம்பனைத் தோட்டங்கள் உருவாகின. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு வங்காளதேசிகளும் இந்தோனேசியர்களும் வரவழைக்கப் பட்டதால் பெரும்பாலான தமிழர்கள் அந்தத் தோட்டங்களில் இருந்து வெளியேறி விட்டார்கள்.

மாடோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி பாதிப்பு[தொகு]

ரப்பர்த் தோட்டங்களுக்குப் பதிலாக செம்பனைத்த் தோட்டங்கள் உருவாக்கப் பட்டதும், உலு திராம் பகுதியில் சில பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அந்த வகையில் பாதிக்கப்பட்டது மாடோஸ் தோட்டம் (Ladang Mados) ஒன்றாகும். 1900-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட மாடோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் மூடப்படும் நிலையில் உள்ளது. 2020-ஆம் ஆண்டில் 4 மாணவர்கள் மட்டுமே பயின்றனர். இருப்பினும் 6 ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கு மலேசியக் கல்வியமைச்சு அனுமதி வழங்கியது.[3][4]

கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி மாடோஸ் தோட்டத் பள்ளியில் 2009-ஆம் ஆண்டில் 31 மாணவர்கள் பயின்றார்கள். 8 ஆசிரியர்கள் பணியாற்றினார்கள் என அறியப் படுகிறது. நில மேம்ப்பாட்டுத் திட்டங்களினாலும் நகர்ப்புற வளர்ச்சியினால் இந்தத் தோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.[5][6]

தெப்ராவ் வளர்ச்சிப் பெரும் திட்டம்[தொகு]

ஜொகூர் பாரு மாநகரம் நகர்ப்புறமாய் விரிவாக்கம் அடைந்ததும் உலு திராம் நகரின் தனிமை முடிவுக்கு வந்தது. இந்த நகருக்கு அருகில் தெப்ராவ் வளர்ச்சிப் பெரும் திட்டம் (Tebrau Corridor) நடைமுறைக்கு வந்துள்ளது. 1900-ஆம் ஆண்டுகளில் உருவானத் திட்டம்.[7]

அதனால் இப்போது இந்த நகரம் தெப்ராவ் வளர்ச்சிப் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக வளர்ந்து வருகிறது. ஜொகூர் மாநிலத்தில் மிகத் துரிதமாக வளர்ச்சி பெறும் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாக உலு திராம் பரிணமிக்கின்றது.

உலு திராம் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

உலு திராம் பகுதியில் மூன்று தமிழ்ப்பள்ளிகள் உள்ளன.

டேசா செமர்லாங் தமிழ்ப்பள்ளி
உலுதிராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
மாடோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி

இந்த மூன்று பள்ளிகளிலும் 769 மாணவர்கள் பயில்கிறார்கள். 79 தமிழாசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அந்தப் பள்ளிகளின் விவரங்கள்:

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
அஞ்சல் குறியீடு மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD1010 டேசா செமர்லாங்
Desa Cemerlang
டேசா செமர்லாங் தமிழ்ப்பள்ளி[8] 81800 398 35
JBD1011 உலு திராம்
Ulu Tiram
உலுதிராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி[9] 81800 367 37
JBD1013 Ladang Mados மாடோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 81800 4 6

உலு திராம் தமிழர் ஆய்வுக் குழு[தொகு]

உலு திராம் உட்பகுதியில் கோத்தா கெலாங்கி எனும் இடத்தில் புராதன இடிபாடுகள் கொண்ட கோட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றை 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோத்தா கெலாங்கி சாய்ந்த கோபுரங்கள் என்று அழைக்கிறார்கள்.[10] அவை உலகப்புகழ் ஸ்ரீ விஜய பேரரசின் சிதைந்து போன பாழடைந்த வரலாற்றுச் கோட்டைக் கோபுரங்கள் ஆகும்.[11][12]

தீபகற்ப மலேசியாவின் மிகப் பழமையான நாகரிகம் இருந்தததாகக் கருதப்படும் பண்டைய நகரங்களில் கோத்தா கெலாங்கி தொல்லியல் தளமும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்றைய ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி நகரத்திற்கு வட மேற்கில் 24 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.[13]

ஸ்ரீ விஜய பேரரசு[தொகு]

கி.பி. 650 தொடங்கி கி.பி. 900 வரையிலும், ஸ்ரீ விஜயம் பண்டைய பேரரசின் முதல் தலைநகரமாகவும்; தென்கிழக்கு ஆசியாவின் தீபகற்ப மலேசியாவில் மிகப் பழமையான இராச்சியங்களில் ஒன்றாகவும்; அறிவிக்கப்பட்ட ஒரு தொல்பொருள் தளமாகும்.[14]

இந்தத் தளத்தைப் பற்றி, 2005 பிப்ரவரி 3-ஆம் தேதி, மலேசியப் பத்திரிகைகளால் ஒரு கண்டுபிடிப்பு என அறிவிக்கப்பட்டது. மலேசியாவின் ‘தி ஸ்டார்’ நாளிதழும் இந்தச் செய்தியை வெளியிட்டது.[15]

2014-ஆம் ஆண்டில், ஜொகூர் உலு திராம் பகுதியில் மலாயாத் தமிழர் வரலாற்று மீட்பு எனும் ஒரு தன்னார்வ வரலாற்று ஆய்வுக் குழு தோற்றுவிக்கப்பட்டது. அதன் பொறுப்பாளராகக் கணேசன் என்பவர் உள்ளார். அவரும் அவருடைய தோழர்களும் கோத்தா கெலாங்கி வரலாற்று மீட்புச் சேவைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார்கள்.[16]

வரலாற்று ஆய்வுகள் செய்துவரும் கணேசன்[தொகு]

வரலாற்று ஆய்வுக் குழுவின் தலைவர் கணேசன் கோத்தா கெலாங்கி அடர்ந்த காடுகளுக்குள் சென்று பல முறை பூர்வீகக் குடிமக்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறார். அவர்கள் பார்த்த கோட்டைச் சுவடுகளை ஆவணப் படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் புராதன கருங்கல் கோட்டை இருப்பதும் உறுதிப்படுத்தப் பட்டது.[17]

உயரமான கருங்கற்களால் செதுக்கப்பட்ட பெரும் பெரும் தூண்கள்; சிதறிய சின்ன பெரிய கற்பாறைகள்; செங்குத்தான பாறைகள்; இராட்சச உயரமான பாறைகள் போன்றவற்றைக் கண்டு கணேசன் பிரமித்துப் போய் இருக்கிறார். படங்கள் எடுத்து இருக்கிறார்.[18]

தம் சொந்தச் செலவில் கணேசன் ஆய்வுகளைச் செய்து வருகிறார். மலேசியத் தமிழ் இனத்தின் மீது தனி அக்கறை கொண்ட நல்ல ஒரு சமூகவாதி. இவரை மலேசியத் தமிழர்கள் ஊக்குவிக்க வேண்டும்.[19]

சான்றுகள்[தொகு]

 1. http://www.mbip.gov.my/ms/mpjbt/profil/latar-belakang/page/0/6
 2. Nesalamar, Nadarajah (2000). Johore and the Origins of British Control, 1895–1914. Arenabuku,. பன்னாட்டுத் தரப்புத்தக எண் ISBN 967-970-318-5. {{cite book}}: |access-date= requires |url= (help); Check |isbn= value: invalid character (help)CS1 maint: extra punctuation (link)
 3. "மாடோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி". SJK(T) LADANG MADOS, ULU TIRAM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
 4. "Lembaga Pengelola Sekolah SJKT Ladang Mados". பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
 5. "LAMAN RASMI SJKT LADANG MADOS". jbd1013mados.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
 6. "தமிழ்க்கல்வி நாள் – பள்ளிகளில் எளிமையான முறையில் கொண்டாட்டம்". பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
 7. Baru, ZAZALI MUSA in Johor. "Tebrau, Skudai corridor hot spots for Johor". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
 8. "டேசா செமர்லாங் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
 9. "உலுதிராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
 10. The Johor find of 2005 which was quietly dropped was none other than Kota Gelanggi lost city reflecting Srivijaya and its Buddhist splendour. But they deliberately disregarded it because that would have sidelined Malacca Empire and Islam which was smaller and came some 500 years later.
 11. Hervey, Dudley Francis Amelius, (1849-1911), Colonial Administrator.
 12. Winstedt served as president of the Malayan Branch of the Royal Asiatic Society in the 1920s and was a member of the Raffles Library and Musem committee.
 13. Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society Vol. 77, No. 2 (287) (2004), pp. 27-58 (32 pages)
 14. Ancient Tamil inscriptions show that the city was raided in 1025 by South Indian Chola Dynasty conqueror Rajendra Chola I. Earlier he had destroyed the Sri Vijaya Kingdom of Gangga Negara. The latter that is Gangga Negara is generally equated with the ruins and ancient tombs that can still be seen in Beruas, Perak.
 15. The Johor government agrees that there is a lost city in the state. The search for the lost city drew nationwide interest after The Star broke the story last week, prompting the Federal Government to say it would be given top priority.
 16. 1,000-year-old lostcity, possibly older than Angkor Wat in Cambodia and Borobudur in Indonesia, is believed to have been located in the dense jungles of Johor In his paper, he said the place was raided by the South Indian Tamil Chola Kingdoms RAJA RAJENDRA CHOLAVARMAN I, in 1025A.D.
 17. "KOTA GELANGGI". Myinfozon (in ஆங்கிலம்). 1 October 2018. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
 18. "Hindus are the First Immigrants to Malaysia - The Lost City of Kota Gelanggi". We Care for Malaysia. 16 January 2013. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.
 19. "Kota Gelanggi JohorThe 1000 Year Old Lost-City Belonging To Indians?". Malaysia Indian News | Malaysia Tamil Newspaper | www.iTimes.my. news@iTimes.My. 20 March 2015. Archived from the original on 20 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 20 June 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மலேசிய மாவட்டங்கள் ஜொகூர் மாவட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலு_திராம்&oldid=3706138" இலிருந்து மீள்விக்கப்பட்டது