உட்பகுதி பிரிவு
உட்பகுதி பிரிவு (மலாய் மொழி: Bahagian Pedalaman; ஆங்கிலம்: Interior Division) என்பது மலேசியா, சபா மாநிலத்தில் ஒரு நிர்வாகப் பிரிவாகும். ஆங்கிலத்தில் டிவிசன் (Division) என்று அழைக்கிறார்கள்.
கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது.
பொது
[தொகு]இந்த உட்பகுதி பிரிவு, சபா மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில்; சபா மாநிலத்தின் மேற்கில் அமைந்து உள்ளது. சபா மாநிலத்தில் 24.9%; அதாவது 18,298 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும்; சபாவின் மொத்த மக்கள் தொகையில் தோராயமாக 14.7% கொண்டு உள்ளது.[1]
உட்பகுதி பிரிவில் உள்ள மிகப் பெரிய நகரம் கெனிங்காவ். இந்தப் பிரிவில் உள்ள மற்ற முக்கிய நகரங்கள்: பியூபோர்ட் கோலா பென்யூ; சிபாத்தாங்; தம்புனான் மற்றும் தெனோம்.[1] இந்தப் பிரிவின் கரையோரப் பகுதிகளில் பிசாயா, புரூணை மலாய்க்காரர்கள் மற்றும் கெடாயன் (Kedayan) இனத்தவர் குடியேறி உள்ளனர்.
குரோக்கர் மலைத்தொடரில் கடசான் மக்கள்
[தொகு]அதே வேளையில், குரோக்கர் மலைத்தொடரின் கிழக்கே உள்ள உள்நாட்டுப் பகுதிகளில் பெரும்பாலும் கடசான் டூசுன் மக்களும்; மற்றும் பல்வேறு துணைக் குழுக்களும் குடியேறி உள்ளனர்.
தம்புனான் நகரம் கடசான் கலாசசாரத்தின் முக்கிய மையமாகக் கருதப் படுகிறது.[2] அதே வேளையில், தெனோம் நகரம், மூருட் மக்கள் வாழும் மையப் பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரமாகும்.[3]
பெரும்பாலான நகரங்களில், குறிப்பாக பியூபோர்ட், கெனிங்காவ் மற்றும் தெனோம் ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையிலான சீன மக்கள் உள்ளனர். பெரும்பான்மையானவர் சீன ஹக்கா துணைக் குழுவைச் சேர்ந்தவர்கள்.[4]
வரலாறு
[தொகு]சபா, சரவாக் மாநிலங்களின் தற்போதைய பிரிவு எனும் அமைப்பு முறை ஜெர்மனிய வணிகர் ஒருவரின் மூலமாகப் பெறப்பட்ட அமைப்பு முறையாகும். அந்த அமைப்பு முறை வட போர்னியோ சார்ட்டட் நிறுவனத்திடம் (North Borneo Chartered Company) இருந்து பெறப்பட்டது.[5][6]
இந்த முறையை அமைத்தவர் பிரபு வான் ஓவர்பெக் (Baron von Overbeck). அவருக்குப் பின்னர் அந்த டிவிசன் முறை இன்றும் தொடர்கிறது.
மாநிலங்கள்
[தொகு]சபா மாநிலத்தின் உட்பகுதி பிரிவு பின்வரும் நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது:[1]
- பியூபோர்ட் மாவட்டம் (1,735 கிமீ2) (பியூபோர்ட்)
- கெனிங்காவ் மாவட்டம் (3,533 கிமீ2) (கெனிங்காவ்)
- கோலா பென்யூ மாவட்டம் (453 கிமீ2) கோலா பென்யூ
- நாபாவான் மாவட்டம் (6,089 கிமீ2) (நபாவான்)
- சிபித்தாங் மாவட்டம் (2,732 கிமீ2) (சிபித்தாங்)
- தம்புனான் மாவட்டம் (1,347 கிமீ2) (தம்புனான்)
- தெனோம் மாவட்டம் (2,409 கிமீ2) (தெனோம்)
இவற்றையும் பார்க்க
[தொகு]நூல்கள்
[தொகு]- Tregonning, K. G. (1965). A History Of Modern Sabah (North Borneo 1881–1963). University of Malaya Press.
- State of Sabah: Administrative Divisions Ordinance – Sabah Cap. 167 (PDF) of 1 November 1954; last amended on 16 September 1963, as amended in August 2010;
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "General Information". Lands and Surveys Department of Sabah. Borneo Trade. Archived from the original on 23 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ James Alexander (2006). Malaysia, Brunei and Singapore. New Holland Publishers. pp. 369–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86011-309-3.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Cecilia Leong (1982). Sabah, the first 100 years. Percetakan Nan Yang Muda.
- ↑ "Lun Bawang festival to bring cheer to Lawas". The Star. 10 May 2010. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
- ↑ Encyclopædia Britannica 1992, ப. 278.
- ↑ The National Archives 1945, ப. 2.