உள்ளடக்கத்துக்குச் செல்

குளுவாங்

ஆள்கூறுகள்: 2°2′1″N 103°19′10″E / 2.03361°N 103.31944°E / 2.03361; 103.31944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளுவாங்
Kluang
 ஜொகூர்
குளுவாங் நகரம்
குளுவாங் நகரம்
Map
ஆள்கூறுகள்: 2°2′1″N 103°19′10″E / 2.03361°N 103.31944°E / 2.03361; 103.31944
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம் குளுவாங்
உருவாக்கம்1915
நகராட்சி தகுதி8 மே 2001
அரசு
 • வகைமலேசியாவின் உள்ளாட்சி மன்றங்கள்
 • நிர்வாகம்குளுவாங் நகராட்சி
(Kluang Municipal Council)
 • தலைவர்அசுராவதி பிந்தி வாகித்
(Azurawati Binti Wahid)
மக்கள்தொகை
 (2022)
 • மொத்தம்3,23,762
நேர வலயம் மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
86000
தொலைபேசி எண்+6-07
போக்குவரத்துப் பதிவெண்J
இணையதளம்www.mpkluang.gov.my
குளுவாங் நகராட்சி
Kluang Municipal Council
Majlis Perbandaran Kluang
வகை
வகை
உள்ளூராட்சி
வரலாறு
தோற்றுவிப்பு8 மே 2001
முன்புகுளுவாங் மாவட்ட நகராட்சி
தலைமை
நகராட்சித் தலைவர்
அசுராவதி பிந்தி வாகித்
(Azurawati Binti Wahid)
செயலாளர்
முகமது யாசித் பகாருதீன்
(Mohamad Yazid Baharudin)
குறிக்கோளுரை
முன்னேற்றம் செழிப்பு
(Maju dan Sejahtera)
(Progress and Prosper)
கூடும் இடம்
குளுவாங் நகராட்சி தலைமையகம்
Menara MPBP, கோத்தா திங்கி சாலை, 86000 குளுவாங், ஜொகூர்
வலைத்தளம்
www.mpbp.gov.my

குளுவாங் (மலாய்: Kluang அல்லது Keluang; ஆங்கிலம்: Kluang; சீனம்:居銮; ஜாவி: كلواڠ) என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். குளுவாங் மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது.

இந்த நகரம் ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து 110 கி.மீ வடக்கே இருக்கிறது. ஜொகூர் மாநிலத்தின் மையத்தில் குளுவாங் நகரம் அமைந்துள்ளது. நகரத்தைச் சுற்றிலும் நூற்றுக் கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செம்பனையும் ரப்பரும் பயிர் செய்யப்பட்டு உள்ளது.

வேளாண்மைத் தொழிலே இந்தப் பகுதியின் முக்கிய தொழிலாகும். மலேசியாவில் சீனர்கள் அதிகமாகக் காணப்படும் நகரங்களில் குளுவாங் நகரமும் ஒன்று. இங்கே தமிழர்களை அதிகமாகப் பார்க்கலாம். பெரும்பாலும் செம்பனைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.

பொது

[தொகு]

குளுவாங் எனும் பெயர் “கெளுவாங்” எனும் (மலாய்: Keluang) சொல்லில் இருந்து வந்தது. கெளுவாங் என்றால் நரி வௌவால். இந்த நரி வவ்வால்கள் பழங்களை மட்டுமே விரும்பிச் சாப்பிடும் பறப்பன ஆகும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு குளுவாங் பகுதியில் ஆயிரக் கணக்கான நரி வௌவால்கள் காணப்பட்டன. காடுகள் அழிக்கப் பட்டதாலும் உணவுக்காக வேட்டை ஆடப்பட்டதாலும் நரி வௌவால் இனம் முற்றாக அழிக்கப் பட்டு விட்டது.[1]

குளுவாங் நகராட்சி

[தொகு]

குளுவாங் நகராட்சியில் உள்ள இடங்கள்:

வரலாறு

[தொகு]
குளுவாங் பேருந்து நிலையம்

குளுவாங் நகரம் 1915-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.[1] இரண்டாவது உலகப் போரின் போது ஆங்கிலேயக் கூட்டுப் படை குளுவாங்கில் இருந்து சிங்கப்பூருக்கு பின்வாங்கியது. குளுவாங்கிற்கு வந்த சப்பானியப் படைத் தளபதி தோமோயுகி யமாசிதா (General Tomoyuki Yamashita) , 1942 சனவரி 27-ஆம் தேதி குளுவாங்கைத் தன் படைத் தலைமையகமாக மாற்றிக் கொண்டார்.[2]

இந்த குளுவாங் பட்டணத்தில் இருந்து தான் சப்பானிய விமானப் படைகள் சிங்கப்பூரையும் சுமாத்திராவையும் தாக்கின. அதன் பின்னர் சப்பானியர்கள் வெளியேறிய பிறகு குளுவாங் விமான ஓடும் பாதையை 1963-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அங்கிருந்த குர்கா படையினர் 1970-ஆம் ஆண்டுகளில் வெளியேறினர்.

விவசாயம்

[தொகு]
குளுவாங் உயர்நிலைப்பள்ளி

1910-ஆம் ஆண்டுகளில் ரப்பர் பயிர் செய்வதற்காகவே குளுவாங் உருவாக்கப்பட்டது. கத்திரி ரோபல் குழு (Guthrie Ropel Group), ஆசியாடிக் ரப்பர் நிறுவனம் (Asiatic Plantations), ஹாரிசான் குரோஸ்பீல்ட் (Harrisons & Crossfield) போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் பல தோட்டங்களைத் திறந்தன.[3]

குளுவாங் நகரில் பிரித்தானியக் காலனித்துவ மதுபானக் கடைகள் பல திறக்கப்பட்டன. அப்போது அங்கே பிரித்தானியர்களைத் தான் அதிகமாகப் பார்க்க முடியும். அந்தக் கடைகளில் குளுவாங் கன்டிரி கிளப் (Kluang Country Club) எனும் கடை விடுதி இன்றும் உள்ளது.

குளுவாங்கின் முக்கியமான தோட்டங்கள்

 • லம்பாக் தோட்டம் - (Lambak Estate)
 • மெங்கிபோல் தோட்டம் - (Mengkibol Estate)
 • பாலோ தோட்டம் - (Paloh Estate)[4]
 • செபுலோ தோட்டம் - (Sepuloh Estate)
 • நியோர் தோட்டம் - (Niyor Estate)
 • காகாங் தோட்டம் - (Kahang Estate)
 • பாமோல் தோட்டம் - (Pamol Estate)
 • கெக்காயான் தோட்டம் - (Kekayaan Estate)
 • குளுவாங் தோட்டம் - (Kluang Estate)
 • எலியசு தோட்டம் - (Elyas Estate)
 • புக்கிட் பெனுட் தோட்டம் - (Benut Estate)
 • சுங்கை சாயோங் தோட்டம் - (Sungai Sayong Estate)
 • பத்து டுவாசு தோட்டம் - (Batu Duas Estate)
 • கோட்டையா தோட்டம் - (Kottaya Estate)
 • செண்டா தோட்டம் - (Senda Estate)
 • வெசிங்டன் தோட்டம் - (Wessington Estate) (Simpang Renggam Estate)
 • ரெங்கோ தோட்டம் - (Ringko Estate)
 • லாயாங் தோட்டம் - (Layang Estate)
 • சாமேக் தோட்டம் - (Chamek Estate)
 • கொரனேசன் தோட்டம் - (Coronation Estate)

தமிழர்கள் குடியேற்றம்

[தொகு]

இந்தத் தோட்டங்களில் வேலை செய்ய ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.[5] அவர்கள் கொத்தடிமைகளாக வாழ்க்கை நடத்திய நிகழ்ச்சிகளும் உள்ளன. ஒரு காலகட்டத்தில் இருபது ஆயிரம் தமிழர்கள் வேலை செய்தும் உள்ளனர். ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் சில தோட்டங்கள் மட்டும் தான் உள்ளன. தமிழர்களை அதிகமாகப் பார்க்க முடியவில்லை.

புலம் பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் வேலைகள் தேடி இடம் பெயர்ந்து விட்டனர். ரப்பர் தோட்டங்கள் இருந்த இடங்களில் இப்போது செம்பனைத் தோட்டங்கள் இருக்கின்றன. அன்னாசி, கொக்கோ, தேயிலை தோட்டங்களும் உள்ளன. இந்தத் தோட்டங்களில் வெளி நாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

இரண்டாம் தலைமுறை

[தொகு]

பெரும்பாலும் இந்தோனேசிய, வங்காள தேசத் தொழிலாளர்கள், இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் இன்னும் இந்தத் தோட்டங்களில் இருக்கின்றனர். அவர்களில் பலர் வயதானவர்கள். பிள்ளைகளுடன் நகர்ப் புறங்களுக்குப் போகாமல் தங்களின் எஞ்சிய காலத்கை இங்கேயே கழிக்கின்றனர்.

1969-ஆம் ஆண்டு மலேசியாவில் ஓர் இனக் கலவரம் நடைபெற்றது. அதன் பின் விளைவுகளின் காரணமாகப் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்களின் தாயகமான தமிழ் நாட்டிற்குத் திரும்பி விட்டனர்.

மூன்றாம் தலைமுறையினர் பெரும்பாலும் படித்தவர்கள். கல்லூரிகளில் பலகலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள். பல தமிழர்கள் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். முதன்முதலில் வந்த தமிழர்கள் பல கோயில்களைக் கட்டினர். ஆண்டு தோறும் சிறப்பான முறையில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

இன்றைய நிலை

[தொகு]

கல்வித் துறையில் நாட்டம் இல்லாதத் தமிழர்கள் பலர் தேயிலைத் தோட்டங்களை நம்பி வாழ்கின்றனர். இளம் வயதினரும் கடினமான உடல் உழைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு நாட்டின் குடியுரிமை பத்திரங்கள் இல்லை. சில பெற்றோரின் அலட்சியப் போக்கினால் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புப் பத்திரம் எடுப்பது இல்லை.

அதனால் அந்தக் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்குப் போக முடியாத நிலைமை. கல்வி அறிவு இல்லாததால் அந்தக் குழந்தைகளில் பலர் பால்ய வயதிலேயே உடல் உழைப்புத் துறைக்கு வருகின்றனர்.

குளுவாங் தமிழ்ப்பள்ளிகள்

[தொகு]

ஜொகூர், குளுவாங் மாவட்டம், குளுவாங் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 879 மாணவர்கள் பயில்கிறார்கள். 104 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[6]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD2041 புக்கிட் பெனுட் தோட்டம் SJK(T) Ladang Bukit Benut[7] புக்கிட் பெனுட் தோட்டத் தமிழ்ப்பள்ளி குளுவாங் 16 7
JBD2042 மெங்கிபோல்
Mengkibol
SJK(T) Ladang Lambak[8] லம்பாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி குளுவாங் 62 10
JBD2043 எலாய்ஸ் தோட்டம் SJK(T) Ladang Elaeis[9] எலாய்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி குளுவாங் 23 7
JBD2044 குளுவாங் SJK(T) Jalan Haji Manan[10] ஹஜி மனான் சாலை தமிழ்ப்பள்ளி குளுவாங் 521 37
JBD2045 மெங்கிபோல் தோட்டம் SJK(T) Ladang Mengkibol[11][12] மெங்கிபோல் தோட்டத் தமிழ்ப்பள்ளி குளுவாங் 109 14
JBD2046 பாமோல் தோட்டம் SJK(T) Ladang Pamol[13] பாமோல் தோட்டத் தமிழ்ப்பள்ளி குளுவாங் 58 11
JBD2048 நியோர் தோட்டம் SJK(T) Ladang Niyor[14] நியோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி குளுவாங் 37 7
JBD2049 நியோர் SJK(T) Cep.Niyor Kluang[15] சி.இ.பி. நியோர் தமிழ்ப்பள்ளி குளுவாங் 23 6

சகோதரி நகரங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 "Kluang name derives from the Malay word 'bat', which means a big bat or fruit bats. These animals exist in great numbers in Kluang last few decades; but now almost no longer due to hunting and the destruction of its natural habitat". Official Portal of Kluang Municipal Council (MPK). 8 May 2016. பார்க்கப்பட்ட நாள் 1 September 2022.
 2. "History of Kluang". Archived from the original on 8 July 2003.
 3. Malabar to Malaya (2 ed.). Ravindran Raghavan. p. 341. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789671653401.
 4. "Sustainability the way forward for palm oil industry". IOI Corp.
 5. Winstedt, A History of Johore (1365–1941), pp. 106–7
 6. "Senarai Sekolah Rendah Kementerian Pendidikan Malaysia - MAMPU". archive.data.gov.my (in ஆங்கிலம்). Malaysia Education Ministry. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
 7. "SJK (T) LADANG BUKIT BENUT". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 8. "Sekolah Jenis Kebangsaan Tamil Ladang Lambak di bandar Kluang". my.worldorgs.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 9. "SJK (T) Ladang Elaeis Wins First Place In Frog World Championship 2020, Beating Over 3,000 Schools Worldwide!". Varnam MY. 5 August 2020. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 10. "Sjkt Jalan Haji Manan". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 11. Mengkibol, Sjkt Ladang (11 February 2014). "SIJIL PENGHARGAAN KOMPETENSI ICT GURU 2013". SJKT LADANG MENGKIBOL. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 12. "Persatuan Bekas Pelajar SJK - T Ladang Mengkibol". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 13. "SJKT Ladang PAMOL". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 14. "SJKT Ladang Niyor, Kluang". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 15. "Melawat Muzium SJK (T) CEP NIYOR,... - Muzium Tokoh Johor" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளுவாங்&oldid=3945658" இலிருந்து மீள்விக்கப்பட்டது