கோலா பென்யூ மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°34′12.72″N 115°35′38.39″E / 5.5702000°N 115.5939972°E / 5.5702000; 115.5939972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலா பென்யூ மாவட்டம்
Kuala Penyu District
சபா
Kuala Penyu District Office
கோலா பென்யூ மாவட்ட அலுவலகம்.
Location of கோலா பென்யூ மாவட்டம்
கோலா பென்யூ மாவட்டம் is located in மலேசியா
கோலா பென்யூ மாவட்டம்
கோலா பென்யூ மாவட்டம்
      கோலா பென்யூ மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°34′12.72″N 115°35′38.39″E / 5.5702000°N 115.5939972°E / 5.5702000; 115.5939972
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுஉட்பகுதி
நகராட்சி1 சனவரி 2022
தலைநகரம் கோலா பென்யூ
பரப்பளவு
 • மொத்தம்453 km2 (175 sq mi)
மக்கள்தொகை (2016)
 • மொத்தம்20,579
இணையதளம்ww2.sabah.gov.my/md.kpu/
ww2.sabah.gov.my/pd.kp/

கோலா பென்யூ மாவட்டம்; (மலாய்: Daerah Kuala Penyu; ஆங்கிலம்: Kuala Penyu District) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். கோலா பென்யூ (Kuala Penyu Town) நகரம், கோலா பென்யூ மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இந்த மாவட்டத்தில் டூசுன் பழங்குடியினர் மிகுதியாக வாழ்கின்றனர்.[1]

கோலா பென்யூ அதன் கடற்கரைகளுக்குப் பிரபலமானது. குறிப்பாக தெம்புரோங் கடற்கரை (Tempurung Beach); சாவாங்கான் கடற்கரை (Sawangan Beach); சுங்கை லபுவான் நீர் முகப்பு (Sungai Labuan Waterfront) போன்ற கடற்கரைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கோலா பென்யூ நகரின் மையத்தில் ஓடும் சுங்கை லபுவான் (Sungai Labuan) நதியின் பெயரில் இருந்து சுங்கை லபுவான் நீர் முகப்பிற்குப் பெயர் எடுக்கப்பட்டது.

இந்த மாவட்டத்திற்கு "ஆமை" வடிவத்திலான கற்களில் இருந்து அதன் பெயர் பெறப்பட்டது. மலாய் மொழியில் ’கோலா’ (Kuala) என்றால் ஆற்றின் முகத்துவாரம்; ’பென்யூ’ (Penyu) என்றால் ஆமை என்று பொருள்படும்.[1]

பொது[தொகு]

சபா, உட்பகுதி பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

வரலாறு[தொகு]

1960-களின் முற்பகுதியில், இந்தப் பகுதி "சித்தோம்போக்" (Sitompok) என்று பிரபலமாக அறியப்பட்டது. ஆமை வடிவத்திலான கற்கள் அதிகமாக இருந்ததை அந்தப் பெயர் குறிக்கின்றது. 1975-ஆம் ஆண்டில் கோலா பென்யூ முழு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது; மற்றும் நிர்வாக வணிக மையத்திற்கான மைய புள்ளியாகவும் நிறுவப்பட்டது.

மக்கள் தொகையியல்[தொகு]

2010-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோலா பென்யூ மாவட்டத்தின் மக்கள்தொகை 18,958. இவர்களில் முக்கியமானவர்கள் கடசான் (Kadazan People) அல்லது டூசுன் தாதானா (Dusun Tatana People) இனக் குழுவினர்கள் ஆகும். இவர்களே மிகப்பெரிய இனக்குழுக்களாகவும் உள்ளனர்.

அத்துடன் அருகில் உள்ள தெற்கு பிலிப்பீன்சு பகுதியின் சுலு தீவுக்கூட்டம் (Sulu Archipelago); மற்றும் மிண்டனாவோ (Mindanao) பகுதியில் இருந்தும், கணிசமான எண்ணிக்கையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களும் உள்ளனர்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

மேலும் காண்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலா_பென்யூ_மாவட்டம்&oldid=3708354" இருந்து மீள்விக்கப்பட்டது