செம்பூர்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செம்பூர்ணா
மாவட்டம், நகரம்
செம்பூர்ணா கடற்கரையோரம்
செம்பூர்ணா கடற்கரையோரம்
அலுவல் சின்னம் செம்பூர்ணா
சின்னம்
Location of செம்பூர்ணா
நாடு மலேசியா
மாநிலம்சபா
பிரிவுடவாவு
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்133
இணையதளம்www.sabah.gov.my/md.sprn www.sabah.gov.my/pd.sprn
செம்பூர்ணா 1910 இல்.
செம்பூர்ணா மாநகரசபைக் கட்டிடம்.
செம்பூர்ணா குனாக் (Kunak) வீதி.

செம்பூர்ணா மலேசியாவில் சபா (Sabah) மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மீன்பிடி நகரம் ஆகும். இது போர்னியோ தீவின் வடகிழக்குக் கடற்கரையில், பாஜவ்வில் அமைந்துள்ளது. இந்த நகரம் இதே பெயரில் அமைந்த செம்பூர்ணா மாவட்டத்துக்குச் சொந்தமானது. இங்கு ஏற்கெனவே மக்கள் வாழ்ந்திருந்தாலும், மே 10, 1887 இலேயே இது சட்டபூர்வமாக நிறுவப்பட்டது. இந்த இடத்தின் பெயர் முதலில் ரொங் ராலுன் (Tong Talun) என்றே இருந்தது. பின்னரே செம்பூர்ணா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. செம்பூர்ணா என்ற பெயரின் பொருள் பாஜவ் மொழியில் ஓய்வுக்கான இடம் (place of rest).[1].

புவியியல்[தொகு]

செம்பூர்ணா, செம்பூர்ணா தீபகற்பத்தின் முனையில் சுலாவெசியில், டார்வல் பேயின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தண்டுவோ (Tanduo) என்ற கிராமத்திலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்நகரப் பகுதிக்குச் சொந்தமாக 40 இற்கு மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவற்றில் சிபாடன், மட்டாகிங், மாபுல், கப்பலாய் போன்ற பிரபல்யமான சுற்றுலா ஈர்ப்புத் தீவுகளும் அடங்குகின்றன. செம்பூர்ணா சிபாடன் தீவுக்குப் பயணிப்பதற்கான முக்கிய தொடக்கப்புள்ளியாகவும் உள்ளது.

சனத்தொகை[தொகு]

செம்பூர்ணாவின் சனத்தொகை 2010 இன் கணக்கெடுப்பின்படி 133,164.

மொழி[தொகு]

19 ஆம் நூற்றாண்டில் செம்பூர்ணா நிலப்பரப்பு பிலிப்பைன்ஸ் நாட்டை ஆட்சி செய்த ஸ்பானியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததால், செம்பூர்ணாவில் இன்னும் சபகானோ எனும் ஸ்பானிய மொழி பேசப்படுகிறது. மலேசியாவில் உள்ள நகரங்களில் செம்பூர்ணாவில் மட்டுமே இம்மொழி பேசப்படுகிறது.

பொருளாதாரம்[தொகு]

இங்கு உள்ளூர் பொருளாதாரத்துக்கான வரவாக மீன்பிடித்தலும், சந்தைப்படுத்தலும் அமைந்துள்ளன. முத்து உற்பத்தி இங்கு பிரதான தொழிலாக உள்ளது.

விமானநிலையம்[தொகு]

செம்பூர்ணா விமானநிலையம் (Semporna Airport, IATA: SMM, ICAO: WBKA) செம்பூர்ணா நகரமையத்துக்கு அருகில் உள்ளது. இது 609 மீற்றர் ஓடுபாதையைக் கொண்ட ஒரு சிறிய விமான நிலையம். இங்கு உள்ளூர் விமானச்சேவைகள் மட்டுமே உள்ளன.[2]

சுற்றுலா ஈர்ப்புகள்[தொகு]

செம்பூர்ணா ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலா ஈர்ப்புத் தளமாக உள்ளது. புகைப்படப் பிரியர்களுக்கும், கடலுணவு விரும்பிகளுக்கும் ஏதுவான இடமாகவும் உள்ளது. இங்கு டசின் கணக்கில் சிறிய பாரம்பரிய மீன்பிடிப்படகுகள் உள்ளன. ஆழ்கடல் நீர் மூழ்குவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகவும் உள்ளது. இங்கு குறிப்பிடத்தக்க பத்துக்கு மேற்பட்ட சுற்றுலா ஈர்ப்புத் தளங்கள் உள்ளன.

தூன் சாகரன் கடற்பூங்கா[தொகு]

செம்பூர்ணாவின் கடற்பூங்கா தூன் சாகரன் கடற்பூங்கா (Tun Sakaran Marinepark) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இக்கடற்பூங்கா 40 இற்கும் மேற்பட்ட பல்வேறு பரப்பளவுகளைக் கொண்ட, குறிப்பிடத்தக்க தீவுகளை உள்ளடக்கியது. இந்தக் கவர்ச்சியான தீவுகள் உலகின் சிறந்த நீர்மூழ்கும் இடங்களில் ஒன்றென இயற்கைப்பாதுகாப்பு மையத்தினால் 2004 இல் பிரகடனப்படுத்தப்பட்டது.[3]

தூன் சாகரன் அருங்காட்சியகம்[தொகு]

தூன் சாகரன் அருங்காட்சியகம் (Tun Sakaran Museum) செம்பூர்ணா நகர மையத்திலிருந்து 2 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

றெகாற்றா லேபா (Regatta Lepa)[தொகு]

றெகாற்றா லேபா செம்பூர்ணாவின் பாரம்பரியப் படகுப்போட்டி. இது வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் வர்ணங்களால் அலங்கரிக்கபட்ட படகுகளில் நடைபெறும்.[4][5]

  • சிபாடன் தேசியப்பூங்கா (Sipadan National Park)
  • பிக் யோன் ஸ்கூபா (Big John Scuba)[6]
  • ஸ்கூபாகொலிக்ஸ் (Scubaholics)
  • ஸ்கூபா ஜங்கி டைவிங் (Scuba Junkie Diving)
  • ரொறிப்பிக்கல் றிசேர்ச் அன்ட் கொன்வெசேசன்ஸ் சென்ரர் (Tropical Research and Conservation Centre)
  • சிபாடன் ஸ்கூபா (Sipadan Scuba)
  • போஹே டுலாங் ஐலண்ட் (Bohey Dulang Island)
  • போர்ணியோ ஸ்பீடி டைவ் (Borneo Speedy Dive)
  • சபா (Sabah)

மேற்கோள்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Semporna
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 4°29′N 118°37′E / 4.483°N 118.617°E / 4.483; 118.617

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பூர்ணா&oldid=2042681" இருந்து மீள்விக்கப்பட்டது