கூச்சிங் வடக்கு மாநகராட்சி
கூச்சிங் வடக்கு மாநகராட்சி Kuching North City Hall Dewan Bandaraya Kuching Utara | |
---|---|
![]() கூச்சிங் வடக்கு மாநகராட்சி சின்னம் | |
வகை | |
வகை | மாநகர் மன்றம் |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1988 |
முன்பு | கூச்சிங் நகராட்சி (Kuching Municipal Council) |
தலைமை | |
நகர முதல்வர் | சுனைடி ரிடுவான் Junaidi Reduan 31 ஆகஸ்டு 2019 முதல் |
குறிக்கோள் | |
சுத்தம், அழகு, பாதுகாப்பு Clean, Beautiful & Safe | |
கூடும் இடம் | |
கூச்சிங் வடக்கு மாநகராட்சி தலைமையகம் Bukit Siol, Jalan Semariang, Petra Jaya, 93050 Kuching, Sarawak, Malaysia கூச்சிங், சரவாக் | |
வலைத்தளம் | |
dbku | |
அரசியலமைப்பு | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 |
கூச்சிங் வடக்கு மாநகராட்சி அல்லது கூச்சிங் வடக்கு மாநகராட்சி வாரியம் (மலாய்: Suruhanjaya Dewan Bandaraya Kuching Utara; ஆங்கிலம்: Commission of Kuching North City Hall); (சுருக்கம்: DBKU) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில், கூச்சிங் பிரிவு; கூச்சிங் மாவட்டம்; கூச்சிங் மாநகரத்தின் வடக்குப் பகுதியை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும்.
இந்த மாநகராட்சி மலேசியாவின் சரவாக் மாநில அரசாங்க அதிகார வரம்பின் கீழ் செயல்படுகிறது. 1998 ஆகஸ்டு 1-ஆம் தேதி கூச்சிங் நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு மாநகராட்சி நிறுவப்பட்டது. இதன் அதிகார வரம்பு 369.48 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது.
பொது[தொகு]
கூச்சிங் மாநகராட்சி முதல்வரும்; ஒன்பது கூச்சிங் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்றுவதற்கு, சரவாக் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப் படுகின்றனர்.
இந்த மாநகராட்சியின் நோக்கம்; கூச்சிங் மாநகரத்தின் வடக்குப் பகுதியின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை இந்த மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[1].
வரலாறு[தொகு]
சரவாக்கில் வெள்ளை இராஜா அரசாங்கத்தின் போது பொதுப்பணித் துறையால் கையாளப்பட்ட மன்றத்தின் பல செயல்பாடுகள் இன்றும் இந்தக் கூச்சிங் மாநகராட்சிகளின் பயன்பாடுகளில் உள்ளன.
ஜேம்சு புரூக் (Sir James Brooke); போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியத்தை (Raj of Sarawak) உருவாக்கியவர். அதன் முதல் ராஜாவாக ஆட்சி செய்தவர். இவரின் ஆட்சிக் காலத்தில் தான் ஊராட்சித் திட்டங்கள் அமலுக்கு வந்தன.[2][3]
1921-இல் கூச்சிங் பொதுத் தூய்மை மற்றும் நகராட்சி ஆலோசனைக் குழு (Kuching Sanitary and Municipal Advisory Board) உருவாக்கப்பட்டது. ஒரு புதிய சட்டத்தைத் தொடர்ந்து, அந்த வாரியம் 1 ஜனவரி 1934-இல் கூச்சிங்கிற்கான நகராட்சி ஆணையமாக (Municipal Authority Kuching) மாறியது. பின்னர் கூச்சிங் நகராட்சி வாரியம் என்று அழைக்கப்பட்டது (Kuching Municipal Board).
மாநகரத் தகுதி[தொகு]
கூச்சிங்கை மாநகரத் தகுதிக்கு உயர்த்துவதற்கான விண்ணப்பம் கூச்சிங் வாழ் மக்களின் விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டது. 18 ஜூலை 1984-இல் சரவாக் சட்ட மன்றத்தில் (Dewan Undangan Negeri Sarawak) அதற்குரிய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்திற்கு 1985-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், யாங் டி பெர்துவா சரவாக் ஒப்புதல் வழங்கினார். அதன்பிறகு, அந்தத் தீர்மானம் ஆட்சியாளர்கள் மாநாட்டின் (Conference of Rulers) பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
இரு பகுதிகளாக கூச்சிங்[தொகு]
1986 ஜூலை 3-ஆம் தேதி, தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது. 1988 ஆகஸ்டு 1-ஆம் தேதி, கூச்சிங் நகரம் அதிகாரப்பூர்வமாக ஒரு மாநகரமாகச் செயல்படத் தொடங்கியது.
கூச்சிங் மாநகரம் வடக்கு மற்றும் தெற்கு என 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கூச்சிங் வடக்கிற்கு ஆணையர் (Commissioner); கூச்சிங் தெற்கிற்கு மேயர் (Mayor) என இரு மாநகர்த் தலைவர்களால் நிர்வகிக்கப் படுகின்றது.
கூச்சிங் தெற்குப் பகுதி (Kuching City South) பெரும்பாலும், முன்பு இருந்த கூச்சிங் முனிசிபல் மன்றத்தின் (Kuching Municipal Council - KMC) கீழ் இருந்த பகுதிகளை உள்ளடக்கியது.
கூச்சிங் வடக்குப் பகுதி[தொகு]
கூச்சிங் வடக்குப் பகுதி (Kuching City North) முன்பு இருந்த கூச்சிங் கிராமப்புற மாவட்ட மன்றத்தால் (Kuching Rural District Council - KRDC) நிர்வகிக்கப்பட்ட பிரதேசத்தின் குறிப்பிடத்தக்கப் பகுதிகளை உள்ளடக்கியது.
கூச்சிங் வடக்குப் பகுதி ஓர் ஆணையரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அவருக்கு ஓர் ஆலோசகர் குழு (Board of Advisors) உதவுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Mohd Yahya, N., The local government system in Peninsular Malaysia: with special reference to the structure, management, finance and planning, 1987
- ↑ Sahari, Suriani; McLaughlin, Tom. "History of the people from the Sarawak River Valley". https://www.academia.edu/37314768.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
மேலும் காண்க[தொகு]
- கூச்சிங்
- கூச்சிங் பிரிவு;
- கூச்சிங் மாவட்டம்
- மலேசியாவின் உள்ளாட்சி மன்றங்கள்
- மலேசிய உள்ளாட்சி மன்றங்களின் பட்டியல்