தம்போய்

ஆள்கூறுகள்: 1°29′34″N 103°42′21″E / 1.4927758°N 103.7059348°E / 1.4927758; 103.7059348
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்போய்
Tampoi
நகரம்
தம்போய் Tampoi is located in மலேசியா
தம்போய் Tampoi
தம்போய்
Tampoi
ஆள்கூறுகள்: 1°29′34″N 103°42′21″E / 1.4927758°N 103.7059348°E / 1.4927758; 103.7059348
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம்ஜொகூர் பாரு
பரப்பளவு
 • மொத்தம்9.58 km2 (3.70 sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு81200
தொலைபேசி குறியீடு+6-07
போக்குவரத்துப் பதிவெண்கள்J

தம்போய் (ஆங்கிலம்: Tampoi; மலாய்: Tampoi; சீனம்: 淡贝; ஜாவி: تامبوي) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். ஜொகூர் பாரு நகரத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு இலகு ரக தொழிற்சாலைகள் மிகுதியாக உள்ளன.[1]

மலேசியாவில் உள்ள இரு மனநோய் மருத்துவமனைகளில், ஒரு மருத்துவமனை இந்தத் தம்போய் நகரில் தான் உள்ளது. அதன் பெயர் பெர்மாய் மருத்துவமனை (Hospital Permai). மற்றொரு மருத்துவமனை பேராக், தஞ்சோங் ரம்புத்தான் நகரில் உள்ளது.

தம்போய் பெர்மாய் மருத்துவமனை[தொகு]

தம்போய் மருத்துவமனை, தம்போய் நகரின் புறநகர்ப் பகுதியில், 110 ஏக்கர் வனப் பகுதியில், 1937-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த மருத்துவமனை கட்டப்படுவதற்கு 620 ஏக்கர் நிலம் ஒதுக்கப் பட்டாலும், கால்வாசி நிலமே கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.

மனநல நிபுணத்துவச் சேவைகள்[தொகு]

தம்போய் பெர்மாய் மருத்துவமனை

36 மருத்துவமனைக் கூடங்களுடன் 1400 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை. மனநல மருத்துவத்தில் சேவை, பயிற்சி, மனநல நிபுணத்துவச் சேவைகளை வழங்கி வருகிறது.

தீபகற்ப மலேசியாவின் ஜொகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், திரங்கானு, கிளாந்தான் மாநிலங்களில் அறியப்படும் மனநோய் நோயாளிகள் இந்தத் தம்போய் பெர்மாய் மருத்துவமனைக்கு அனுப்பப் படுகிறார்கள்.[2]

மனநோயாளிகள் தப்பிச் செல்வதைத் தடுக்க, மருத்துவமனை முழுமைக்கும் இரும்பு வேலிகள் கொண்ட சுற்றுச் சுவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் தம்போய்[தொகு]

தம்போய் நகரில் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் எனும் பெயரில் முருகர் ஆலயம் உள்ளது. 1930-ஆம் ஆண்டு, சங்கரன் லெட்சுமி தம்பதியினரால் தோற்றுவிக்கப்பட்ட ஆலயம். தொடக்கக் காலத்தில் அவர்களின் இல்லத்தில், ஒரு குடிசைக் கோயிலாக இருந்தது. 1967-ஆம் ஆண்டு தைப் பூசத் திருவிழா கொண்டாடப்பட்டது.

இவர்களுக்குப் பின்னர் வேலு அச்சுதன் என்பவரும் அவருடைய மனைவியார் நீலா அவர்களும் கண்காணித்து வந்தனர். பின்னர் இராமலிங்கம் என்பவரின் தலைமையில் 1994-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போதைய செயலவை உறுப்பினர்கள் நல்லாதரவு வழங்கி உள்ளனர். தற்சமயம் ஆறுமுகம் என்பவரின் தலைமையில் நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.[3]

தாம்போய் கடல் காவல்துறையினர்[தொகு]

1970-ஆம் ஆண்டு தொடங்கி, தாம்போய் கடல் காவல்துறையினர் தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு பேருதவிகள் செய்து வருகின்றனர். கோயில் படிப்படியாக வளர்ச்சி பெற்றது. இன்றுவரை கடல் காவல்துறையினர், பாரம்பரியமாகக் கோயில் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகின்றனர். முன்னாள் ம.இ.கா. தலைவர் ச. சாமிவேலு அவர்களும் இந்தக் கோயில் நிர்மாணிப்புப் பணிகளுக்கு அரசாங்கத்தின் மானிய உதவிகளைப் பெற்றுத் தந்து உள்ளார்.

2018 ஜனவரி 31-ஆம் தேதி நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் ஜொகூர் மாநிலச் சுல்தான் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராகிம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அந்த நிகழ்ச்சி கோயிலின் வரலாற்றில் ஒரு காலச்சுவடு ஆகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kawasan Pentadbiran MBJB". Portal Rasmi Majlis Bandaraya Johor Bahru (MBJB). Archived from the original on 25 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
  2. "Hospital Permai (Tampoi) - hospital.com.my". hospital.com.my. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
  3. "தம்போய் நகரில் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் எனும் பெயரில் முருகர் ஆலயம்". Sri Subramaniar Temple Tampoi. Archived from the original on 25 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
  4. "ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் Sri Subramaniam Temple Tampoi Johor Malaysia Murugan Temples". kaumaram.com. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tampoi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்போய்&oldid=3609251" இலிருந்து மீள்விக்கப்பட்டது