நாபாவான்
நாபாவான் நகரம் | |
---|---|
Nabawan Town | |
சபா | |
மேலிருந்து, இடமிருந்து வலமாக: நாபாவான் உயர்நிலைப்பள்ளி 2; நாபாவான் நகரம்; நாபாவான் நகரம் 2 | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°5′N 116°27′E / 5.083°N 116.450°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | உட்பகுதி பிரிவு |
மாவட்டம் | நாபாவான் மாவட்டம் |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 31,807 |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே) |
நாபாவான் என்பது (மலாய்: Pekan Nabawan; ஆங்கிலம்: Nabawan Town) மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, நாபாவான் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
பெரும்பான்மையோர் பழங்குடி மூருட் மக்கள்; சிறுபான்மையோர் லுன் பாவாங் (Lun Bawang); லுன் டாயே (Lun Dayeh) பழங்குடி இனத்தவர்கள்.
பொது[தொகு]
நாபாவான் மாவட்டம் 6.089 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இந்த மாவட்டம் சபாவின் தெற்குப் பகுதியில் அமைந்து உள்ளது.
இதன் வடக்கில் கெனிங்காவ் மாவட்டம்; வடகிழக்கில் தொங்கோட் மாவட்டம்; கிழக்கில் தாவாவ் மாவட்டம், மேற்கில் தெனோம் மாவட்டம் மற்றும் இந்தோனேசியாவின் வடக்கு கலிமந்தான் மாநிலம் உள்ளன.
நாபாவான் மாவட்டம்[தொகு]
நாபாவான் மாவட்டம் 1920-ஆம் ஆண்டில் ஒரு சிறிய மாவட்டமாகத் தொடங்கியது. பணிபுரிந்த முதல் உதவி மாவட்ட அலுவலர் திரு. ஐ.சி பெக் (I.C Peck).[1]
இங்கு பழைமையான கற்பாறைக் குன்று உள்ளது. அதன் பெயர் பத்து புங்குல் (Batu Punggul). பழங்காலத்தில், மூருட் பழங்குடி மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 120 மீட்டர் உயரம்; 68 மீட்டர் அகலம் கொண்டது.
பத்து புங்குல்[தொகு]
இந்தக் குன்று செபுலுட் ஆற்றுப் பகுதியின் நடுவில் அமைந்து உள்ளது. அதைச் சுற்றிலும் பல குகைகள் உள்ளன.
நாபாவான் பகுதி வெப்ப மண்டலக் காடுகளுக்குப் பெயர் பெற்ற இடமாகும். அண்மைய காலங்களில் அதிகமான அளவில் காட்டு மரங்கள் வெட்டப் படுகின்றன.[2]
காட்சியகம்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் நாபாவான் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மேற்கோள்[தொகு]
- ↑ "Nabawan District as one of the districts in the Interior began under the status of a Small District Office in 1920". www.sabah.gov.my. 4 April 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "In 2010, Nabawan had 575kha of natural forest, extending over 98% of its land area. In 2020, it lost 3.81kha of natural forest". www.globalforestwatch.org (ஆங்கிலம்). 4 April 2022 அன்று பார்க்கப்பட்டது.