கூடாட் பிரிவு
கூடாட் பிரிவு (மலாய் மொழி: Bahagian Kudat; ஆங்கிலம்: Kudat Division) என்பது மலேசியா, சபா மாநிலத்தில் ஒரு நிர்வாகப் பிரிவாகும். ஆங்கிலத்தில் டிவிசன் (Division) என்று அழைக்கிறார்கள். இந்த முறைமை தீபகற்ப மலேசியாவில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.[1]
கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களைப் பொருத்த வரையில், பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஓர் ஆளுநர் (Resident) நியமிக்கப்பட்டு உள்ளார்.
பொது
[தொகு]இந்தக் கூடாட் பிரிவு, சபா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்து உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 4,623 சதுர கிலோமீட்டர்கள் (சபாவின் மொத்த நிலப்பரப்பில் 6.3%). சபாவின் ஐந்து பிரிவுகளில் மிகச் சிறியது.[1]
கூடாட் பிரிவுக்குள் கூடாட்; பித்தாஸ் (Pitas); கோத்தா மருடு (Kota Marudu) மாவட்டங்களும்; பாலாக் (Balak), பலம்பங்கான் (Balambangan), பாங்கி (Banggi), பங்கவான் (Bankawan), குகுவான் உத்தாரா (Guhuan Utara), கலம்புனியான் (Kalampunian) மற்றும் மலாவலி (Malawali) தீவுகளும் உள்ளடங்கி உள்ளன.
கூடாட் பிரிவின் மக்கள்தொகை
[தொகு]2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, கூடாட் பிரிவின் மக்கள்தொகை 186,516. இது சபாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 6% ஆகும். பெரும்பாலும் ருங்குஸ் (Rungus) மக்கள் வசிக்கின்றனர்.[2]
கூடாட் பிரிவிற்குள் உள்ள மிகப்பெரிய நகரம் கூடாட். அதுவே முக்கிய போக்குவரத்து மையமுமாகும். கூடாட் நகரத்தின் துறைமுகம் வழியாகக் கூடாட் பிரிவுக்கு ஏற்றுமதி இறக்குமதிச் சரக்குகள் கொண்டு செல்லப் படுகின்றன. இந்தப் பிரிவில் ஒரே ஒரு விமான நிலையம் மட்டுமே உள்ளது.[1]
மாநிலங்கள்
[தொகு]சபா மாநிலத்தின் கூடாட் பிரிவு பின்வரும் நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது:[1]
- கோத்தா மருடு மாவட்டம் (1,917 கி.மீ.2) (கோத்தா மருடு)
- கூடாட் மாவட்டம் (1,287 கி.மீ.2) (கூடாட்)
- பித்தாஸ் மாவட்டம் (1,419 கி.மீ.2) (பித்தாஸ் நகரம்)
நாடாளுமன்ற உறுப்பினர்கள் (டேவான் ராக்யாட்)
[தொகு]தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|
P167 கூடாட் | அப்துல் ரகீம் பக்ரி | பெரிக்காத்தான் நேசனல் (PN - PPBM) |
P168 கோத்தா மருடு | மாக்சிமஸ் ஓங்கிலி | ஐக்கிய சபா கட்சி (United Sabah Party) |
இவற்றையும் பார்க்க
[தொகு]நூல்கள்
[தொகு]- Tregonning, K. G. (1965). A History Of Modern Sabah (North Borneo 1881–1963). University of Malaya Press.
- State of Sabah: Administrative Divisions Ordinance – Sabah Cap. 167 (PDF) of 1 November 1954; last amended on 16 September 1963, as amended in August 2010;
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "General Information". Lands and Surveys Department of Sabah. Borneo Trade. Archived from the original on 23 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Carol R. Ember; Melvin Ember (31 December 2003). Encyclopedia of Sex and Gender: Men and Women in the World's Cultures Topics and Cultures A-K - Volume 1; Cultures L-Z -. Springer Science & Business Media. pp. 770–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-306-47770-6.