ரேபிட் பேருந்து
Appearance
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | சனவரி 2006 |
தலைமையகம் | Lot 1499, Jalan KB 2/15 Balakong, 43300 Seri Kembangan, Selangor. |
சேவை வழங்கும் பகுதி | கிள்ளான் பள்ளத்தாக்கு, பினாங்கு & குவாந்தான் |
தொழில்துறை | பொது போக்குவரத்துச் சேவை |
சேவைகள் | பேருந்து சேவை |
தாய் நிறுவனம் | பிரசன்னா மலேசியா (Prasarana Malaysia) |
இணையத்தளம் | www.myrapid.com.my |
ரேபிட் பேருந்து (ஆங்கிலம்: Rapid Bus) என்பது மலேசியாவில் உள்ள ஒரு பேருந்து போக்குவரத்துச் சேவை ஆகும். முக்கியமாக கிள்ளான் பள்ளத்தாக்கு (சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் உட்பட), பினாங்கு, குவாந்தான் மற்றும் பேராக் ஆகிய இடங்களில் பொதுப் பேருந்து சேவைகளை வழங்குகிறது.
ரேபிட் பேருந்து என்பது மலேசியாவின் தேசிய உள்கட்டமைப்புக் கழகத்திற்குச் சொந்தமானது. மற்றும் அதன் துணை நிறுவனமான ரேபிட் பேருந்து நிறுவனத்தால் (Rapid Bus Sdn Bhd) இயக்கப்படுகிறது. இது ரேபிட் கே.எல் (Rapid KL) எனும் வணிகப் பெயரில் உள்ள பொது போக்குவரத்து சேவைகளில் ஒன்றாகும்.
இதன் கீழ் உள்ள மற்றொரு பொது போக்குவரத்து சேவை, விரைவு இரயில் ஆகும். ரேபிட் பேருந்து மலேசியாவின் மிகப்பெரிய பொதுப் பேருந்து சேவையாகும்.
பேருந்து சேவைகள்
[தொகு]- ரேபிட் கேஎல் (Rapid KL): கிள்ளான் பள்ளத்தாக்கில் பேருந்து சேவையை இயக்குவதற்கும்; 200-க்கும் மேற்பட்ட வழித் தடங்களைத் தனித்தனியாக இயக்குவதற்கும்; 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் சேவை வழங்குவதற்கும்; விரைவு கே.எல் இரயில் மற்றும் சுரங்கப் பாதைக்கு பேருந்து சேவைகளை வழங்குவதற்கும் பொறுப்பு.
- கோ கேஎல் நகர பேருந்து (Go KL City Bus), மலேசிய நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையத்தால் நிதியளிக்கப்பட்டு இலவச பேருந்து சேவையை வழங்குவதற்கு பொறுப்பு
- ரேபிட் பினாங்கு (Rapid Penang): பினாங்கு தீவுக்கும் தீபகற்ப மலேசியாவின் பெருநிலத்திற்கும் இடையே பேருந்து சேவையை வழங்கும் பொறுப்பு; சுமார் 50 வழித்தடங்கள் உள்ளன.
- ரேபிட் குவாந்தன் (Rapid Kuantan): 12 வழித்தடங்களுடன் பகாங்கின் குவாந்தான் மாநகரில் பேருந்து சேவைகளை வழங்கும் பொறுப்பு.
- ரேபிட் கமுந்திங் (Rapid Kamunting): கமுந்திங் மற்றும் தைப்பிங் இடையே பேருந்து சேவைகளை வழங்கும் பொறுப்பு.[1]
- ரேபிட் மஞ்சோங் (Rapid Manjung): மஞ்சோங் பகுதியில் மார்ச் 2018-இல் செயல்படத் தொடங்கியது
சான்றுகள்
[தொகு]- ↑ "Rapid Kamunting to end service on June 15 after five years of operations". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.