உள்ளடக்கத்துக்குச் செல்

ககாங்

ஆள்கூறுகள்: 2°16′N 103°36′E / 2.267°N 103.600°E / 2.267; 103.600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ககாங்
Kahang
 ஜொகூர்
ககாங் நகரம்
ககாங் நகரம்
Map
ககாங் is located in மலேசியா
ககாங்
ககாங்
ஆள்கூறுகள்: 2°16′N 103°36′E / 2.267°N 103.600°E / 2.267; 103.600
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம் குளுவாங் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்548 km2 (212 sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
86700[1]
போக்குவரத்து பதிவெண்கள்J

ககாங் (மலாய்: Kahang; ஆங்கிலம்: Kahang; சீனம்: 加亨) என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டத்தில், குளுவாங் நகரத்திற்கு மேற்கே அமைந்துள்ள நகரமாகும்.[2]

ஜொகூர் மாநிலத்தில் மட்டும் அல்ல; மலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நகரங்களில் ககாங் நகரமும் ஒன்றாக அறியப்படுகிறது. எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்காவிற்கு அருகாமையில் உள்ளதால், இந்த நகரம் பொதுவாக எப்போதுமே அமைதியாகவே காணப்படும்.

பொது

[தொகு]

இந்த நகரம், எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்காவிற்குச் செல்வதற்கு முன், இறுதி நிறுத்தமாக அறியப்படுகிறது. கூட்டரசு சாலை 50 (மலேசியா) (Federal Route 50) என்று அழைக்கப்படும் பத்து பகாட் - குளுவாங் - மெர்சிங் சாலை வழித்தடத்தில் (Jalan Batu Pahat–Kluang–Mersing) அமைந்துள்ளது.[3]

குளுவாங் நகரில் இருந்து 28 மைல் தொலைவில் ககாங் நகரின் மலைப்பகுதியில் ஓர் இயற்கை நெல் பண்ணையும் உள்ளது. சுற்றுலாத் தலமாக மாறிவரும் இந்தப் பண்னையில் இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

ககாங், சுங்கை பெரோ பழங்குடி கிராமத்தில் வாழும் பழங்குடி மக்கள், தங்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கு, கிணறுகளில் கிடைக்கும் சுத்தமான நன்னீரை இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.[4]

ககாங்கில் உள்ள பள்ளிகள்

[தொகு]

தொடக்கப பள்ளிகள்

[தொகு]
  • செரி செடோகோக் தேசியப்பள்ளி
  • முத்தியாரா தேசியப்பள்ளி
  • ககாங் தேசியப்பள்ளி
  • ககாங் கல் 24 தமிழ்ப்பள்ளி
  • ககாங் சீனப்பள்ளி

உயர்நிலைப் பள்ளி

[தொகு]
  • ககாங் உயர்நிலைப்பள்ளி

ககாங் தமிழ்ப்பள்ளி

[தொகு]

ககாங் நகர்ப்புறத்தில் 1 தமிழ்ப்பள்ளி உள்ளது. அதில் 26 மாணவர்கள் பயில்கிறார்கள். 10 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[5]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
ககாங் கல் 24 SJK(T) Kahang Batu 24[6] ககாங் கல் 24 தமிழ்ப்பள்ளி 86700 ககாங் 26 10

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Browse Location - Kahang, Johor - Page 1". Archived from the original on 2023-08-31. பார்க்கப்பட்ட நாள் 2023-08-31.
  2. "Kahang - It is in the hinterland on Route 50 between Mersing and Kluang". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 March 2024.
  3. "Inclusive and sustainable | New Straits Times". 2015-11-26. Archived from the original on 2023-08-31. பார்க்கப்பட்ட நாள் 2023-08-31.
  4. "Residents of Sungai Peroh Indigenous Village, Kahang Kluang Johor, who still use the well as a source of clean water for daily use" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 March 2024.
  5. "Senarai Sekolah Rendah Kementerian Pendidikan Malaysia - MAMPU". archive.data.gov.my (in ஆங்கிலம்). Malaysia Education Ministry. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
  6. "Sjk - Tamil Kahang Batu 24". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ககாங்&oldid=3924279" இலிருந்து மீள்விக்கப்பட்டது