உள்ளடக்கத்துக்குச் செல்

இரானாவ்

ஆள்கூறுகள்: 5°58′00″N 116°41′00″E / 5.96667°N 116.68333°E / 5.96667; 116.68333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரானாவ்
Ranau Town
Pekan Ranau
Map
இரானாவ் is located in மலேசியா
இரானாவ்
      இரானாவ்
ஆள்கூறுகள்: 5°58′00″N 116°41′00″E / 5.96667°N 116.68333°E / 5.96667; 116.68333
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுமேற்கு கரை பிரிவு
மாவட்டம்ரானாவ் மாவட்டம்
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்~1,00,000
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
89100; 89300
மலேசியத் தொலைபேசி+60-88
மலேசிய வாகனப் பதிவெண்கள்SA (1980-2018)
SY (2018-2023)
SJ (2023-)
SS (1980-2018)
SM (2018-)
SK
SU
இணையதளம்ww2.sabah.gov.my/pd.rnu/ ww2.sabah.gov.my/md.rnu/

இரானாவ் அல்லது ரானாவ் என்பது (மலாய்: Pekan Ranau; ஆங்கிலம்: Ranau Town) மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவு, இரானாவ் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இந்த நகரில் டூசுன் சமூகத்தினர் பெரும்பான்மையினர் வாழ்கிறார்கள்.

இரானாவ் நகரம், அதன் மலைப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் காய்கறிகள் மற்றும் நறுமண உள்ளூர்த் தேயிலைப் பொருள்களுக்குப் பிரபலமானது.[1]

தென்கிழக்கு ஆசியாவின் மிக உயரமான மலையான கினபாலு மலைத் தொடரின் அடிவாரப் பகுதியில்; கோத்தா கினபாலு நகரில் இருந்து 124 கி.மீ. தொலைவில் இரானாவ் அமைந்து உள்ளது.[2]

பொது

[தொகு]

இரானாவ் (Ranau) என்றால் ஈரமான நெல் வயல் என்று பொருள். பரந்த பள்ளத்தாக்கின் வளமான சமவெளிகளில் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து இருக்க வேண்டும். அதனால் அந்தப் பெயர் வைக்கப்பட்டு இருக்கலாம்.

முன்பு காலத்தில் சுற்றியுள்ள மலைகளில் டூசுன் மக்கள் வாழ்ந்து உள்ளனர். மலைகளின் சரிவுகளில் நெல் பயிரிட்டுள்ளார்கள். ரானாவுக்கு அருகில் குண்டசாங் நகரம் உள்ளது. இந்த நகரைச் சபாவின் காய்கறி மூலதனம் என்றும் அழைக்கிறார்கள். [3]

வரலாறு

[தொகு]

சண்டாக்கான் மரண அணிவகுப்பு

[தொகு]

இரானாவ் நகருக்கு அருகில் ஆஸ்திரேலிய போர் நினைவுச்சின்னம் உள்ளது. இந்த நினைவுச் சின்னம் ஆஸ்திரேலியப் போர்க் கைதிகளின் மரண அணிவகுப்பைக் குறிக்கிறது.

ஜப்பானியரின் ஆட்சிக் காலத்தில் சபா, சண்டாக்கான் சிறைச்சாலையில் இருந்து, 260 கி.மீ. தொலைவில் இருந்த இரானாவ் நகரத்திற்கு, ஆஸ்திரேலியப் போர்க்கைதிகள் கால்நடையாக நடக்க வைக்கப் பட்டார்கள். அந்த நிகழ்ச்சியைச் சண்டாக்கான் மரண அணிவகுப்பு (Sandakan Death Marches) என்று அழைக்கிறார்கள். அந்த மரண அணிவகுப்பில் 2300 பேர் இறந்தார்கள்.

இரானாவ் சிறைச்சாலை

[தொகு]

ஜப்பானியர்களின் ஆட்சி காலத்தில் சண்டக்கான் நகரில் பிரித்தானிய, ஆஸ்திரேலியப் போர்க் கைதிகளுக்காக ஒரு சிறைச்சாலை உருவாக்கப்பட்டது. அந்தச் சிறைச்சாலையில் இருந்த கைதிகள் மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்பட்டனர்.[4]

கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக அந்தச் சிறைச்சாலை, 260 கி.மீ. தொலைவில் இருந்த இரானாவ் உள் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

அப்போது சண்டாக்கான் சிறைச்சாலையில் 2504 கைதிகள் இருந்தனர். ஏற்கனவே பல ஆயிரம் பேர், சப்பானியர்களின் சித்ரவதைகளினால் இறந்து விட்டனர். எஞ்சியவர்கள் இரானாவ் எனும் இடத்திற்கு கால்நடையாக நடக்க வைக்கப் பட்டனர்.[5]

அந்த நிகழ்ச்சியைச் சண்டாக்கான் மரண அணிவகுப்பு என்று அழைக்கிறார்கள். போர்க் கைதிகளில் ஆறே ஆறு பேர்தான் தப்பிப் பிழைத்தனர். மற்றவர்கள் அனைவரும் நடைபாதையிலேயே இறந்து போயினர்.[6]

காலநிலை

[தொகு]

இரானாவ் வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் கொண்டது. ஆண்டு முழுவதும் அதிக மழைப்பொழிவைக் கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், ரானாவ்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 27.2
(81)
27.3
(81.1)
27.8
(82)
28.5
(83.3)
28.7
(83.7)
28.2
(82.8)
28.0
(82.4)
28.1
(82.6)
27.9
(82.2)
27.8
(82)
27.7
(81.9)
27.5
(81.5)
27.89
(82.21)
தினசரி சராசரி °C (°F) 23.6
(74.5)
23.7
(74.7)
24.0
(75.2)
24.6
(76.3)
24.8
(76.6)
24.3
(75.7)
24.1
(75.4)
24.2
(75.6)
24.0
(75.2)
24.1
(75.4)
24.1
(75.4)
23.9
(75)
24.12
(75.41)
தாழ் சராசரி °C (°F) 20.1
(68.2)
20.1
(68.2)
20.3
(68.5)
20.7
(69.3)
20.9
(69.6)
20.5
(68.9)
20.2
(68.4)
20.3
(68.5)
20.1
(68.2)
20.4
(68.7)
20.5
(68.9)
20.4
(68.7)
20.38
(68.68)
மழைப்பொழிவுmm (inches) 216
(8.5)
153
(6.02)
136
(5.35)
143
(5.63)
234
(9.21)
206
(8.11)
175
(6.89)
172
(6.77)
203
(7.99)
202
(7.95)
220
(8.66)
221
(8.7)
2,281
(89.8)
ஆதாரம்: Climate-Data.org[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ranau is located in the West Coast of the Malaysian state of Sabah and make up a majority of the Dusun community. Ranau is famous for it's highland vegetables and aromatic local tea brand". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  2. "Ranau terletak di kaki Gunung Kinabalu iaitu gunung yang tertinggi di Asia Tenggara. Perjalanan darat dari Kota Kinabalu ke Ranau mengambil masa 2 jam yang mana jaraknya adalah 124 KM. Hospital Ranau terletak 2 KM dari Pekan Ranau". hranau.moh.gov.my. பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  3. "Ranau literally means 'wet-rice field' and the fertile plains of this vast valley must have been inhabited for a long time. The surrounding hills have also been inhabited by Dusun but they would plant 'dry rice' on the slopes of the hills". www.flyingdusun.com. பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  4. "Sandakan-Ranau POW Death Marches; The memorial was unveiled on 27 August 2009, exactly 64 years years after the last 15 POWs were murdered, five of them at a spot very close to this site". lynettesilver.com. 4 January 2012. பார்க்கப்பட்ட நாள் 7 April 2022.
  5. Laden, Fevered, Starved பரணிடப்பட்டது 2006-12-17 at the வந்தவழி இயந்திரம் Sandakan POW Camp, 1942–1944
  6. The Marches பரணிடப்பட்டது 2017-03-15 at the வந்தவழி இயந்திரம் Australia's War, 1939–1945
  7. "காலநிலை: இரானாவ்". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 30 October 2020.

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரானாவ்&oldid=4066496" இலிருந்து மீள்விக்கப்பட்டது