உள்ளடக்கத்துக்குச் செல்

சண்டக்கான்

ஆள்கூறுகள்: 05°50′0″N 118°07′0″E / 5.83333°N 118.11667°E / 5.83333; 118.11667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சண்டாக்கான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சண்டக்கான் நகரம்
Sandakan Town
சபா
மேலிருந்து, இடமிருந்து வலமாக:
சண்டக்கான் நகரம், சண்டக்கான் நகராண்மைக் கழகம், மாநில செயலகக் கட்டிடம், சண்டக்கான் விளையாட்டு வளாகம், சண்டக்கான் வட்டார நூலகம், சண்டக்கான் மாவட்டப் பள்ளிவாசல், சண்டக்கான் செயின்ட் மைக்கேல் தேவாலயம், தாம் குங் கோயில், சண்டக்கான் வளைகுடா
அடைபெயர்(கள்):
இயற்கை நகரம்
சின்ன ஆங்காங்
சண்டக்கான் நகரம் is located in மலேசியா
சண்டக்கான் நகரம்
சண்டக்கான் நகரம்
      சண்டக்கான் நகரம்
ஆள்கூறுகள்: 05°50′0″N 118°07′0″E / 5.83333°N 118.11667°E / 5.83333; 118.11667
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுசண்டக்கான்
மாவட்டம்சண்டக்கான்
புரூணை சுல்தானகம்15-ஆவது நூற்றாண்டு – 1658
சூலு சுல்தானகம்1658–1882
பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம்21 சூன் 1879
வடக்கு போர்னியோ தலைநகரம்1884
முடிவு பெற்றது1946
நகராண்மைக் கழகம்1 சனவரி 1982
மாநகரம்TBA
அரசு
 • நகராண்மைக் கழகத் தலைவர்பெனடிக்ட் அஸ்மத்
பரப்பளவு
 • மொத்தம்2,266 km2 (875 sq mi)
ஏற்றம்
10 m (30 ft)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்5,10,600
 • அடர்த்தி230/km2 (580/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேர வலயம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
மலேசிய அஞ்சல் குறியீடு
90000; 90999
மலேசியத் தொலைபேசி எண்+6-089
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்ES (1967-1980), SS (1980-2018), SM (தற்சமயம்)
இணையதளம்http://www.mps.sabah.gov.my/

சண்டக்கான் என்பது (மலாய்: Sandakan; ஆங்கிலம்: Sandakan; சீனம்: 山打根; ஜாவி: سنداکن) மலேசியா, சபா மாநிலம், சண்டக்கான் பிரிவு, சண்டக்கான் மாவட்டத்தின் தலைநகரம். முன்பு எலோபுரா (Elopura) என்று பல்வேறு காலங்களில் அறியப்பட்டது.[1]

சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவிற்கு அடுத்து இரண்டாவது மிகப் பெரிய நகரமாகவும் விளங்குகிறது. வடகிழக்கு போர்னியோ கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது.[2]

பொது

[தொகு]

இந்நகரம் தீவின் கிழக்கு கடற்கரையுடன் அமைந்துள்ளதுடன், சண்டக்கான் பிரிவின் நிர்வாக மையமாகவும் உள்ளது. இந்நகரம் முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோவின் தலைநகராக இருந்தது. சண்டக்கான் சபாவின் சூழலியல் சுற்றுலாவின் முக்கிய நுழைவாயிலாக உள்ளது.

இங்குள்ள செபிலாக் ஓராங் ஊத்தான் மறுவாழ்வு மையம் (Sepilok Orang Utan Sanctuary); மழைக்காடு டிஸ்கவரி மையம்; ஆமை தீவுப் பூங்கா (Turtle Islands National Park); கினாபாத்தாங்கான் ஆறு மற்றும் கோமந்தோங் குகைகள் குறிப்பிடத் தக்கவை.

சண்டக்கான் வானூர்தி நிலையம்

[தொகு]

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் பயன்படுத்திய விமானத்தளம் தற்போது சண்டாக்கான் வானூர்தி நிலையமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த விமானத் தளம் 6000 கட்டாய தொழிலாளர்கள்; ஜாவா தீவு குடியானவர்கள் மற்றும் கூட்டணி நாடுகளின் போர்க் கைதிகளைக் கொண்டு கட்டப்பட்டது.

எஞ்சிய ஆஸ்திரேலியக் கைதிகள், 1945-ஆம் ஆண்டில், சண்டாக்கான் விமானத் தளக் கட்டுமானத்திற்கு அனுப்பப் பட்டனர் அவர்களில் 6 பேர் மட்டுமே உயிர் தப்பிப் பிழைத்தனர்.[3]

வரலாறு

[தொகு]

சண்டாக்கான் நிறுவப் படுவதற்கு முன்பு, அந்தப் பகுதியின் பொருளாதார மேலாதிக்கத்திற்கான போராட்டத்தில் ஸ்பெயின் நாடும் சூலு சுல்தானகமும் ஈடுபட்டு வந்தன.

1864-ஆம் ஆண்டில், சூலு தீவுக் கூட்டத்தில் (Sulu Archipelago) இருந்த சுலு சுல்தானக உடைமைகளை ஸ்பெயின் முற்றுகையிட்டது. அதன் காரணமாக ஜெர்மனியின் பாதுகாப்பை சூலு பெற விரும்பியது.

அந்த வகையில் அப்போது அங்கு இருந்த ஜெர்மன் தூதரகச் சேவையின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு சண்டாக்கான் விரிகுடாவில் ஒரு நிலத்தை சூலு சுல்தானகம் வழங்கியது.

ஜெர்மனியின் தலையீடுகள்

[தொகு]

1878-ஆம் ஆண்டில், சூலு சுல்தானகம், வடகிழக்கு போர்னியோவை ஆஸ்ட்ரோ - ஹங்கேரிய (Austro-Hungarian) தூதர் ஒருவருக்கு விற்றது. பின்னர் அந்த வடகிழக்கு போர்னியோ பகுதி ஜெர்மானிய வணிகர் ஒருவரிடம் கைமாறியது.

இந்தப் பகுதியில் ஜெர்மனியின் தலையீடுகள் பிரித்தானியருக்குக் கவலையை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, சுலு தீவுக் கூட்டத்தின் மீது ஸ்பானிய இறையாண்மையை அங்கீகரிப்பதற்காக பிரிட்டன், ஜெர்மன் மற்றும் ஸ்பானியா நாடுகளுக்கு இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பெயர் 1885 மெட்ரிட் ஒப்பந்தம் (Madrid Protocol of 1885).[4]

பிரித்தானிய வட போர்னியோ நிறுவனம்

[தொகு]

1879-ஆம் ஆண்டில் பிரித்தானிய வட போர்னியோ நிறுவனம் (British North Borneo Company (BNBC), சண்டக்கானில் ஒரு புதிய குடியேற்றத்தை உருவாக்கத் தொடங்கியது. அதன் பின்னர் சண்டக்கான் செழிக்கத் தொடங்கியது. ஒரு வணிக வர்த்தக மையமாக மாறியது.

மற்றும் வடக்கு போர்னியோவின் முக்கிய நிர்வாக மையமாகவும் மாறியது. சண்டக்கானின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரித்தானிய ஹாங்காங்கில் இருந்து சீனர்கள் இடம்பெயர்வதையும் ஆங்கிலேயர்கள் ஊக்குவித்தனர்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் ஆதிக்கம்

[தொகு]

மற்றும் வடக்கு போர்னியோவின் முக்கிய நிர்வாக மையமாகவும் மாறியது. சண்டக்கானின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரித்தானிய ஹாங்காங்கில் இருந்து சீனர்கள் இடம்பெயர்வதையும் ஆங்கிலேயர்கள் ஊக்குவித்தனர்.

இருப்பினும், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்கள் இந்தப் பகுதியை ஆக்கிரமித்த போது சண்டக்கானின் வளர்ச்சி தடைப்பட்டது. போரினால் நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டது. புனரமைப்புச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், வடக்கு போர்னியோவின் நிர்வாக அதிகாரங்கள் இங்கிலாந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டன.

அதைத் தொடர்ந்து, வடக்கு போர்னியோவின் நிர்வாகத் தலைநகரம் ஜெசல்டன் (Jesselton) நகருக்கு மாற்றப்பட்டது. 1948 - 1955-ஆம் ஆண்டுகளின் காலனித்துவ அதிகாரப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரித்தானிய அரசாங்கம் சண்டக்கானில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தத் தொடங்கியது.

காலநிலை

[தொகு]

சண்டக்கான் வெப்பமண்டல மழைக்காட்டு தட்ப வெப்பத்தைக் கொண்டுள்ளதாக கோப்பன் காலநிலை வகைப்பாடு தெரிவிக்கிறது. இந்த நகரம் ஆண்டு முழுவதும் மழை பொழியும் இடமாக உள்ளது. அதிகபட்ச மழைப்பொழிவு நவம்பரில் இருந்து சனவரி வரை. அதிகப்பட்ச வெயில் 31 பாகை செல்சியசாகவும் குறைந்தபட்ச அளவு 24 பாகையாகவும் உள்ளது. சண்டாக்கானில் வருடத்திற்கு சராசரியாக 3100 மி.மீ. அளவு மழை பொழிகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், சண்டக்கான்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.9
(84)
28.9
(84)
30
(86)
31.1
(88)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
31.1
(88)
31.1
(88)
30
(86)
29.4
(85)
30.6
(87)
தாழ் சராசரி °C (°F) 24.4
(76)
24.4
(76)
24.4
(76)
24.4
(76)
24.4
(76)
24.4
(76)
23.9
(75)
23.9
(75)
23.9
(75)
23.9
(75)
24.4
(76)
24.4
(76)
24.4
(76)
பொழிவு mm (inches) 410
(16.14)
250
(9.84)
200
(7.87)
110
(4.33)
150
(5.91)
190
(7.48)
180
(7.09)
200
(7.87)
240
(9.45)
260
(10.24)
350
(13.78)
450
(17.72)
3,060
(120.47)
ஆதாரம்: http://www.weatherbase.com/weather/weather.php3?s=19469&refer=&units=metric

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sandakan was formerly known as 'Elopura' and is also the second-largest town in Sabah. Back in the days, Sandakan was also known as Sabah's very own 'Little Hong-Kong' due to a large amount of Chinese Migration from Hong Kong". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
  2. "Sandakan, city in Malaysia - Sandakan remains Sabah's second most important port, after Kota Kinabalu (KK)". www.wonderfulmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
  3. The Marches பரணிடப்பட்டது 2017-03-15 at the வந்தவழி இயந்திரம் Australia's War, 1939–1945
  4. Tregonning, H.G. (1970). The Philippine Claim to Sabah (PDF). The Malayan Branch of the Royal Asiatic Society.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சண்டக்கான்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்டக்கான்&oldid=3924924" இலிருந்து மீள்விக்கப்பட்டது