உள்ளடக்கத்துக்குச் செல்

இரானாவ் மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°58′00″N 116°41′00″E / 5.96667°N 116.68333°E / 5.96667; 116.68333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரானாவ் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரானாவ் மாவட்டம்
Ranau District
Daerah Ranau
இரானாவ் மாவட்ட அலுவலகம்
இரானாவ் மாவட்ட அலுவலகம்

சின்னம்
இரானாவ் மாவட்டம் is located in மலேசியா
இரானாவ் மாவட்டம்
      இரானாவ் மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°58′00″N 116°41′00″E / 5.96667°N 116.68333°E / 5.96667; 116.68333
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுமேற்கு கரை பிரிவு
தலைநகரம்இரானாவ்
அரசு
பரப்பளவு
 • மொத்தம்3,608.51 km2 (1,393.25 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்1,18,092
இணையதளம்ww2.sabah.gov.my/md.rnu/
ww2.sabah.gov.my/pd.rnu/
ரானாவ் மாவட்டத்தின் வரைபடம்

இரானாவ் மாவட்டம்; (மலாய்: Daerah Ranau; ஆங்கிலம்: Ranau District) என்பது மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் இரானாவ் நகரம் (Ranau Town).[1]

சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள இதர மாவட்டங்களான கோத்தா பெலுட் மாவட்டம் (Kota Belud District); கோத்தா கினபாலு மாவட்டம் (Kota Kinabalu District), பாப்பார் மாவட்டம் (Papar District), பெனாம்பாங் மாவட்டம் (Penampang District); புத்தாத்தான் மாவட்டம் (Putatan District); துவாரான் மாவட்டம் (Tuaran District) ஆகிய மாவட்டங்களுடன் ஒரு பகுதியாக இந்த ரானாவ் மாவட்டமும் அமைந்து உள்ளது.[1]

பொது

[தொகு]

இரானாவ் மாவட்டம் கோத்தா கினபாலு மாநகரத்திற்கு கிழக்கே 108 கி.மீ. (67 மைல்); சண்டக்கான் (Sandakan) நகரத்திற்கு மேற்கே 227 கி.மீ. (141 மைல்) தொலைவில் உள்ளது. இந்த மாவட்டம் முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட மாவட்டம் ஆகும்.

2010-ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ரானாவ் மாவட்டத்தின் மக்கள்தொகை 94,092; டூசுன் (Dusun People) இன சமூகத்தவர் பெருமபான்மையோர் வாழ்கின்றனர்.

மலைப்பாங்கான புவியியல்

[தொகு]

இரானாவ் மாவட்டம் அதன் மலைப்பாங்கான புவியியல் அமைப்பிற்காகப் பெயர் பெற்றது. சபா மாநிலத்தில், இந்த மாவட்டம்தான் அதிகமான மலையகக் காய்கறிகளை உற்பத்தி செய்கிறது.[2]

கடல் மட்டத்தில் இருந்து 1,176 மீட்டர் உயரத்தில் இருப்பதால், சுற்றுலாத் துறையும்; மேட்டு நில விவசாயமும் முக்கிய தொழில்களாக உள்ளன. 2009-ஆம் ஆண்டிலேயே, அதன் சுற்றுலாத் தலங்கள் அரை மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளன.[3]

சுற்றுலா தலங்கள்

[தொகு]
  • கினபாலு மலை - (Mount Kinabalu)
  • கினபாலு பூங்கா - (Kinabalu National Park)
  • போரிங் சுடுநீர் ஊற்றுகள் - (Poring Hot Springs)
  • குண்டசாங் போர் நினைவுச்சின்னம் - (Kundasang War Memorial)
  • டெத் மார்ச் டிரெயில் - (Sandakan Death March Trail)
  • மெசிலாவ் - (Mesilau)
  • சபா தேயிலை தோட்டம் - (Sabah Tea Garden)

யுனெஸ்கோ அங்கீகாரம்

[தொகு]
ரானாவ் நகரில் உள்ள அர்-ரஹ்மான் மசூதியின் பழைய முன் முகப்பு. 2015-ஆம் ஆண்டு நிலநடுக்கத்தின் காரணமாக மீண்டும் கட்டப்பட்டது.

இரானாவ் மாவட்டம் வளமான வெப்பமண்டல தாழ்நிலப் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த மாவட்டம் மழைக்காடுகள் பகுதியில் இருப்பதால், இங்கு பல்வேறான வெப்ப மண்டலத் தாவரங்கள் (Pan-Tropical Flora); மலைகள் சார்ந்த புதர்க்காடுகள் உள்ளன. சீனா, ஆஸ்திரேலியா மற்றும் இமயமலை போன்ற இடங்களில் உள்ள தாவர இனங்களும் இங்கு ஏராளமாக உள்ளன.[8]

கினபாலு பூங்கா (Kinabalu National Park), யுனெஸ்கோ (UNESCO) எனும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் தென்கிழக்கு ஆசியாவிற்கான தாவர பன்முகத்தன்மையின் மையமாக (Centre of Plant Diversity) அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் டிசம்பர் 2000-இல், கினபாலு பூங்கா யுனெஸ்கோவால் மலேசியாவின் முதல் உலக பாரம்பரிய தளமாகவும் (Malaysia's first World Heritage Site) அறிவிக்கப்பட்டது.[4]

மாமுட் தாமிரச் சுரங்கம்

[தொகு]
மாமுட் தாமிரச் சுரங்கத்தினால் ஏற்பட்டுள்ள ஏரி.

1999-இல், மலேசியாவின் மிகப்பெரிய சுரங்கத் திட்டமான மாமுட் தாமிரச் சுரங்கம் (Mamut Copper Mine) அதன் செயல்பாடுகள் நிறுத்துவதற்கு முன்பு, ரானாவ் மாவட்டம் தான் அதன் தாயகமாக இருந்தது. அந்தச் சுரங்க நிறுவனம் அதன் சுரங்கச் செயல்பாடுகளின் உச்சத்தில் இருந்த போது, ரானாவ் ஒரு செழிப்பான நகரமாக மாறியது.[5][6]

அந்தச் சுரங்க நிறுவனம் லிவாகு ஆற்றின் (Liwagu River) குறுக்கே ரானாவ் பாலத்தை (Ranau Bridge) கட்டியது; ரானாவ் குழிப்பந்தாட்ட மைதானம் (Ranau Golf Course); பள்ளி கட்டிட நிதி, மற்றும் பேருந்துகள் வாங்குவதற்கான நன்கொடைகளையும் வழங்கியது.[7]

ரானாவ் நகரம்

[தொகு]

இரானாவ் நகரில் டூசுன் சமூகத்தினர் பெரும்பான்மையினர் வசிக்கின்றனர். இரானாவ் நகர்ம் அதன் மலைப்பகுதிக் காய்கறிகள் மற்றும் நறுமண உள்ளூர் தேயிலைக்குப் பிரபலமானது.[8]

தென்கிழக்கு ஆசியாவின் மிக உயரமான மலையான கினபாலு மலைத் தொடரின் அடிவாரப் பகுதியில்; கோத்தா கினபாலு நகரில் இருந்து 124 கி.மீ. தொலைவில் இரானாவ் அமைந்து உள்ளது.[9]

சொல் பிறப்பியல்

[தொகு]

ரானாவ் (Ranau) என்றால் ஈரமான நெல் வயல் என்று பொருள். பரந்த பள்ளத்தாக்கின் வளமான சமவெளிகளில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து இருக்க வேண்டும். அதனால் அந்தப் பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

முன்பு காலத்தில் ரானாவ் நகரைச் சுற்றியுள்ள மலைகளில் டூசுன் மக்கள் வாழ்ந்து உள்ளனர். மலைகளின் சரிவுகளில் நெல் பயிரிட்டுள்ளார்கள். ரானாவுக்கு அருகில் குண்டசாங் நகரம் உள்ளது. இந்த நகரைச் சபாவின் காய்கறி மூலதனம் என்றும் அழைக்கிறார்கள். [10]

மக்கள் தொகையியல்

[தொகு]
ரானாவ் மக்கள் தொகையியல்
2010 கணக்கெடுப்பு[11] ரானாவ் குண்ட்சாங் ரானாவ் மாவட்டம்
மொத்த மக்கள் 8,970 5,008 80,114
கடசான்டூசுன் 6,487 3,457 70,230
பூர்வீக மலாய் 352 129 479
பஜாவு 250 143 696
இதர பூமிபுத்திரா 764 188 2,807
சீனர் 670 133 718
இந்தியர் 24 3 32
மலேசியர் அல்லாதவர் 288 856 4,513
ஆண்டு வாரியாக மக்கள் தொகை
ஆண்டு மக்கள் தொகை
2000[12] 70,649 -
2010 94,092 +33.2

2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ரானாவ் மாவட்டத்தில் 94,092 பேர் வசித்தனர். அங்கு 14,207 வீடுகள் மற்றும் 15,514 குடியிருப்புகள் இருந்தன. மக்கள் தொகை அடர்த்தி ஒரு கி.மீ.2க்கு (68.5/ சதுர மைல்) 26 பேர்.[13]

செயின்ட் பீட்டர் கிளேவர் கத்தோலிக்க தேவாலயம்

ரானாவ் மாவட்டத்தின் இன அமைப்பு

மலேசியர்கள் அல்லாத குடிமக்கள், முக்கியமாக இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்சு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பெரிய பண்ணைகள் மற்றும் தோட்டங்களில் தொழிலாளர்களாகப் பணிபுரிகின்றனர்.

மக்கள் தொகை பரவல்

[தொகு]
ரானாவ் வா சான் சோன் சூ குங் பௌத்த ஆலயம்

ரானாவ் மாவட்டத்தில் மக்கள் தொகை பரவலாகப் பரவியுள்ளது; ஆண்கள் 48,341 (51.4%); பெண்கள் 45,751 (48.6%). ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 106 ஆண்கள் இருந்தனர்.[59]

  • 15 வயதுக்கு உட்பட்டவர்கள் 39.1%;
  • 15 முதல் 24 வரை 20.1%;
  • 25 முதல் 44க்கு 25%;
  • 45 முதல் 64 வரை 11.8%;
  • 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3.9%;

வரலாறு

[தொகு]

சண்டாக்கான் மரண அணிவகுப்பு

[தொகு]
24 அக்டோபர் 1945-இல் சண்டாக்கான் போர்க் கைதிகள் முகாம்.

ரானாவ் நகருக்கு அருகில் ஆஸ்திரேலிய போர் நினைவுச்சின்னம் உள்ளது. இந்த நினைவுச் சின்னம் ஆஸ்திரேலியப் போர்க் கைதிகளின் மரண அணிவகுப்பைக் குறிக்கிறது.

ஜப்பானியரின் ஆட்சிக் காலத்தில் சபா, சண்டாக்கான் சிறைச்சாலையில் இருந்து, 260 கி.மீ. தொலைவில் இருந்த ரானாவ் நகரத்திற்கு, ஆஸ்திரேலியப் போர்க்கைதிகள் கால்நடையாக நடக்க வைக்கப் பட்டார்கள். அந்த நிகழ்ச்சியைச் சண்டாக்கான் மரண அணிவகுப்பு (Sandakan Death Marches) என்று அழைக்கிறார்கள். அந்த மரண அணிவகுப்பில் 2300 பேர் இறந்தார்கள்.

ரானாவ் சிறைச்சாலை

[தொகு]

ஜப்பானியர்களின் ஆட்சி காலத்தில் சண்டக்கான் நகரில் பிரித்தானிய, ஆஸ்திரேலியப் போர்க் கைதிகளுக்காக ஒரு சிறைச்சாலை உருவாக்கப்பட்டது. அந்தச் சிறைச்சாலையில் இருந்த கைதிகள் மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்பட்டனர்.[14]

கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக அந்தச் சிறைச்சாலை, 260 கி.மீ. தொலைவில் இருந்த ரானாவ் உள் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அப்போது சண்டாக்கான் சிறைச்சாலையில் 2504 கைதிகள் இருந்தனர். ஏற்கனவே பல ஆயிரம் பேர், சப்பானியர்களின் சித்ரவதைகளினால் இறந்து விட்டனர். எஞ்சியவர்கள் இரானாவ் எனும் இடத்திற்கு கால்நடையாக நடக்க வைக்கப் பட்டனர்.[15]

அந்த நிகழ்ச்சியைச் சண்டாக்கான் மரண அணிவகுப்பு என்று அழைக்கிறார்கள். போர்க் கைதிகளில் ஆறே ஆறு பேர்தான் தப்பிப் பிழைத்தனர். மற்றவர்கள் அனைவரும் நடைபாதையிலேயே இறந்து போயினர்.[16]

மேற்கோள்

[தொகு]
  1. 1.0 1.1 "Ranau District is located in the valley of Mount Kinabalu which has an area of approximately 2,987.49 square KM. Seen in terms of geographical position (Map of Sabah), the Crocker range and Mount Kinabalu are between the Ranau district and the West Coast area, Kota Belud and Kota Merudu, while the separator with the east coast area is Sungai Sugut and Sungai Labuk". ppdranau.edublogs.org. பார்க்கப்பட்ட நாள் 10 January 2023.
  2. "Ranau meteorological station to start operations in January". The Borneo Post. 8 November 2011. Retrieved 6 February 2012.
  3. "Destinations: Places To Go - Ranau" பரணிடப்பட்டது 2012-02-03 at the வந்தவழி இயந்திரம்
  4. "Kinabalu Park". World Heritage Centre, United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO). Retrieved 6 February 2012.
  5. Mamut Copper Mining Sdn. Bhd. 1996, ப. 6
  6. Chiew, Hilary. 2 October 2007. "Poisonous wasteland" பரணிடப்பட்டது 20 மார்ச்சு 2011 at the வந்தவழி இயந்திரம். The Star (Malaysia), Retrieved 6 February 2012.
  7. Mamut Copper Mining Sdn. Bhd. 1996, ப. 24
  8. "Ranau is located in the West Coast of the Malaysian state of Sabah and make up a majority of the Dusun community. Ranau is famous for it's highland vegetables and aromatic local tea brand". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  9. "Ranau terletak di kaki Gunung Kinabalu iaitu gunung yang tertinggi di Asia Tenggara. Perjalanan darat dari Kota Kinabalu ke Ranau mengambil masa 2 jam yang mana jaraknya adalah 124 KM. Hospital Ranau terletak 2 KM dari Pekan Ranau". hranau.moh.gov.my. பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  10. "Ranau literally means 'wet-rice field' and the fertile plains of this vast valley must have been inhabited for a long time. The surrounding hills have also been inhabited by Dusun but they would plant 'dry rice' on the slopes of the hills". www.flyingdusun.com. பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  11. Department of Statistics, Malaysia. (December 2011). "Table 11.1: Total population by ethnic group, Local Authority area and state, Malaysia, 2010 (p. 137). Population Distribution by Local Authority Areas and Mukims, 2010. Retrieved 5 February 2012
  12. “Population distribution of Ethnicity and Religion” பரணிடப்பட்டது 2020-02-02 at the வந்தவழி இயந்திரம். Ranau District Office. Retrieved 5 February 2012
  13. Department of Statistics, Malaysia. (December 2011). "Table 11.3: Total population by sex, households and living quarters, Local Authority area and state, Malaysia, 2010 (cont'd) (p. 150). Population Distribution by Local Authority Areas and Mukims, 2010. Retrieved 5 February 2012
  14. "Sandakan-Ranau POW Death Marches; The memorial was unveiled on 27 August 2009, exactly 64 years years after the last 15 POWs were murdered, five of them at a spot very close to this site". lynettesilver.com. 4 January 2012. பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  15. Laden, Fevered, Starved பரணிடப்பட்டது 2006-12-17 at the வந்தவழி இயந்திரம் Sandakan POW Camp, 1942–1944
  16. The Marches பரணிடப்பட்டது 2017-03-15 at the வந்தவழி இயந்திரம் Australia's War, 1939–1945
  • Mamut Copper Mining Sdn. Bhd. (1996). A Responsible Approach To Resource Development. Paragraphics.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரானாவ்_மாவட்டம்&oldid=4066530" இலிருந்து மீள்விக்கப்பட்டது