பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தொகுதி
பாடாங் ரெங்காஸ் (P061) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Padang Rengas (P061) Federal Constituency in Perak | |
மாவட்டம் | கோலாகங்சார் மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 38,686 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | பாடாங் ரெங்காஸ் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | பாடாங் ரெங்காஸ், சங்காட் ஜெரிங், கோலாகங்சார், புக்கிட் கந்தாங், தைப்பிங், கமுந்திங், செமாங்கோல், கோலா சபெத்தாங் |
பரப்பளவு | 395 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அசாரி அசன் (Azahari Hasan) |
மக்கள் தொகை | 38,294 (2020) [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Padang Rengas; ஆங்கிலம்: Padang Rengas Federal Constituency; சீனம்: 硝山国会议席) என்பது மலேசியா, பேராக், கோலாகங்சார் மாவட்டத்தில் (Kuala Kangsar District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P061) ஆகும்.[7]
பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பாடாங் ரெங்காஸ்
[தொகு]பாடாங் ரெங்காஸ் நகரம் பேராக் மாநிலத்தில் கோலாகங்சார் மாவட்டத்தில் உள்ள நகரம். இந்த நகரத்திற்கு மிக அருகிலுள்ள நகரம் கோலாகங்சார் ஆகும்.
பாடாங் ரெங்காஸ் நகரம்; கோலாகங்சார் - தைப்பிங் நகரங்களுக்கு இடையிலான ஒரு முக்கியமான துணை நகரமாக விளங்கி வருகிறது. இந்த நகருக்கு அருகில் புக்கிட் பெராபிட் ராபிட் (Bukit Rabit) எனும் இடத்தில் 1897-ஆம் ஆண்டில் ஒரு தொடருந்துச் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டது.[8]
மலைச் சுற்றுலா வளாகம்
[தொகு]தற்போது வரை, பாடாங் ரெங்காஸ் மற்றும் குனோங் பொண்டோக் ஆகியவை மிகவும் முக்கியமான நிலத் தடங்களாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் அவை கோலாகங்சார் மற்றும் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் ஆகியவற்றின் இடையிலான எல்லைகளாக அமைகின்றன.[8]
இங்கு ஒரு மலைச் சுற்றுலா வளாகம் உள்ளது. அதன் பெயர் குனோங் பொண்டோக் சுற்றுலா வளாகம். இந்த மலைக்கு அருகில் சுண்ணாம்புக் கற்கள் தோண்டி எடுக்கப் படுகின்றன.
ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் செழிப்பாக வளர்ந்திருந்த ரெங்காஸ் மரங்களின் பெயரில் இருந்து பாடாங் ரெங்காஸ் என்ற பெயர் பெறப்பட்டதாகக் அறியப்படுகிறது.
பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தொகுதி
[தொகு]பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் கோலா கங்சார் மக்களவைத் தொகுதியில் இருந்து பாடாங் ரெங்காஸ் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P051 | 1974–1978 | அப்துல் அசீஸ் இயோப் (Abdul Aziz Yeop) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | உமார் இசுமாயில் (Umar Ismail) | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | சைதீன் மாட் பியா (Saidin Mat Piah) | ||
தாசேக் செண்டெரோ தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது | ||||
செண்டெரோ தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P061 | 2004–2008 | முகமது நசுரி அப்துல் அசீசு (Mohamed Nazri Abdul Aziz) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | அசாரி அசான் (Azahari Hasan) |
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) |
பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
[தொகு]பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
38,686 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
30,316 | 77.23% | ▼ - 5.68% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
29,878 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
68 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
370 | ||
பெரும்பான்மை (Majority) |
3,046 | 10.20% | + 0.12 |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் நேசனல் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [9] |
பாடாங் ரெங்காஸ் மக்களவை வேட்பாளர் விவரங்கள்
[தொகு]வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
அசாரி அசன் (Azahari Hasan) |
பெரிக்காத்தான் | 29,878 | 12,931 | 43.28% | + 43.28% | |
முகமது அரிப் அப்துல் மஜீது (Mohd Arrif Abdul Majid) |
பாரிசான் | - | 9,885 | 33.08% | - 8.42 % ▼ | |
முகமது கமில் அப்துல் முனிம் (Muhammad Kamil Abdul Munim) |
பாக்காத்தான் | - | 7,062 | 23.64% | - 7.78% ▼ |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூன் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ 8.0 8.1 "Padang Rengas has been an important Kuala Kangsar-Taiping route since long ago, a railway tunnel was built near this town at Bukit Berapit in 1897". பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.
- ↑ "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.
மேலும் காண்க
[தொகு]- பாடாங் ரெங்காஸ்
- தைப்பிங்
- கோலாகங்சார்
- புக்கிட் கந்தாங்
- சங்காட் ஜெரிங்
- கமுந்திங்
- செமாங்கோல்
- கோலா சபெத்தாங்