உள்ளடக்கத்துக்குச் செல்

கூனாக்

ஆள்கூறுகள்: 4°41′00″N 118°15′00″E / 4.68333°N 118.25000°E / 4.68333; 118.25000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூனாக் நகரம்
Kunak Town
சபா
A roundabout in Kunak
Location of கூனாக் நகரம்
கூனாக் நகரம் is located in மலேசியா
கூனாக் நகரம்
கூனாக் நகரம்
சபாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 4°41′00″N 118°15′00″E / 4.68333°N 118.25000°E / 4.68333; 118.25000
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுதாவாவ் பிரிவு
மாவட்டம்கூனாக் மாவட்டம்
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்13,823
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
மலேசிய அஞ்சல் குறியீடு
91200
மலேசியத் தொலைபேசி+6-089
மலேசிய வாகனப் பதிவெண்கள்SD

கூனாக் என்பது (மலாய்: Pekan Kunak; ஆங்கிலம்: Kunak Town); மலேசியா, சபா மாநிலம், தாவாவ் பிரிவு, கூனாக் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.

இந்த நகரில் பெரும்பாலும் பஜாவு பழங்குடி குழுக்கள்; பூகிஸ் மக்கள் வாழ்கிறார்கள். கணிசமான அளவிற்குச் சீனர் சிறுபான்மையினரும் உள்ளனர்.[1]

இவர்களில் பலர், கூனாக் நகரில் கடைகளை வைத்து நடத்துகின்றனர். தவிர, புறநகர்ப் பகுதிகளில் எண்ணெய்ப்பனை வேளாண்மையிலும் ஈடுபட்டு உள்ளனர். எண்ணெய்ப்பனை கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு இங்கு ஒரு துறைமுகமும் அமைக்கப்பட்டு உள்ளது.[2]

கல்வி[தொகு]

கூனாக் நகரில் மூன்று உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன: கூனாக் ஜெயா உயர்நிலைப் பள்ளி; கூனாக் உயர்நிலைப் பள்ளி; மாடாய் உயர்நிலைப் பள்ளி. பல மலாய் தொடக்கப் பள்ளிகளும்; பை செங் எனும் ஒரு சீனத் தொடக்கப் பள்ளியும் உள்ளன.

இந்த நகரத்திற்கு சில கிலோமீட்டர் தொலைவில், ஒரு மீள்குடியேற்ற திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. கொக்கோஸ் தீவைச் (Cocos Island) சேர்ந்த மக்கள் இங்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்காலான் கூனாக் படகுத் துறை[தொகு]

அந்த மீள்குடியேற்றப் பகுதிக்கு அருகில் ஜிராம் எண்ணெய்ப்பனை தோட்டம் (Giram Oil Palm Estate) உள்ளது. கூனாக் நகரத்தில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் பெங்காலான் கூனாக் (Pengkalan Kunak) எனும் பகுதியில் ஒரு படகு துறை உள்ளது.

2002-ஆம் ஆண்டில், 76 படுக்கைகள் கொண்ட ஓர் அரசு மருத்துவமனை இந்த நகரில் கட்டப்பட்டது. தவிர கூனாக் நகரத்தை செம்பூர்ணா நகரத்துடன் இணைக்கும் புதிய நெடுஞ்சாலையும் உருவாக்கப்பட்டு உள்ளது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Kunak is situated in the East coast of Sabah and is under the Tawau Division. The population there in Kunak has a majority of the Bajau and Bugis communities". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 April 2022.
  2. "Kunak Port serves as a dedicated crude palm oil port". www.spsb.com.my. பார்க்கப்பட்ட நாள் 3 April 2022.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கூனாக்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கூனாக்&oldid=3639684" இலிருந்து மீள்விக்கப்பட்டது