இலகாட் இடத்து
லகாட் டத்து நகரம் | |
---|---|
Lahad Datu | |
சபா | |
![]() லகாட் டத்து நகரம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°01′48″N 118°20′24″E / 5.03000°N 118.34000°Eஆள்கூறுகள்: 5°01′48″N 118°20′24″E / 5.03000°N 118.34000°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | தாவாவ் |
மாவட்டம் | லகாட் டத்து |
அமைவு | 1890 |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,501 km2 (2,510 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 27,887 |
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒசநே+8) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 911xx |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | ST |
லகாட் டத்து (மலாய்: Lahad Datu; ஆங்கிலம்: Lahad Datu; சீனம்: 拉哈达图) என்பது மலேசியா, சபா மாநிலம், தாவாவ் பிரிவு, லகாட் டத்து மாவட்டத்தில் உள்ள நகரம். இதுவே அந்த மாவட்டத்தின் தலைநகரமாகவும் இயங்குகிறது. சபா மாநிலத்தில், அண்மைய காலத்தில் அதிகமாக அறியப்பட்ட நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 430 கி.மீ. தென் கிழக்கே இருக்கும் இந்த நகரில், இந்தோனேசியாவின் தாக்கத்தை அதிகமாகக் காண முடியும்.
இங்கு டூசுன் பூர்வீக இனத்தைச் சேர்ந்த மக்கள் மிகுதியாக வாழ்கின்றனர். லகாட் டத்துவின் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான கொக்கோ, செம்பனை எண்ணெய் தோட்டங்கள் உள்ளன. காட்டு மரங்கள் ஏற்றுமதிக்கு முக்கியத் துறைமுகமாகவும் விளங்குகிறது. உள்ளூர் பயணப் போக்குவரத்திற்காக இங்குள்ள லகாட் டத்து வானூர்தி நிலையம் (Lahad Datu Airport) செயல்படுகிறது.
வரலாறு[தொகு]
லகாட் டத்துவில் நடைபெற்ற ஓர் அகழ்வாராய்ச்சியில் மிங் வம்சத்தின் (Ming dynasty) சீன மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த மண்பாண்டங்கள் மூலமாக, 15-ஆம் நூற்றாண்டில் இங்கு ஒரு குடியேற்றம் இருந்ததாக நம்பப்படுகிறது.[1]
லாகாட் டத்துவின் கிழக்கே துங்கு (Tunku) எனும் பெயரில் ஒரு கிராமம் உள்ளது. இது 19-ஆம் நூற்றாண்டில் கடற்கொள்ளையர்களுக்கும்; மற்றும் அடிமை வியாபாரிகளுக்கும் புகலிடமாக விளங்கியது.[2]
கி.பி 1408-இல் இடான் மொழி (Idaan Language) கையெழுத்துப் பிரதியின் அடிப்படையில், வடக்கு போர்னியோவில் இசுலாம் முதலில் இங்குதான் அறிமுகப் படுத்தப்பட்டதாக நம்பப் படுகிறது.
வெளிநாட்டு போராளிகளின் ஊடுருவல்கள்[தொகு]
1985 செப்டம்பர் 23-ஆம் தேதி அண்டை நாடான பிலிப்பீன்சு நாட்டில் இருந்து 15- 20 ஆயுதம் ஏந்திய மோரோ கடல்கொள்ளையர்கள் (Moro Pirates) லகாட் டத்து நகரத்தில் தரையிறங்கி, குறைந்தது 21 பேரைக் கொன்றனர்; மேலும் 11 பேருக்கு காயங்கள் விளைவித்தனர்.[3]
உள்ளூர் வங்கியில் இருந்து சுமார் $ 200,000; (அமெரிக்க டாலர்) மற்றும் மலேசியன் ஏர்லைன்சு நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து மற்றொரு $ 5,000 (அமெரிக்க டாலர்) கொள்ளையடித்துச் சென்றனர்.[4]
2013 பிப்ரவரி 13-ஆம் தேதி, இந்த லகாட் டத்து பட்டணத்திற்கு அருகில் இருக்கும் தண்டுவோ (Tanduo) எனும் கிராமத்தை, சூலு சுல்தானகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட சிலர் ஆக்கிரமித்துக் கொண்டனர். இரு வாரங்கள் போராட்டத்திற்குப் பின்னர் மலேசியப் பாதுகாப்பு படையினர் அந்தக் கிராமத்தை மீட்டனர்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Journey Through The Land Below The Wind". 23 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Oxford Business Group. The Report: Sabah 2011. Oxford Business Group. பக். 12–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-907065-36-1. https://books.google.com/books?id=nKJoQ4o-_DsC&pg=PA12.
- ↑ "Lahad Datu Recalls Its Blackest Monday". New Straits Times. 24 September 1987. 30 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Masayuki Doi (30 October 1985). "Filipino pirates wreak havoc in a Malaysian island paradise". The Sydney Morning Herald. 30 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Heirs of Sultan of Sulu pursue Sabah claim on their own". globalnation.inquirer.net. 20 February 2013.
மேலும் காண்க[தொகு]
பொதுவகத்தில் Lahad Datu தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- லகாட் டத்து வானூர்தி நிலையம்