தெனோம் மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°8′00″N 115°57′00″E / 5.13333°N 115.95000°E / 5.13333; 115.95000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெனோம் மாவட்டம்
Tenom District
சபா
Tenom District Council
தெனோம் மாவட்ட அலுவலகம்.
Location of தெனோம் மாவட்டம்
தெனோம் மாவட்டம் is located in மலேசியா
தெனோம் மாவட்டம்
தெனோம் மாவட்டம்
      தெனோம் மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°8′00″N 115°57′00″E / 5.13333°N 115.95000°E / 5.13333; 115.95000
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுஉட்பகுதி
தலைநகரம்தெனோம்
பரப்பளவு
 • மொத்தம்2,409 km2 (930 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்55,553
மலேசிய அஞ்சல் குறியீடு899XX
மலேசியத் தொலைபேசி எண்087XXXXXX
இணையதளம்www.sabah.gov.my/md.tnm/
www.sabah.gov.my/pd.tnm/

தெனோம் மாவட்டம்; (மலாய்: Daerah Tenom; ஆங்கிலம்: Tenom District) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். தெனோம் மாவட்டத்தின் தலைநகரம் தெனோம் (Tenom Town).[1]

தெனோம் நகரம், கோத்தா கினபாலுவில் இருந்து தெற்கே 176 கி.மீ. தொலைவிலும்; சபாவின் பிரபலமான இடங்களில் ஒன்றான லாங் பாசியா (Long Pasia) நகரில் இருந்து வடக்கே 145 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[2]

பொது[தொகு]

தெனோம் மாவட்டத்தின் வரைபடம்

சபா, உட்பகுதி பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

காளிமாறன் திருவிழா[தொகு]

அங்குள்ள மூருட் (Murut) பழங்குடி மக்கள் ஆண்டுதோறும் காளிமாறன் திருவிழாவை (Kalimaran) தெனோம் நகரில் கொண்டாடுகிறார்கள். தெனோம் நகரம் அதன் காபிக்கு பிரபலமானது. ரப்பர் தொழிலுக்கு அடுத்தபடியாக தெனோமின் பொருளாதாரத்தில் காபி தொழில் இரண்டாவது பெரிய பங்களிப்பாக உள்ளது.

கோத்தா கினபாலுவில் இருந்து தெனோம் செல்வதற்கு சபா மாநில தொடருந்து சேவையை (Sabah State Railway) பயன்படுத்தலாம்.

சொற்பிறப்பியல்[தொகு]

தெனோம் பகுதி, முன்னர் காலத்தில் போர்ட் பர்ச் (Fort Birch) என்று அழைக்கப்பட்டது. பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் (British North Borneo Company) ஆளுநர் எர்னசுடு உட்போர்ட் பர்ச் (North Borneo Governor Ernest Woodford Birch) என்பவரின் பெயர் அந்த நகருக்கு வைக்கப்பட்டது.

1904-ஆம் ஆண்டில் தெனோம் தொடருந்து நிலையத்தில் (Tenom Railway Station) இருந்து; பியூபோர்ட் தொடருந்து நிலையம் (Beaufort Railway Station), மெலாலாப் (Beaufort Railway Station) தொடருந்து நிலையம்; ஆகிய நிலயங்களுக்கு வடக்கு போர்னியோ தொடருந்து பாதை (North Borneo Railway Line) முடிந்ததைத் தொடர்ந்து, போர்ட் பர்ச் என்பது "தெனோம்" என மறுபெயரிடப்பட்டது.

வரலாறு[தொகு]

இந்த மாவட்டம் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தால் 1900-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டது. அதன் முதல் மாவட்ட அதிகாரியாக எம்.சி.எம். வீடன் (M.C.M. Weedon) என்பவர் நியமிக்கப்பட்டார்.

பின்னர் பிரித்தானியர்களால் சாப்போங் தோட்டம் (Sapong Estate) மற்றும் மெலாலாப் தோட்டம் (Melalap Estate) திறக்கப் பட்டதும் தெனோம் நகரமும் வளர்ச்சி காணத் தொடங்கியது. இரண்டு தோட்டங்களும் காபி தோட்டங்கள் ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

தெனோம் மாவட்டத்தின் மக்கள் தொகையில் (52%) மூருட் (Murut) பழங்குடி மக்கள் மிக அதிகமாக வாழ்கின்றனர். அதே வேளையில் கடசான்-டூசுன் (Kadazandusun) பழங்குடி மக்கள் (12%); லுன் டாயே (Lundayeh) பழங்குடி மக்கள் (5%); மலாய்க்காரர்கள் (8%); மற்றும் இந்தோனேசியர்கள், பிலிப்பினோக்காரர்களும் சிறுபான்மையினராக உள்ளனர்.[2]

சீனா, குவாங்டொங் (Guangdong) மாநிலத்தில் உள்ள லாங்சுவான் (Longchuan) பகுதியில் இருந்து இங்கு குடியேறிய சீனர்களின் வழித்தோன்றல்களின் வழியாக ஏறக்குறைய 5,000 சீனர்கள் உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் ’ஹக்கா’ (Hakka) இனக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tenom is a small town with a main street that cuts through the town centre, and everything you need is within walking distance. The town is surrounded by rolling hills and sits on a plain nurtured by Padas and Pagalan Rivers". MySabah.com. 1 February 2022. பார்க்கப்பட்ட நாள் 13 January 2023.
  2. 2.0 2.1 "Tenom is situated approximately 145 kilometres away from the state capital and is unofficially the capital and hometown of the Murut ethnic". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 January 2023.

மேலும் படிக்க[தொகு]

மேலும் காண்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெனோம்_மாவட்டம்&oldid=3637356" இலிருந்து மீள்விக்கப்பட்டது