லேடாங்
லேடாங் Ledang | |
---|---|
ஆள்கூறுகள்: 2°16′N 102°33′E / 2.267°N 102.550°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | தங்காக் மாவட்டம் |
தொகுதி | பாகோ மக்களவைத் தொகுதி |
லேடாங் என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் முந்தைய மாவட்டம் ஆகும். தற்போது அந்த மாவட்டம் தங்காக் மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.
லேடாங் மாவட்டத்தின் முக்கிய நகரம் தங்காக். இந்த தங்காக் நகரம், தஞ்சோங் அகாஸ், கீசாங், சுங்கை மத்தி, செரோம், சாகில் மற்றும் புக்கிட் கம்பிர் என்னும் நகரங்களை உள்ளடக்கியது. முற்காலத்தில் மூவார் ஆற்றின் தென்பகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட மூவார் மாவட்டத்தின் வடபகுதியாக லேடாங் மாவட்டம் இருந்தது.[1]
லேடாங் மலை
[தொகு]மலேசியாவில் பிரபலமான குனோங் லேடாங், லேடாங் பகுதியில்தான் உள்ளது. தங்காக் நகரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள லேடாங் மலை வரலாற்றுப் புகழ் பெற்றது. லேடாங் மலையை தங்காக் நகரில் இருந்து தெளிவாகப் பார்க்கலாம். இந்த மலையைத் தமிழில் லேடாங் மலை என்று அழைக்கிறார்கள்.[2]
மலையேறிகள், பறவைப் பார்வையாளர்கள், இயற்கை விரும்பிகளின் சொர்க்கபுரியாக விளங்கும் லேடாங் மலையில், மிதவெப்ப மண்டல காடுகளின் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம். இங்கே பல சிறிய பெரிய நீர்வீழ்ச்சிகளும் உள்ளன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ledang set to become Johor's newest district". The Star Online. Star Media Group Berhad. 1 June 2008. பார்க்கப்பட்ட நாள் 24 July 2016.
- ↑ Gunung Ledang National Park lies just inside Johor's border with Melaka state.