சிபித்தாங்

ஆள்கூறுகள்: 5°5′N 115°33′E / 5.083°N 115.550°E / 5.083; 115.550
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிபித்தாங் நகரம்
Sipitang Town
சபா
மேலிருந்து, இடமிருந்து வலமாக:
சிபித்தாங் வணிக வளாகம், நகர மையத்தில் பெரும் கடை, மாவட்ட ஊராட்சி மன்றக் கட்டடம், நகர பள்ளிவாசல், செயின்ட் ஜான் தேவாலயம், மாவட்ட அலுவலகம்
Location of சிபித்தாங் நகரம்
ஆள்கூறுகள்: 5°5′N 115°33′E / 5.083°N 115.550°E / 5.083; 115.550
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுஉட்பகுதி பிரிவு
மாவட்டம்சிபித்தாங் மாவட்டம்
நகரம்சிபித்தாங்
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்4,298
இணையதளம்ww2.sabah.gov.my/pd.sptg/

சிபித்தாங் (மலாய்: Pekan Sipitang; ஆங்கிலம்: Sipitang Town; சீனம்: 四皮塘) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, சிபித்தாங் மாவட்டத்தில் உள்ள நகரம்; மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.[1]

சபா மாநிலத்தில் சரவாக் மாநிலத்தின் எல்லைக்கு மிக அருகில் உள்ள நகரமான சிபித்தாங், பியூபோர்ட் (Beaufort) நகரில் இருந்து 44 கி.மீ. தெற்கிலும்; மாநிலத் தலைநகரான கோத்தா கினபாலுவில் இருந்து 144 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பொது[தொகு]

சபாவில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமான லோங் பாசியாவில் (Long Pasia) இருந்து வடக்கே 123 கி.மீ. தொலைவில் இந்தச் சிபித்தாங் நகரம் உள்ளது. மற்றும் லாங் மியோ (Long Mio) எனும் சுற்றுச்சூழல் சுற்றுலா கிராமமும் சிபித்தாங் பகுதியில் தான் உள்ளது. இந்தச் சுற்றுலா கிராமங்களில் தங்கி ஓய்வு எடுப்பதற்காக சபா, சரவாக் மாநிலங்களில் இருந்து அதிகமானோர் வருகை தருகின்றனர்.

காசிங் மற்றும் தாமு பெசார் எனும் திருவிழாக்களின் சிறப்பிடகமாகவும் சிபித்தாங் நகரம் உள்ளது. இந்தத் திருவிழாக்களில் சிபித்தாங்கில் உள்ள பழங்குடியினக் குழுவினரை ஊக்குவிக்கும் பல வகையான கலாசார நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.[1]

வரலாறு[தொகு]

1884-ஆம் ஆண்டு வரையில், சிபித்தாங் மாவட்டம், புரூணை சுல்தானகத்தின் (Sultanate of Brunei) முன்னாள் பிரதேசமாகும். நவம்பர் 5, 1884-இல், சிபித்தாங]; கோலா பென்யூ ஆகிய நிலப் பகுதிகளை பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு (North Borneo Chartered Company), அப்போதைய புரூணை சுல்தான் (Sultan of Brunei) விட்டுக் கொடுத்தார். 12 செப்டம்பர் 1901-இல், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம், மெங்கலோங் (Mengalong) மற்றும் மெரந்தாமான் (Merantaman) பகுதிகளைக் கையகப் படுத்தியது. [2][3]

அப்போது இந்தப் பகுதிகள் புரூணை சுல்தானகத்தின் பரம்பரை ஆட்சியாளரான பெங்கீரான் தெங்கா டாமித் பெங்கீரான் அனாக் பொங்சுவின் (Pengiran Tengah Damit Pengiran Anak Bongsu) மானியத்தின் மூலமாக பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு வழங்கப் பட்டன. இந்தப் பகுதிகள் இப்போது சிபித்தாங் மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளன.

கிளார்க் மாநிலம்[தொகு]

1900-ஆம் ஆண்டு வரை, சிபித்தாங் ஆறு, வடக்கு போர்னியோவிற்கும் புரூணை சுல்தானகத்திற்கும் இடையிலான எல்லையாக இருந்தது. 1901-இல் சிபித்தாங் ஆற்றுக்கும் (Sipitang River) துருசான் ஆற்றுக்கும் (Trusan River) இடையே இருந்த நிலப்பகுதி பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தால் கையகப்படுத்தப் பட்டன.

அந்த நிலப்பகுதிக்கு கிளார்க் மாநிலம் (Province Clarke) என்று பெயர் வைக்கப்பட்டது. அப்போது சிப்பித்தாங்கில் ஆண்ட்ரூ கிளார்க் (Andrew Clarke) என்பவர் ஓர் உயர் இராணுவ அதிகாரியாக இருந்தார். அந்த வகையில் அவரின் பெயர் அந்த இடத்திற்கும் வைக்கப்பட்டது. அங்கு ஒரு பிரித்தானிய நிர்வாக அலுவலகமும் நிறுவப்பட்டது.[4]

புவியியல்[தொகு]

சபா வனத் தொழில் தொழிற்சாலை

புரூணை விரிகுடாவில் இருந்து 16 கி.மீ. தொலைவில் சிபித்தாங் கடற்கரை உள்ளது. இந்தக் கடற்கரைதான் புரூணை மற்றும் லபுவானில் இருந்து வரும் பயணிகளுக்கு நுழைவாயிலாக அமைகிறது.

சிபித்தாங் நகரம் ஒரு நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. அதன் வழியாக சிபித்தாங் ஆறு (Sipitang River) செல்கிறது.

குரோக்கர் மலைத்தொடர்[தொகு]

தெற்கில் இருந்து தென்மேற்காக சிபித்தாங் நகரத்தைக் கடக்கும் போது குரோக்கர் மலைத்தொடரை (Crocker Range) காணலாம். மழைக்காலத்தில் சிபித்தாங்கில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது உண்டு. அதற்கு கடலோரப் பகுதிக்கு அருகில் சிறிய குன்றுகளும் சமதளமான நிலங்களும் இருப்பதும் ஒரு முக்கிய காரணம் என அறியப்பட்டு உள்ளது.

மேற்கோள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபித்தாங்&oldid=3640855" இருந்து மீள்விக்கப்பட்டது