பாலோ

ஆள்கூறுகள்: 2°12′7″N 103°11′33″E / 2.20194°N 103.19250°E / 2.20194; 103.19250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலோ
முக்கிம்
Paloh
பாலோ is located in மலேசியா
பாலோ
பாலோ
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°12′7″N 103°11′33″E / 2.20194°N 103.19250°E / 2.20194; 103.19250
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம் குளுவாங்
அரசு
 • வகைமலேசிய உள்ளாட்சி மன்றங்கள்
 • நிர்வாகம்குளுவாங் நகராட்சி மன்றம்
(Kluang Municipal Council)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்14,320
நேர வலயம்மலேசிய நேரம்
மலேசிய அஞ்சல் குறியீடு86000
மலேசியத் தொலைபேசி எண்+6-07
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்J
இணையதளம்www.mpkluang.gov.my

பாலோ (மலாய்: Paloh; ஆங்கிலம்: Paloh; சீனம்:巴罗); என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்; ஒரு முக்கிம் ஆகும். குளுவாங் நகரில் இருந்து 35 கி.மீ.; யோங் பெங் (Yong Peng) நகரில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1]

பாலோ ஒரு முக்கிம் பகுதியாகும். அந்த வகையில் 429 கி.மீ km2 பரப்பளவைக் கொண்டுள்ளது. பாலோ நகரத்தில் சீனர்கள், மலாய்க்காரர்கள் மற்றும் இந்தியர்கள்; மூவினத்தவரும் ஒரு சீரான மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர்.

2015-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி இந்த நகரத்தின் மக்கள் தொகை 16,420. ஆண்கள்: 9083; பெண்கள்: 7337.[2]

பொது[தொகு]

Map
குளுவாங் பகுதியில் பாலோ நகரம் அமைவிடம்

மலாயா அவசரகாலகாலத்தில் (Malayan Emergency - 1948-1960); இந்த நகரம், மலாயா தேசிய விடுதலை படையினருக்கு (Malayan National Liberation Army (MNLA) அனுதாபிகளைக் கொண்ட ஒரு "கருப்புப் பகுதி" எனக் கருதப்பட்டது.[3][4]

குளுவாங் நகராட்சி மன்றம்[தொகு]

குளுவாங் நகராட்சி மன்றத்தில் உள்ள இடங்கள்:

வீட்டுமனை குடியிருப்பு பகுதிகள்[தொகு]

குளுவாங் மாவட்டத்தில் பாலோ
 1. தாமான் ஸ்ரீ கோத்தா பாலோ - (Taman Sri Kota Paloh)
 2. தாமான் விஜயா - (Taman Wijaya)
 3. தாமான் பாலோ - (Taman Paloh)
 4. தாமான் மெலாத்தி - (Taman Melati)
 5. தாமான் முர்னி - (Taman Murni)
 6. கம்போங் முகிபா - (Kampung Muhibbah)
 7. கம்போங் இந்தியா - (Kampung India)
 8. தாமான் கியாரா - (Taman Kiara)
 9. தாமான் ஸ்ரீ பால்மா - (Taman Seri Palma)
 10. கம்போங் மெர்டேகா - (Kampung Merdeka)
 11. தாமான் இண்டா - (Taman Indah)

போக்குவரத்து[தொகு]

இந்த நகரத்தில் கே.டி.எம். (KTM) மலாயா தொடருந்து நிறுவனத்தின் நகரிடை இயங்கும் ஊர்தி நிலையம் (KTM Intercity) உள்ளது. இந்த நிலையம் கோலாலம்பூர்; ஜொகூர் பாரு நகரங்களின் தொடருந்து நிலையங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது.

பாலோ தமிழ்ப்பள்ளி[தொகு]

ஜொகூர், குளுவாங் மாவட்டம், பாலோ நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதில் 154 மாணவர்கள் பயில்கிறார்கள். 17 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[5]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD2053 பாலோ SJK(T) Jalan Setesyen Paloh[6] ஜாலான் ஸ்டேசன் பாலோ தமிழ்ப்பள்ளி குளுவாங் 154 17

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Located 35 kilometers away from Kluang and about 32 kilometers from Yong Peng. Paloh town is a balanced population of Chinese, Malays and Indians". JOHOR NOW. 27 October 2016. பார்க்கப்பட்ட நாள் 1 September 2022.
 2. "Paloh, Johor - Population - CityFacts". Archived from the original on 1 செப்டம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 1 September 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 3. Deery, Phillip. "Malaya, 1948: Britain's Asian Cold War?" Journal of Cold War Studies 9, no. 1 (2007): 29–54.
 4. Siver, Christi L. "The other forgotten war: understanding atrocities during the Malayan Emergency." In APSA 2009 Toronto Meeting Paper. 2009., p.36
 5. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
 6. "SJK(T) JALAN STESEN PALOH, KLUANG, JOHOR". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலோ&oldid=3607750" இலிருந்து மீள்விக்கப்பட்டது