உள்ளடக்கத்துக்குச் செல்

இசுகந்தர் புத்திரி

ஆள்கூறுகள்: 01°25′20″N 103°39′00″E / 1.42222°N 103.65000°E / 1.42222; 103.65000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுகந்தர் புத்திரி
Iskandar Puteri
மாநகரம்
ஜொகூர்
மேலிருந்து... இடமிருந்து வலமாக:
கோத்தா இசுகந்தரில் உள்ள டத்தோ ஜாபர் முகமது கட்டடம்; லெகோலாந்து மலேசியா கேளிக்கை அரங்கம்; இசுகந்தர் புத்திரி நகராண்மைக் கழகக் கட்டடம்; கோத்தா இசுகந்தர் மசூதி; சுல்தான் இசுமாயில் கட்டடம்
Map
இசுகந்தர் புத்திரி is located in மலேசியா
இசுகந்தர் புத்திரி
      இசுகந்தர் புத்திரி       மலேசியா
ஆள்கூறுகள்: 01°25′20″N 103°39′00″E / 1.42222°N 103.65000°E / 1.42222; 103.65000
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம்ஜொகூர் பாரு மாவட்டம்
உருவாக்கம்16 ஏப்ரல் 2009
(கோத்தா இசுகந்தர்)
மாநகரத் தகுதி22 நவம்பர் 2017[1]
அரசு
 • நிர்வாகம்ஜொகூர் பாரு மாநகர் மன்றம்
 • உள்ளூராட்சிஇசுகந்தர் புத்திரி நகர மன்றம்
 • மாநில அரசுஜொகூர் மாநில சட்டமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்367.4 km2 (141.9 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்5,75,977 (10-ஆவது)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
79xxx
தொலைபேசி+607
வாகனப் பதிவெண்கள்J
இணையதளம்www.mbip.gov.my

இசுகந்தர் புத்திரி (மலாய்: Iskandar Puteri; ஆங்கிலம்:Iskandar Puteri; சீனம்:依斯干達公主城; ஜாவி: إسكندر ڤوتري) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு மாநகரம். தீபகற்ப மலேசியாவின் தெற்கு முனையில் ஜொகூர் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த நகரம் ஜொகூர் மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரமும் ஆகும். ஜொகூர் மாநிலத்தின் சட்டமன்றம் இங்கு இருந்துதான் செயல்படுகிறது. ஜொகூர் பாரு நகரை ஒட்டியுள்ளது.[2][3]

ஜொகூர் பாரு மாநகரம்; இசுகந்தர் புத்திரி மாநகரம்; ஆகிய இரு நகரங்களையும் ஒருங்கிணைத்து இசுகந்தர் மலேசியா (Iskandar Malaysia) என்று அழைக்கிறார்கள். 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்த நகரங்களின் கூட்டு மக்கள் தொகை 2.2 மில்லியன் ஆகும். இருப்பினும் இந்த இசுகந்தர் புத்திரி நகரத்தின் மக்கள் தொகை 575,977. மலேசியாவின் 13-ஆவது பெரிய நகர்ப்புறமாக விளங்குகிறது.[4]

வரலாறு

[தொகு]
கோத்தா இசுகந்தர்
மேதினி 9, மேதினி இசுகந்தர்

வரலாற்று ரீதியாக, இன்றைய இசுகந்தர் புத்திரியைச் சுற்றியுள்ள பகுதி பெரும்பாலும் மலாய்க்காரர்கள் மற்றும் ஒராங் லாட் (Orang Laut) பழங்குடியினர் வசித்த மீனவக் கிராமங்களைக் கொண்டு இருந்தது. தெப்ராவ் நீரிணை (Tebrau Strait) எனும் ஜொகூர் நீரிணையின் மேற்குப் பகுதியில் அமைந்து இருந்த இந்தப் பகுதி, ஒரு காலத்தில் 'செம்பிட் புத்திரி' (Sempit Puteri) என்று அழைக்கப்பட்டது.

தெப்ராவ் நீரிணையானது தெற்கில் சிங்கப்பூர் நாட்டையும் அதன் தீவுகளையும்; வடக்கே மலாய் தீபகற்பத்தின் ஜொகூர் மாநிலத்தையும் பிரிக்கிறது.[5]

தெமாங்கோங் டாயாங் இபுராகிம்

[தொகு]

1855-ஆம் ஆண்டில், தெமாங்கோங் டாயாங் இபுராகிம் (Temengong Daeng Ibrahim) எனும் ஜொகூர் தெமாங்கோங்; ஜொகூர் சிம்மாசனத்தின் மீதான உரிமையைப் பெற்றார்.

தெமாங்கோங் அல்லது தெமெங்குங் என்பது பாரம்பரிய மலாய் இராச்சியங்களில் ஒரு பிரபு பதவியைக் (Title of Nobility) குறிக்கும் சொல் ஆகும். ஒரு தெமாங்கோங் பதவி ஒரு சுல்தானால் நியமிக்கப்படும் பதவி. ஓர் இராச்சியத்தின் அதன் எல்லைப் பகுதிகளில் உள்ள பிரதேசங்களின் ஆட்சியாளராக ஒரு தெமாங்கோங் நியமிக்கப்படலாம். அந்தப் பிரதேசங்களில் அவர் ஒரு துணை ஆளுநராகச் செயல்படுவார்.[6]

மகா ராஜா அபு பாக்கார்

[தொகு]

அந்தக் கட்டத்தில், சிங்கப்பூர், தெலுக் பிலாங்காவில் (Telok Blangah) இருந்த ஜொகூர் இராச்சியத்தின் தலைநகர் தஞ்சோங் புத்திரி (Tanjung Puteri) எனும் இடத்திற்கு மாற்றப்பட்டது. அந்தப் புதிய இடத்திற்கு, அண்மைய காலத்தில் இசுகந்தர் புத்திரி (Iskandar Puteri) எனப் பெயர் வைக்கப்பட்டது.

1868-ஆம் ஆண்டு தெமாங்கோங் டாயாங் இபுராகிம் அவர்களின் மகன் மகா ராஜா அபு பாக்கார் (Maharaja Abu Bakar) புதிய ஜொகூர் மகாராஜாவாக முடிசூட்டிக் கொண்டார். தன்னுடைய வம்சத்தை பழைய ஜொகூர் சுல்தானகத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, தஞ்சோங் புத்திரி என்பதை ஜொகூர் பாரு (Johor Bahru) என மறுபெயரிட்டார்.

மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம்

[தொகு]

1993-இல், மகாதீர் பின் முகமது மலேசியாவின் 4-ஆவது பிரதமராக பதவி வகித்தார். அவருடைய காலத்தில், தீபகற்ப மலேசியா மற்றும் சிங்கப்பூர் குடியரசை இணைக்கும் மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம் (Malaysia–Singapore Second Link) கட்டப்பட்டது. அதற்கான ஒரு திட்டம் அலீம் சாத் (Halim Saad) என்பவரால் முன்வைக்கப்பட்டது.

அலீம் சாத், மலேசியாவில் மிக நீளமான வடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா) (North–South Expressway (Malaysia) நெடுஞ்சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டவர். முன்னாள் நிதி அமைச்சர் டாயிம் சைனுதீன் (Daim Zainuddin) என்பவரிடம் பயிற்சி பெற்றவர். அந்த நேரத்தில் அலீம் சாத் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தார்.

நுசாஜெயா

[தொகு]

அந்தக் காலக் கட்டத்தில், ஏற்கனவே இருந்த மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம் கட்டப்பட்டது.[7][8] மலேசியாவில் இந்தப் பாலத்தை, பொதுவாக துவாஸ் பாலம் அல்லது துவாஸ் இரண்டாவது பாலம் என்று அழைப்பதும் உண்டு.[8] சிங்கப்பூரில், துவாஸ் இரண்டாவது இணைப்பு (Tuas Second Link) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப் படுகிறது.

மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலம் கட்டப்படும் போது அந்தப் பகுதியில் ஒரு புதிய நகரத்தை உருவாக்குவதற்காக ஒரு பரந்த நிலம் கையகப் படுத்தப்பட்டது. பின்னர் அங்கு ஒரு புதிய நகரம் உருவாக்கப்பட்டது. அந்தப் புதிய நகரத்திற்கு ஜொகூரின் முன்னாள் மந்திரி பெசார், முகிதீன் யாசின் அவர்கள் நுசாஜெயா (Nusajaya) என பெயர் வைத்தார்.

கோத்தா இசுகந்தர் நிர்வாக மையம்

[தொகு]

இந்த நுசா ஜெயா புது நகரம், தற்சமயம் இசுகந்தர் புத்திரி என மடிவடிவம் கண்டு உள்ளது. மலேசிய மத்திய அரசின் நிர்வாக மையமான புத்ராஜெயாவின் நகரத் திட்டமிடல் அடிப்படையில் நுசாஜெயாவில் கோத்தா இசுகந்தர் (Kota Iskandar) என்ற புதிய நிர்வாக மையமும் உருவாக்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டில் நுசாஜெயா நகர்ப்பகுதி இசுகந்தர் புத்திரி என மறுபெயர் சூட்டப்பட்டது.[1]

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]
இசுகந்தர் புத்திரி அனைத்துலகப் படகு முனையம்

இசுகந்தர் புத்திரி 11 நிர்வாகப் பிரிவுகளைக் கொண்டுள்ளது:[9]

மக்கள்தொகை

[தொகு]

பின்வரும் புள்ளிவிவரங்கள் மலேசிய புள்ளியியல் துறையின் 2020-ஆம் ஆண்டு மக்கள்தொகை (Department of Statistics Malaysia 2020) கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது.[11]

இசுகந்தர் புத்திரியின் நிர்வாகப் பகுதிகள்
இசுகந்தர் புத்திரியில் உள்ள இனக்குழுக்கள் (2020 )
இனம் மக்கள் தொகை விழுக்காடு
மலாயர் 199,031 44.46%
சீனர் 164,815 36.81%
இந்தியர் 51,739 12.4%
மற்ற மலேசியர் 1,669 0.37%
மலேசியர் அல்லாதவர் 30,443 6.80%

கல்வி

[தொகு]

இசுகந்தர் புத்திரியில் ஒரு பெரிய கல்வி நகரம் (EduCity) உள்ளது. தென்கிழக்காசியாவில் புகழ்பெற்ற கல்வி வளாகம். 600 ஏக்கர் (2.4 கி.மீ.2) பரப்பளவு கொண்டது. இங்கு பல உயர்க்கல்வி நிலையங்கள் உள்ளன. அவற்றில் சில நிலையங்கள்:[12]

  • சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் (University of Southampton Malaysia Campus)
  • நியூகாசில் மலேசியா மருத்துவப் பல்கலைக்கழகம் (Newcastle University Medicine Malaysia)
  • ரீடிங் பல்கலைக்கழகம் (University of Reading)
  • மல்டிமீடியா பல்கலைக்கழகம் (Multimedia University)
  • ராபிள்சு பல்கலைக்கழகம் (Raffles University)
  • நெதர்லாந்து கடல்சார் தொழில்நுட்ப கல்விக்கழகம் (Netherlands Maritime Institute of Technology)
  • சிங்கப்பூரின் மேலாண்மை மேம்பாட்டு கல்விக்கழகம் (Management Development Institute of Singapore)
  • இசுடெல்லர் அனைத்துலக கல்விக்கழகம் (Stellar International School)
  • மார்ல்பரோ மலேசியா கல்லூரி கல்விக்கழகம் (Marlborough College Malaysia)
  • ராபிள்சு அமெரிக்கன் கல்விக்கழகம் (Raffles American School)
  • மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (University of Technology, Malaysia)
  • தெற்கு பல்கலைக்கழகக் கல்லூரி (Southern University College)

இசுகந்தர் புத்திரி காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "JB central municipal council to be upgraded to city council status - Nation - The Star Online". www.thestar.com.my.
  2. "Johor's administrative capital Nusajaya to be renamed Iskandar Puteri". Straits Times (Singapore). 7 December 2015.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "Iskandar Puteri becomes Johor's second city". The Straits Times (in ஆங்கிலம்). 2017-11-22. பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. Kamel, Engku Ahmad (2020-08-24). "Iskandar Malaysia Updates" (PDF). Iskandar Regional Development Authority (IRDA), Malaysian Dutch Business Council.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. "Nusajaya is now Iskandar Puteri - Metro News - The Star Online". www.thestar.com.my.
  6. 5 Sultan Nusantara Melawan Penjajah: Seri Kepahlawanan Raja-raja Nusantara. Sang Surya Media. 2017-12-22.
  7. "The Linkedua refers to the bridge that spans the stretch between Singapore and Malaysia. It extends a total of 47 km from TanjongKupang to Senai in Johor, Malaysia". பார்க்கப்பட்ட நாள் 19 April 2022.
  8. "ArcGIS Web Application". onemap.mbip.gov.my.
  9. "Profil Ahli Majlis | Portal Rasmi Majlis Bandaraya Iskandar Puteri". January 2016.
  10. "Sub-National Statistic P.162 Iskandar Puteri". Department of Statistics Malaysia. Archived from the original on 30 Jan 2024.
  11. "Inside Educity Iskandar: a university partnership in Malaysia". TheGuardian.com. 8 May 2012. பார்க்கப்பட்ட நாள் 29 October 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுகந்தர்_புத்திரி&oldid=4055423" இலிருந்து மீள்விக்கப்பட்டது