உள்ளடக்கத்துக்குச் செல்

பாப்பார்

ஆள்கூறுகள்: 5°44′00″N 115°56′00″E / 5.73333°N 115.93333°E / 5.73333; 115.93333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாப்பார் நகரம்
Papar Town
சபா
Colonial-era shoplots in Papar town
பாப்பார் நகரில் காலனித்துவக் காலத்துக் கடைவீதிகள்.
Location of பாப்பார் நகரம்
பாப்பார் நகரம் is located in மலேசியா
பாப்பார் நகரம்
பாப்பார் நகரம்
      பாப்பார்
ஆள்கூறுகள்: 5°44′00″N 115°56′00″E / 5.73333°N 115.93333°E / 5.73333; 115.93333
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுமேற்கு கரை பிரிவு
மாவட்டம்பாப்பார் மாவட்டம்
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,24,420
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
மலேசிய அஞ்சல் குறியீடு
89600
மலேசியத் தொலைபேசி+60(88)
மலேசிய வாகனப் பதிவெண்கள்SA; SY

பாப்பார் என்பது (மலாய்: Pekan Papar; ஆங்கிலம்: Papar Town) மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவு, பாப்பார் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். கடசான் - டூசுன்; புரூணை மலாய்க்காரர் (Bruneian Malay); பஜாவு ஆகிய இனக் குழுவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகரம்.

இந்த நகரம் சபா மாநிலத் தலைநகரான கோத்தா கினபாலுவில் இருந்து 38 கி.மீ. தெற்கே அமைந்து உள்ளது. இந்த நகரத்தில் ஓர் இரயில் நிலையம் உள்ளது. சபா மாநில இரயில் சேவையின் (Sabah State Railway) முக்கிய நிறுத்தங்களில் ஒன்றாக அந்த நிலையம் விளங்குகிறது.

இந்தப் பாப்பார் நகரம், குரோக்கர் மலைத்தொடரை (Crocker Range) நோக்கி, தாழ்வான கடலோரப் பகுதிகளால் சூழப்பட்டு உள்ளது.[1] இங்குள்ள தாழ்வு நிலப் பகுதிகள் நெல் சாகுபடிக்குப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நெல் சாகுபடியில் பெரும்பாலும் பழங்குடி மக்களே ஈடுபட்டு உள்ளனர்.

பொது

[தொகு]

புரூணை மலாய்க்காரர்கள் பெரும்பாலும் பாப்பார் நகரத்தில் உள்ள பெனோனி (Benoni), புவாங் சாயாங் (Buang Sayang), பொங்கவான் (Bongawan), கம்போங் லாவுட் (Kampung Laut), கெலனாகான் (Kelanahan), தாக்கிஸ் (Takis), கிமானிஸ் (Kimanis) மற்றும் கினாருட் (Kinarut) கிராமங்களில் வாழ்கின்றனர்.

கடசான் - டூசுன் இனத்தவர் ரம்பாசான் (Rampazan), லிம்பாகாவ் (Limbahau), கினாருட் (Kinarut), கோபிம்பினான் (Kopimpinan), லாகுட் (Lakut), மொண்டலிபாவ் (Mondolipau), கினுத்தா (Kinuta), புங்குக் (Bungug), படவான் (Padawan), கொய்டுவான் (Koiduan), உலு கிமானிஸ் (Ulu Kimanis), சும்பிலிங் (Sumbiling) மற்றும் லிம்புதுங் (Limputung) ஆகிய கிராமங்களில் வாழ்கின்றனர்.

பஜாவ் இன மக்கள் பெங்காலாட் பெசார் (Pengalat Besar), பெங்காலட் கெச்சில் (Pengalat Kecil), காவாங் (Kawang), கோலா (Kuala), சுங்கை பாடாங் (Sg Padang) மற்றும் பெரிங்கிஸ் (Beringgis) ஆகிய கிராமங்களில் வாழ்கின்றனர். கணிசமான அளவிற்கு சீனர்களும் சிறுபான்மையினராக உள்ளனர்.

நிப்பா பனை மரக் காடுகள்

[தொகு]

பல்வகையான பழத் தோட்டங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் சீனச் சிறுபான்மை இனத்தவருக்குச் சொந்தமாக உள்ளன.

பாப்பார் ஆறு கடலில் கலக்கும் தென் கரையில், சதுப்புநிலக் காட்டுப் பகுதியில் பாப்பார் நகரம் அமைந்து உள்ளது. நிப்பா எனும் உப்பு நீர் பனை மரக் காடுகளும் இங்கு நிறையவே உள்ளன.

கோத்தா கினபாலு நகரத்திற்கு அருகாமையில் இந்த நகரம் இருப்பதால், கோத்தா கினபாலுவின் நவீன வளர்ச்சித் தாக்கங்களும், இந்த நகரைப் பெரிதும் பாதித்து வருகின்றன. இந்த நகரம் அண்மைய ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனாலும் அதன் சில பழைய கட்டிடங்கள் மற்றும் வரலாற்றுத் தன்மைகள் இன்னும் பாதுகாக்கப் படுகின்றன.

காலநிலை

[தொகு]

பாப்பார் ஒரு வெப்பமண்டல மழைக்காட்டுக் காலநிலையைக் கொண்டது. அதனால் ஆண்டு முழுவதும் அதிகமாக மழை பெய்யும்.[2]

தட்பவெப்ப நிலைத் தகவல், பாப்பார்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.9
(85.8)
29.9
(85.8)
30.6
(87.1)
31.5
(88.7)
31.7
(89.1)
31.3
(88.3)
31.1
(88)
31.0
(87.8)
30.7
(87.3)
30.6
(87.1)
30.4
(86.7)
30.1
(86.2)
30.73
(87.32)
தினசரி சராசரி °C (°F) 26.5
(79.7)
26.5
(79.7)
27.0
(80.6)
27.8
(82)
28.0
(82.4)
27.6
(81.7)
27.4
(81.3)
27.3
(81.1)
27.1
(80.8)
27.1
(80.8)
26.9
(80.4)
26.7
(80.1)
27.16
(80.89)
தாழ் சராசரி °C (°F) 23.1
(73.6)
23.1
(73.6)
23.5
(74.3)
24.1
(75.4)
24.3
(75.7)
24.0
(75.2)
23.7
(74.7)
23.7
(74.7)
23.6
(74.5)
23.6
(74.5)
23.5
(74.3)
23.4
(74.1)
23.63
(74.54)
மழைப்பொழிவுmm (inches) 162
(6.38)
85
(3.35)
103
(4.06)
164
(6.46)
281
(11.06)
296
(11.65)
288
(11.34)
263
(10.35)
326
(12.83)
353
(13.9)
315
(12.4)
274
(10.79)
2,910
(114.57)
ஆதாரம்: Climate-Data.org[3]


காட்சியகம்

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. "Papar". Borneo Trade. Archived from the original on 5 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 November 2017.
  2. "Papar climate: Average Temperature, weather by month, Papar water temperature - Climate-Data.org". en.climate-data.org. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
  3. "Climate: Papar". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 4 April 2022.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பாப்பார்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பார்&oldid=3639693" இலிருந்து மீள்விக்கப்பட்டது