கோத்தா திங்கி மாவட்டம்
கோத்தா திங்கி மாவட்டம் Daerah Kota Tinggi Kota Tinggi District | |
---|---|
ஜொகூர் மாநிலத்தில் கோத்தா திங்கி மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 1°44′N 103°54′E / 1.733°N 103.900°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
தொகுதி | கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி |
உள்ளூராட்சி | கோத்தா திங்கி நகராட்சி பெங்கேராங் நகராட்சி]] |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | அசுலினா பிந்தி ஜாலில் Hazlina binti Jalil[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,737.63 km2 (1,057.00 sq mi) |
மக்கள்தொகை (2020)[3] | |
• மொத்தம் | 2,22,382 |
• அடர்த்தி | 81/km2 (210/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 81xxx |
தொலைபேசி எண்கள் | +6-07 |
வாகனப் பதிவெண்கள் | J |
(கோத்தா திங்கி எனும் பெயரில் கோத்தா திங்கி மாவட்டம்; கோத்தா திங்கி நகரம் என இரு இடங்கள் உள்ளன.)
கோத்தா திங்கி மாவட்டம் என்பது (மலாய்:Daerah Kota Tinggi; ஆங்கிலம்:Kota Tinggi District; சீனம்:哥打丁宜县) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கோத்தா திங்கி நகரம் தலைநகரமாக விளங்குகிறது.
கோத்தா திங்கி மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 291 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 152 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 71 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 34 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.
கோத்தா திங்கி நகரம்; கோலா செடிலி (Kuala Sedili); சுங்கை ரெங்கிட் (Sungai Rengit); மற்றும் பெங்கேராங் (Pengerang) பகுதியின் குடியிருப்புகளைக் கோத்தா திங்கி நகராட்சி (Kota Tinggi District Council) நிர்வகிக்கிறது.
பொது
[தொகு]பெங்கேராங் பகுதியைத் தளமாகக் கொண்ட தென் பகுதிகளைப் பெங்கேராங் நகராட்சி (Pengerang Municipal Council) நிர்வகிக்கிறது. பெங்கேராங் என்பது கோத்தா திங்கி மாவட்டத்தின் துணை மாவட்டமாகும். 2015-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
ஜொகூர் மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமான கோத்தா திங்கி மாவட்டத்தின் பரப்பளவு 3,482 சதுர கி.மீ. மாநிலத்தின் 18.34% பகுதியை உள்ளடக்கியது.[4]
தேர்தல் முடிவுகள்
[தொகு]மலேசிய மக்களவை
[தொகு]வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
முகமட் காலிட் நோர்டின் (Mohamed Khaled Nordin) | பாரிசான் | 25,410 | 53.68 | 15.46 ▼ | |
முகமட் ரிசுவான் ரசுமான் (Mohamad Ridhwan Rasman) | பெரிக்காத்தான் | 17,020 | 35.96 | 35.96 | |
ஓன் ஜபார் (Onn Jaafar) | பாக்காத்தான் | 4,903 | 10.36 | 20.50 ▼ | |
மொத்தம் | 47,333 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 47,333 | 98.35 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 796 | 1.65 | |||
மொத்த வாக்குகள் | 48,129 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 61,291 | 77.23 | 7.22 ▼ | ||
Majority | 8,390 | 17.72 | 20.56 ▼ | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [5] |
மலேசிய மக்களவையில் கோத்தா திங்கி மாவட்டத்தின் தொகுதிகள்
# | தொகுதி | மக்களவை உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P155 | தெங்காரா மக்களவைத் தொகுதி | அடாம் பாபா | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P156 | கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி | அலிமா சதீக் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P157 | பெங்கேராங் மக்களவைத் தொகுதி | அசுலினா ஒசுமான் சாயித் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
ஜொகூர் மாநிலச் சட்டமன்றம்
[தொகு]ஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தில் கோத்தா திங்கி மாவட்டப் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:[6]
# | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P155 | N34 | பாந்தி | அசுரின் அசிம் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P155 | N35 | பாசிர் ராஜா | ரசிடா இசுமாயில் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P156 | N36 | செடிலி | ராசுமா இசுநாயின் | பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.) |
P156 | N37 | ஜொகூர் லாமா | ரோசுலாலி சகாரி | பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.) |
P157 | N38 | பெனாவார் | சரிபா அசீசா | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P157 | N39 | தஞ்சோங் சூராட் | சாயிட் ரகுமான் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
நிர்வாகப் பகுதிகள்
[தொகு]கோத்தா திங்கி மாவட்ட மன்றம் மற்றும் பெங்கேராங் நகராட்சி மன்றம் ஆகிய இரண்டு உள்ளூராட்சிகளால் இந்த மாவட்டம் நிர்வகிக்கப் படுகிறது. கோத்தா திங்கி மாவட்ட மன்றம் வடமேற்கு பகுதியை நிர்வகிக்கிறது.
பெங்கேராங் நகராட்சி மன்றம் 16 ஜனவரி 2017-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதற்கு முன்னர் பெங்கெராங் உள்ளூர் ஆணையம் என அழைக்கப்பட்டது. இந்தப் பெங்கேராங் நகராட்சி மன்றம் 1,288 கி.மீ. பரப்பளவு கொண்ட தென்கிழக்குப் பகுதியை நிர்வகிக்கிறது.
முக்கிம்கள்
[தொகு]கோத்தா திங்கி மாவட்டம் 10 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[7]
- ஜொகூர் லாமா (Johor Lama)
- காம்பாவ் (Kambau)
- கோத்தா திங்கி நகரம்
- பந்தாய் தீமோர் (Pantai Timur)
- பெங்கேராங் (Pengerang)
- செடிலி பெசார் (Sedili Besar)
- செடிலி கிச்சில் (Sedili Kechil)
- தஞ்சோங் சூராட் (Tanjung Surat)
- உலு சுங்கை ஜொகூர் (Ulu Sungai Johor)
- உலு சுங்கை செடிலி பெசார் (Ulu Sungai Sedili Besar)
நகரங்கள்
[தொகு]- பண்டார் பெனாவார் (Bandar Penawar)
- பண்டார் தெங்காரா (Bandar Tenggara)
- டெசாரு (Desaru)
- ஜொகூர் லாமா (Johor Lama)
- கோத்தா திங்கி (Kota Tinggi)
- கோலா செடிலி (Kuala Sedili)
- பெங்கேராங் (Pengerang)
- சுங்கை ரெங்கிட் (Sungai Rengit)
- தஞ்சோங் சூராட் (Tanjung Surat)
- தெலுக் செங்காட் (Teluk Sengat)
ஆறுகள்
[தொகு]கோத்தா திங்கி மாவட்டத்தில் உள்ள ஆறுகள்.
- ஜொகூர் ஆறு
- லெபம் ஆறு
- சாந்தி ஆறு
- செடிலி பெசார் ஆறு
- செடிலி கெசில் ஆறு
பொருளியல்
[தொகு]கோத்தா திங்கி மாவட்டத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் சுற்றுலா; விவசாயம்; உயிரி தொழில்நுட்பம்; பெட்ரோலிய வேதிப்பொருட்கள்; எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகும்.[8]
கோத்தா திங்கி மாவட்ட நிலப்பகுதிகளில் 60% வேளாண்மை நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. டெசாரு கடற்கரைப் பகுதியில், ஜொகூர் மாநில அரசு 1,578 ஹெக்டர் பரப்பளவில் ஓர் ஒருங்கிணைந்த சுற்றுலாப் பகுதியை உருவாக்கி உள்ளது.[9]
சான்றுகள்
[தொகு]- ↑ Mohammad Ali, Khairul (27 January 2021). "Johor lantik wanita kedua jadi Pegawai Daerah". Utusan Malaysia (Iskandar Puteri). https://www.utusan.com.my/nasional/2021/01/johor-lantik-wanita-kedua-jadi-pegawai-daerah.
- ↑ "Profil Daerah Kota Tinggi". Pentadbiran Tanah Johor. Iskandar Puteri, Johor Bahru District. 2022. பார்க்கப்பட்ட நாள் 23 November 2022.
- ↑ POPULATION DISTRIBUTION BY LOCAL AUTHORITY AREAS AND MUKIMS 2010. Department of Statistics, Malaysia. pp. 231, 240. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "Jabatan Perancangan Bandar dan Desa Negeri Johor" (PDF). Plan Malaysia @ Johor. பார்க்கப்பட்ட நாள் 26 March 2018.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.
- ↑ "PILIHAN RAYA PARLIMEN BAGI NEGERI JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 26 July 2024.
- ↑ "கோத்தா திங்கி மாவட்டத்தின் நீர் விநியோகப் புள்ளிவிவரங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2021-05-27.
- ↑ Muafakat ke Arah Johor Berkemajuan.
- ↑ State govt's moves set to give Johor economy a boost.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Kota Tinggi District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kota Tinggi