புத்தாத்தான்

ஆள்கூறுகள்: 5°53′00″N 116°03′00″E / 5.88333°N 116.05000°E / 5.88333; 116.05000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தாத்தான்
நகரம்
Putatan Town
புத்தாத்தான் is located in மலேசியா
புத்தாத்தான்
புத்தாத்தான்
சபாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 5°53′00″N 116°03′00″E / 5.88333°N 116.05000°E / 5.88333; 116.05000
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுமேற்கு கரை பிரிவு
மாவட்டம்புத்தாத்தான் மாவட்டம்
மக்கள்தொகை (2021)
 • மொத்தம்100,000 (கணிப்பு)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு88200
மலேசியத் தொலைபேசி+60-88
மலேசிய வாகனப் பதிவெண்கள்SA; SY

புத்தாத்தான் என்பது (மலாய்: Pekan Putatan; ஆங்கிலம்: Putatan Town) மலேசியா, சபா மாநிலம், மேற்கு கரை பிரிவு, ரானாவ் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.

இந்த நகரம், கோத்தா கினபாலு பெருநகரப் பகுதியின் துணைக்கோள் நகரங்களில் ஒன்றாகும். இந்த நகருக்கு அருகாமையில் பெத்தகாஸ் (Petagas) எனும் மற்றும் ஒரு துணைக்கோள் நகரமும் உள்ளது.[1]

இந்த நகரத்திற்குக் கிழக்கில் பெனாம்பாங் மாவட்டம்; தெற்கில் பாப்பார் மாவட்டம்; வடக்கில் கோத்தா கினபாலு மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களுக்கு நடுவில் தான் புத்தாத்தான் நகரம் அமைந்துள்ளது. மேற்கில் தென் சீனக் கடல் உள்ளது.

வரலாறு[தொகு]

புத்தாத்தான் மாவட்டத்தைச் சுற்றிலும் புத்தாத் மரங்கள் அதிகமாக வளர்கின்றன. அதன் காரணமாக இந்த நகரும் புத்தாத்தான் என பெயரும் பெற்றது.

1884-ஆம் ஆண்டில் புரூணை சுல்தானகத்தின் ஆட்சியின் கீழ்; வடக்கு போர்னியோ நிறுவனத்தின் கீழ்; பிரிட்டிஷ் ஆட்சியில்; இந்தப் புத்தாத்தான் நகரம் ஒரு நிர்வாக மையமாக மாற்றப்பட்டது.[2]

புத்தாத்தான் நகரில் டூசுன் சமூகத்தினர் பெரும்பான்மை இனத்தவராய் வாழ்கிறார்கள். அடுத்த நிலையில் புரூணை மலாய்க்காரர்கள், கடசான் பழங்குடி மக்கள், பஜாவ் பழங்குடி மக்கள் மற்றும் சீனர்கள் வாழ்கிறார்கள்.[2]

மேற்கோள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தாத்தான்&oldid=3438384" இருந்து மீள்விக்கப்பட்டது