கெனிங்காவு மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°20′00″N 116°10′00″E / 5.33333°N 116.16667°E / 5.33333; 116.16667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கெனிங்காவ் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கெனிங்காவு மாவட்டம்
Keningau District
சபா
Keningau District Council
கெனிங்காவ் மாவட்ட மன்ற அலுவலகம்.
Location of கெனிங்காவு மாவட்டம்
கெனிங்காவு மாவட்டம் is located in மலேசியா
கெனிங்காவு மாவட்டம்
கெனிங்காவு மாவட்டம்
      கெனிங்காவு மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°20′00″N 116°10′00″E / 5.33333°N 116.16667°E / 5.33333; 116.16667
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுஉட்பகுதி
நகராட்சி1 சனவரி 2022
தலைநகரம் கெனிங்காவு
பரப்பளவு
 • மொத்தம்3,533 km2 (1,364 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்173,103
இணையதளம்www.sabah.gov.my/md.kgu
www.sabah.gov.my/pd.kgu/

கெனிங்காவு மாவட்டம்; (மலாய்: Daerah Keningau; ஆங்கிலம்: Keningau District) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். அதே வேளையில் கெனிங்காவு (Keningau Town) நகரம், கெனிங்காவு மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.[1]

சபா மாநிலத்தின் உட்பகுதி பிரிவு, மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்து உள்ளது. சபா மாநிலத்தின் பரப்பளவில் 24.9%; அதாவது 18,298 சதுர கி.மீ.; சபாவின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 14.7% கொண்டு உள்ளது. உட்பகுதி பிரிவில் உள்ள மிகப் பெரிய நகரம் கெனிங்காவ்.

உட்பகுதி பிரிவில் உள்ள மற்ற முக்கிய நகரங்கள்:

இந்தப் பிரிவின் கரையோரப் பகுதிகளில் டூசுன், மூருட்டு, பிசாயா, புரூணை மலாய்க்காரர்கள் மற்றும் கெடயான் (Kedayan) இனத்தவர் சற்றே அதிகமாக உள்ளனர்.[2]

பொது[தொகு]

சபா, உட்பகுதி பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

கெனிங்காவு மாவட்டம் 3,533 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மேற்கில் குரோக்கர் தேசியப் பூங்கா (Crocker Range); மற்றும் தென் கிழக்கில் துருஸ்மாடி மலையும் (Mount Trus Madi) எல்லைகளாக உள்ளன.

சொற்பிறப்பியல்[தொகு]

கெனிங்காவு நிலப்பகுதியில் ஏராளமான ஜாவானிய இலவங்கப்பட்டை மரங்கள் (Cinnamomum burmannii) உள்ளன. இந்த மரங்கள் உள்நாட்டில் கொனிங்காவ் (Koningau) என்று அழைக்கப் படுகின்றது. அந்த மரங்களில் இருந்து இந்தப் பகுதிக்கும் பெயர் வந்தததாகச் சொல்லப் படுகிறது.[4]

வரலாறு[தொகு]

கெனிங்காவு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் (British North Borneo) மிக முக்கியமான நிர்வாக மையங்களில் ஒன்றாக விளங்கியது. இரண்டாம் உலகப் போரின் போது, வடக்கு போர்னியோவை ஜப்பானியர்கள் ஆக்கிரமித்த காலக் கட்டத்தில், கெனிங்காவ் நகரத்தைத் தங்களின் முக்கிய நிர்வாக மையங்களில் ஒன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

அந்தக் காலக் கட்டத்தில், கெனிங்காவில் இருந்து சேகரிக்கப்பட்ட இலவங்கப்பட்டை தெனோம் நகரில் இருந்து இரயில் வண்டி வழியாக ஜெசல்டன் (தற்சமயம்: கோத்தா கினபாலு) கொண்டு செல்லப்பட்டது. அங்கு இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டது, பின்னர் அங்கு இருந்து ஐரோப்பா முழுவதும் விநியோகிக்கப்பட்டு சந்தைப் படுத்தப்பட்டது.[5]

அபின்-அபின் (Apin-Apin) அருகே உள்ள நுந்துனான் (Nuntunan) கிராமம் பிரித்தானிய நிர்வாகத்தின் போது "44" எனும் எண்ணில் அறியப்பட்டது. தெனோம் (Nuntunan) நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் இருந்ததால் அந்த அழைப்பு எண் வழங்கப்பட்டது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Keningau is Sabah's fifth largest town and houses the largest park in Sabah which is the Crocker Range National Park". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
  2. "Keningau is the most prominent district in the interior part of Malaysian state of Sabah. Just like most other districts in Sabah, it is a multi-racial place with Dusun & Murut being the major ethnics". www.borneotrails.com. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
  3. "PEJABAT DAERAH KENINGAU". pdkeningau.sabah.gov.my. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
  4. "According to the story of people in the past, Keningau is a village that is overgrown with cinnamon trees or better known as "Keningau Tree". In the language of the Murut tribe they call it "Kayu Keningau" which is a type of spice used for cooking". பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
  5. "Keningau was named after koningau (cinnamon), a popular spice used by natives for their rituals and also cooking. Cinnamon from Keningau was much sought after in markets overseas". keningautheguide.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 April 2022.

மேலும் படிக்க[தொகு]

மேலும் காண்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெனிங்காவு_மாவட்டம்&oldid=3655057" இலிருந்து மீள்விக்கப்பட்டது