கோலாகங்சார் மாவட்டம்

ஆள்கூறுகள்: 4°45′N 100°55′E / 4.750°N 100.917°E / 4.750; 100.917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராக்
மலேசியா
கோலாகங்சார் மாவட்டம்
Daerah Kuala Kangsar
கோலாகங்சார் மாவட்டம் அமைவிடம் பேராக்
கோலாகங்சார் மாவட்டம் அமைவிடம் பேராக்
ஆள்கூறுகள்: 4°45′N 100°55′E / 4.750°N 100.917°E / 4.750; 100.917
தொகுதிகோலாகங்சார்
பெரிய நகரம்கோலாகங்சார்
நகராட்சிகோலாகங்சார் மாவட்ட மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிசுல்ஹிசாம் அகமட் சுக்கோரிஸ்
பரப்பளவு
 • மொத்தம்2,563.61 km2 (989.82 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்97,167
 • Estimate (2015)1,63,800
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு+6-05
வாகனப் பதிவுA

கோலாகங்சார் மாவட்டம் (Daerah Kuala Kangsar) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். கோலாகங்சார் மாவட்டத்தின் எல்லைகளாக மேற்கில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்; வடக்கில் உலு பேராக் மாவட்டம்; கிழக்கில் கிளாந்தான் மாநிலத்தின் குவா மூசாங் மாவட்டம், தெற்கே கிந்தா மாவட்டம், பேராக் தெங்ஙா மாவட்டம்; தென்மேற்கில் மஞ்சோங் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.[1]

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

கோலாகங்சார் மாவட்ட வரைப்படம்

கோலாகங்சார் மாவட்டம் 8 முக்கிம்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.

 • செகார் காலா (Chegar Galah)
 • கம்போங் புவாயா (Kampung Buaia)
 • கோத்தா லாமா கானான் (Kota Lama Kanan)
 • கோத்தா லாமா கீரி (Kota Lama Kiri)
 • லூபோக் மெர்பாவ் (Lubuk Merbau)
 • புலாவ் காமிரி (Pulau Kamiri)
 • சாயோங் (Sayong)
 • செங்காங் (Senggang)
 • சுங்கை சிப்புட் (Sungai Siput)

மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்[தொகு]

பின்வரும் கோலாகங்சார் மாவட்ட மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[2]

கோலாகங்சார் மாவட்ட மக்கள் இனவாரியாக: 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு
இனம் மக்கள் தொகை விழுக்காடு
மலாய்க்காரர்கள் 100,206 64.1%
சீனர்கள் 34,796 22.3%
இந்தியர்கள் 21,028 13.5%
மற்றவர்கள் 265 0.2%
மொத்தம் 156,295 100%

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கோலாகங்சார் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.

நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P61 பாடாங் ரெங்காஸ் முகமட் நஸ்ரி அப்துல் அசீஸ் பாரிசான் நேசனல் (அம்னோ)
P62 சுங்கை சிப்புட் கேசவன் சுப்பிரமணியம் பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்.)
P67 கோலாகங்சார் மஸ்துரா முகமட் யாசிட் பாரிசான் நேசனல் (அம்னோ)

பேராக் மாநிலச் சட்டமன்றம்[தொகு]

பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் கோலாகங்சார் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P61 N19 செண்டரோ ஜைனுன் முகமட் நோர் பாரிசான் நேசனல் (அம்னோ)
P61 N20 லூபோக் மெர்பாவ் ஜுரிஜ் ஜலாலுடின் பாரிசான் நேசனல் (அம்னோ)
P62 N21 லிந்தாங் சுல்கிப்லி ஹ்ச்ருண் பாரிசான் நேசனல் (அம்னோ)
P62 N22 ஜாலோங் லோ சு யீ பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)
P67 N34 புக்கிட் சாண்டான் மாஸ்லின் சாம் ரஸ்மான் பாரிசான் நேசனல் (அம்னோ)
P67 N35 மானோங் முகமட் சுராய்மி ரசாலி பாரிசான் நேசனல் (அம்னோ)

மேலும் காண்க[தொகு]

மலேசிய மாவட்டங்கள்

மேற்கோள்கள்[தொகு]

 1. "The Kuala Kangsar District is a district in Perak, Malaysia. Kuala Kangsar shares its borders with Larut, Matang and Selama at the west, Hulu Perak at the north, Gua Musang of Kelantan at the east, Kinta at the south, Perak Tengah and Manjung at the southwest". Archived from the original on 2021-01-24. பார்க்கப்பட்ட நாள் 2021-05-05.
 2. மலேசியா 2010 மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kuala Kangsar District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலாகங்சார்_மாவட்டம்&oldid=3760121" இலிருந்து மீள்விக்கப்பட்டது