மாச்சாப் பாரு
மாச்சாப் பாரு
Machap Baru | |
---|---|
நாடு | மலேசியா மலாக்கா |
நேர வலயம் | ஒசநே+8 (MST) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
அஞ்சல் குறியீடு | 76100 |
இடக் குறியீடு | 06 |
மாச்சாப் பாரு (ஆங்கிலம், மலாய் மொழி: Machap Baru) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுநகரம். இதைச் சிறுநகரம் என்று அழைப்பதைவிட புதுக்கிராமம் என்றே பலரும் அழைக்கின்றனர். 2011-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை ஏறக்குறைய 5000.[1]
இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலோர் ஹாக்கா சீன மொழியைப் பேசும் சீனர்களாவர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மலாய்க்காரர்கள், இந்தியக் குடும்பங்கள் இருக்கின்றன. பெரும்பாலோர் விவசாயத் தொழிலும், ரப்பர், செம்பனை உற்பத்தித் துறைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கிராம நகரம், மலாக்கா மாநகரத்தில் இருந்து 30 கி.மீ.; அலோர் காஜா நகரத்தில் இருந்து 14 கி.மீ.; ஜாசின் நகரத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.[2] மிக அருகில் இருப்பது டுரியான் துங்கல் சிறு நகரமாகும். 12 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
வரலாறு
[தொகு]1948 ஜூன் 18-ஆம் தேதி, மலாயாவில் அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டது. கிராமப் புறங்களிலும், சிறுநகர்ப் புறங்களிலும் வாழ்ந்த மக்கள் புதுக் கிராமங்களில் குடி அமர்த்தப்பட்டனர். அந்தக் கால கட்டத்தில்தான் இந்த மாச்சாப் பாரு புதுக் கிராமம் உருவாக்கப்பட்டது.
1960-ஆம் ஆண்டு வரையில் மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்களும் உள்நாட்டுத் தலைவர்களும், மாச்சாப் சுற்றுவட்டாரங்களில் கம்யூனிஸ்டுகளைத் ஒழிப்பதில் தீவிரம் காட்டினர். அதன் விளைவாக, மாச்சாப் சுற்றுவட்டாரப் பொது மக்கள் மாச்சாப் பாரு புதுக் கிராமத்தில் குடியேற்றம் செய்யப்பட்டனர்.[3]
வனவிலங்கு சமையல்
[தொகு]வனவிலங்கு சமையல் உணவுகளுக்கு மாச்சாப் பாரு பிரசித்தி பெற்றது.[4] இங்குள்ள சில உணவகங்களில், உடும்பு, காட்டுப் பன்றிகள், காட்டு மான்கள், பாம்புகள் போன்ற வனவிலங்குகள் சமைத்துக் கொடுக்கப்படுகின்றன. தொலைதூர சிங்கப்பூர்ப் பயணிகளும் உள்நாட்டு மக்களும் இந்த உணவுகளுக்காக வருகை தருகின்றனர்.
அருகிவரும் இந்த உயிரினங்கள் மாச்சாப் பாருவின் சுற்றுப்புற காட்டுப் பிரதேசங்களில் அதிகமாகக் கிடைக்கின்றன. சட்டவிரோதமாக நடைபெறும் இந்தச் செயல்களைக் கட்டுப்படுத்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளும் அவ்வப்போது ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மாச்சாப் எனும் பெயரில் மூன்று இடங்கள் உள்ளன. 1. மாச்சாப் 2. மாச்சாப் பாரு 3. மாச்சாப் உம்பு
அருகிலுள்ள நகரங்கள்
[தொகு]அருகிலுள்ள கிராமங்கள்
[தொகு]- கம்போங் பெர்மாத்தாங் ஆயர் பாசிர்
- கம்போங் மாச்சாப் லாமா
- கம்போங் ஆயர் பாசிர்
- கம்போங் ஆயர் பாங்கோங்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Machap Baru is a small town in the Alor Gajah district of Malacca. It has a population of around 5,000 (2011 estimate).
- ↑ Distance from Alor Gajah - Malacca towns
- ↑ The Malayan Emergency was declared on 18 June 1948. Malayan Communist Party (MCP), an outgrowth of the anti-Japanese guerrilla movement which had emerged during the Second World War.
- ↑ To the locals and tourists who come from as far as Singapore, the village is the place to savour wildlife delicacies including wild boar, deer, monitor lizard and snake.[தொடர்பிழந்த இணைப்பு]