கோத்தா மருடு

ஆள்கூறுகள்: 6°29′23″N 116°44′10″E / 6.48972°N 116.73611°E / 6.48972; 116.73611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோத்தா மாருடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோத்தா மருடு நகரம்
Kota Marudu Town
சபா
மேலிருந்து, இடமிருந்து வலமாக:
லாங்கோன் வணிக மையம்; புறநகர்ப் பகுதி, மாவட்ட அலுவலகம், நகரச் சதுக்கம் மற்றும் நகரப் பிரதானச் சாலைக்கான துணைச் சாலை
Location of கோத்தா மருடு நகரம்
கோத்தா மருடு நகரம் is located in மலேசியா
கோத்தா மருடு நகரம்
கோத்தா மருடு நகரம்
சபாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 6°29′23″N 116°44′10″E / 6.48972°N 116.73611°E / 6.48972; 116.73611
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுகூடாட் பிரிவு
மாவட்டம்கோத்தா மருடு மாவட்டம்
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்69,528
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
மலேசிய அஞ்சல் குறியீடு89100
மலேசியத் தொலைபேசி+6-087
மலேசிய வாகனப் பதிவெண்கள்SY

கோத்தா மருடு என்பது (மலாய்: Pekan Kota Marudu; ஆங்கிலம்: Kota Marudu Town); மலேசியா, சபா மாநிலம், கூடாட் பிரிவு, கோத்தா மருடு மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். 2020-ஆம் ஆண்டில் அதன் மக்கள்தொகை 69,528.[1]

மாநிலத் தலைநகர் கோத்தா கினபாலுவில் இருந்து 130 கி.மீ. தொலைவில்; கிழக்கு போர்னியோவின் வடக்கு முனைக்கு அருகில் உள்ள கூடாட் கூட்டாட்சி நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது.[2]

பொது[தொகு]

கோத்தா மருடுவில் உள்ள முக்கிய இடங்களில் சொரின்சிம் நீர்வீழ்ச்சி (Sorinsim Waterfall) குறிப்பிடத்தக்கது. கோத்தா மருடுவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பியாட் ஏரியில் (Buyut Lake) உள்ள சகாபோன் பூங்கா (Sagabon Park) எனும் விவசாய ஆராய்ச்சி நிலையமும் ஒரு முக்கியமான இடமாகும். தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய சூரிய சக்தி நிலையத்தையும் கோத்தா மருடு கொண்டுள்ளது.

மாவட்டத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு, விவசாயப் பொருட்களின் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், கோத்தா மருடு நகரம் ஆண்டுதோறும் மக்காச் சோளத் திருவிழாவைக் (Maize Festival) கொண்டாடுகிறது.

மேலும் பல்வேறு கண்காட்சிகள், போட்டிகள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் அழகுப் போட்டிகளும் இந்த நகரத்தில் நடைபெற்று வருகின்றன.

வரலாறு[தொகு]

கோத்தா மருடு நகரம் எப்போது நிறுவப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் 1632-ஆம் ஆண்டில் ஜோகன்னஸ் குளோப்பன்பர்க் (Johannes Cloppenburgh) என்பவரும்; 1631-ஆம் ஆண்டில் பெஞ்சமின் ரைட் (Benjamin Wright) என்பவரும் வரைந்த போர்னியோ வரைப் படங்களில், கோத்தா மருடு எனும் பெயர் இடம் பெற்று உள்ளது.[3][4]

அவற்றில் "மருடோ" (Marudo) என்ற பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. தவிர பழைய வரைப் படங்களில் "மல்லூடு" (Malloodoo) என்றும் குறிப்பிடப் படுகிறது.[5]

மேற்கோள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kota Marudu
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தா_மருடு&oldid=3639678" இருந்து மீள்விக்கப்பட்டது