துவாரான் மாவட்டம்

ஆள்கூறுகள்: 6°11′00″N 116°14′00″E / 6.18333°N 116.23333°E / 6.18333; 116.23333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவாரான் மாவட்டம்
Tuaran District
சபா
துவாரான் மாவட்ட அலுவலகம்
துவாரான் மாவட்ட அலுவலகம்
Location of துவாரான் மாவட்டம்
துவாரான் மாவட்டம் is located in மலேசியா
துவாரான் மாவட்டம்
துவாரான் மாவட்டம்
      துவாரான் மாவட்டம்
ஆள்கூறுகள்: 6°11′00″N 116°14′00″E / 6.18333°N 116.23333°E / 6.18333; 116.23333
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுமேற்கு கரை
தலைநகரம்துவாரான்
(Tuaran)
அரசு
 • மாவட்ட அதிகாரிசியாரின் சம்சிர்
(Syahrin Samsir)
பரப்பளவு
 • மொத்தம்1,165 km2 (450 sq mi)
மக்கள்தொகை (2019)
 • மொத்தம்128,200
இணையதளம்ww2.sabah.gov.my/md.trn/
ww2.sabah.gov.my/pd.trn/

துவாரான் மாவட்டம்; (மலாய்: Daerah Tuaran; ஆங்கிலம்: Tuaran District) என்பது மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் துவாரான் நகரம் (Tuaran Town).

சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் துவாரான் மாவட்டமும் ஒன்றாகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

பொது[தொகு]

துவாரான் மாவட்ட வரைபடம்

சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

வரலாறு[தொகு]

துவாரான் என்ற பெயரின் தோற்றம் ஓரளவுக்கு இன்னும் அறியப் படாமல் உள்ளது. இருப்பினும் பிரித்தானியர்களின் வருகைக்கு முன்பே இருந்து துவாரான் நகரில் ஒரு குடியேற்றம் இருந்துள்ளது. 1800-ஆம் ஆண்டுகளில் இசுடாம்போர்டு இராஃபிள்சு துவாரான் எனும் பெயரைப் பயன்படுத்தி உள்ளார்.

இசுடாம்போர்டு இராஃபிள்சு (Stamford Raffles), 1811–ஆம் ஆண்டில் இருந்து 1815-ஆம் ஆண்டு வரை டச்சு கிழக்கிந்திய நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்தார். 1813–ஆம் ஆண்டில் ஜாவாவின் ஆளுநராகவும் இருந்தார்.[2][3]

இசுடாம்போர்டு இராபிள்சு[தொகு]

அந்தக் காலக் கட்டத்தில் துவாரான், தெம்பாசு (Tempasuk) பகுதிகள் கடல் கொள்ளைகளால் பாதிக்கப்பட்டு இருந்தன. இந்தக் கடல் கொள்ளைகளை ஒடுக்குமாறு இசுடாம்போர்டு இராபிள்சை புரூணை சுல்தான் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் இருந்த பிரித்தானிய (East India Company) செயலாளருக்கு இசுடாம்போர்டு இராஃபிள்சு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். அந்தக் கடிதத்தில் துவாரான் எனும் பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

நிர்வாகப் பிரிவு[தொகு]

துவாரான் மாவட்டத்தின் முக்கிம்கள்
துவாரான் மாவட்டம்
இடம் முக்கிம்
சுலமான் தம்பாலாங்
முக்கிம் செருசோப்
முக்கிம் இந்தாய்
பந்தாய் தாலித் முக்கிம் பெருங்கிசு
முக்கிம் மெங்கபோங்
முக்கிம் பண்டார் துவாரான்
தம்பருளி முக்கிம் தம்பருளி
முக்கிம் தெங்கிலான்
முக்கிம் டோபோகான்
முக்கிம் காயாரத்தாவ்/ருங்குசு
கியுலு முக்கிம் உலு
முக்கிம் தெங்கா
முக்கிம் லெம்பா
முக்கிம் பந்தாய்
முக்கிம் நபாலு
முக்கிம் பெக்கான்

காட்சியகம்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Tuaran is situated in the West Coast of Sabah and is just 32 kilometres away from the State capital, Kota Kinabalu. Tuaran is well-known for it's fried 'Tuaran noodles' and visitors including Sabahans would travel all the way to Tuaran just to have a taste of it. The population of Tuaran consists a majority of the Dusun ethnic, the Lotud ethnic and the Bajau ethnic". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 January 2023.
  2. "Sir Stamford Raffles's family". Singapore Infopedia. Singapore Government. பார்க்கப்பட்ட நாள் 13 December 2014.
  3. Ricklefs, M. C. A History of Modern Indonesia Since C. 1200, 4th Edition, Palgrave Macmillan, 2008

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாரான்_மாவட்டம்&oldid=3641015" இலிருந்து மீள்விக்கப்பட்டது