சுங்கை
ஆள்கூறுகள்: 4°00′N 101°19′E / 4.000°N 101.317°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
மாவட்டம் | பத்தாங் பாடாங் மாவட்டம் |
உருவாக்கம் | 1800 |
பரப்பளவு | |
• மொத்தம் | 698 km2 (269 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 32,700 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.mdtapah.gov.my/ |
சுங்கை (ஆங்கிலம்: Sungkai; மலாய்: Sungkai; சீனம்: 打扪) என்பது மலேசியா, பேராக், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறுநகரம். ஈப்போ கோலாலம்பூர் மாநகரங்களுக்கு இடையில், மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியில் இந்த நகரம் அமைந்து உள்ளது.[1]
வடக்கே பீடோர் நகரம். தெற்கே துரோலாக், பீக்காம், சிலிம் ரீவர், தஞ்சோங் மாலிம் நகரங்கள். கிழக்கே சங்காட் ஜோங், தெலுக் இந்தான் நகரங்கள் உள்ளன. ஈப்போ மாநகரத்தில் இருந்து 69 கி.மீ.; பீடோர் நகரத்தில் இருந்து 11 கி.மீ.; தொலைவில் சுங்கை நகரம் அமைந்து உள்ளது.
வரலாறு
[தொகு]இந்தப் பகுதியின் காட்டுக்குள் செசுங்கை (Sesungkai) எனும் மரங்கள் நிறைந்து உள்ளன. அந்த மரத்தின் பெயரில் இருந்து இந்த இடத்திற்கு சுங்கை எனும் பெயர் வந்து இருக்கலாம் என்று அறியப் படுகிறது. இந்த நகரம் 1800-ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப் பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கிடைத்து உள்ளன.[2]
சுங்கை வட்டாரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்
[தொகு]- சுங்கை தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Sungkai)
52 மாணவர்கள்: பெண்கள் 32; ஆண்கள் 20. ஆசிரியர்கள் 7.[3]
- சுங்கை தமிழ்ப்பள்ளி (SJKT Sungkai)
141 மாணவர்கள்: பெண்கள் 75; ஆண்கள் 66.
- பீக்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Bikam)
22 மாணவர்கள்: பெண்கள் 16; ஆண்கள் 6.
- சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJKT Ladang Sungai Kruit)
20 மாணவர்கள்: பெண்கள் 9; ஆண்கள் 11.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ SUNGKAI yang terletak dalam daerah Batang Padang, Perak dan wujud sejak tahun 1800-an berasal daripada nama pokok Sesungkai atau Sungkai yang tumbuh meliar di kawasan ini.
- ↑ SUNGKAI is an evergreen or deciduous shrub or small to medium-sized tree up to 20 m tall. Peronema canescens is common in secondary forests and in open country.
- ↑ சுங்கை தோட்டத் தமிழ்ப்பள்ளி