வடக்கு போர்னியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வடக்கு போர்னியோ
North Borneo
United Kingdom

 

 

 

1877–1942
1945–1946

 

 

கொடி சின்னம்
நாட்டுப்பண்
God Save the Queen
1903-இல் வடக்கு போர்னியோ வரைப்படம்
தலைநகரம் கூடாட் (1881–1884);
சண்டக்கான் (1884–1945);
ஜெசல்டன் (1946)
மொழி(கள்) ஆங்கிலம், கடசான் - டூசுன், பஜாவு, மூருட், மலாய், சீனம்
அரசாங்கம் ஒப்பாவண நிறுவனம்
ஆளுநர்
 -  1881–1887 வில்லியம் திரேச்சர் (முதல்)
 -  1937–1946 ராபர்ட் ஸ்மித் (கடைசி)
வரலாற்றுக் காலம் New Imperialism
 -  வடக்கு போர்னியோ தற்காலிக அமைப்பு 26 ஆகஸ்டு 1881
 -  அரசு சாசனம் 1 நவம்பர் 1881
 -  பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் மே 1882
 -  பாதுகாவலர் 12 மே 1888
 -  சப்பானியர் ஆட்சி 2 சனவரி 1942
 -  போர்னியோ விடுதலை (1945) 10 சூன் 1945
 -  பிரித்தானிய முடியாட்சியுடன் இணைப்பு 15 சூலை 1946
நாணயம் வடக்கு போர்னியோ டாலர்
தற்போதைய பகுதிகள் மலேசியா

வடக்கு போர்னியோ அல்லது பிரித்தானிய வடக்கு போர்னியோ (ஆங்கிலம்: North Borneo அல்லது British North Borneo) என்பது போர்னியோ தீவின் வடக்குப் பகுதியில் இருந்த ஒரு பிரித்தானியப் பாதுகாப்பு நிலப்பகுதி ஆகும். தற்போது சபா என்று அழைக்கப்படுகிறது.[1]

1877 - 1878-ஆம் ஆண்டுகளில் குஸ்டாவ் ஓவர்பெக் (Gustav Overbeck) எனும் ஒரு ஜெர்மன் தொழிலதிபருக்கு புரூணை சுல்தானும்; சுலு சுல்தானும், ஒரு சலுகையின் அடிப்படையில் இணைந்து வழங்கிய ஒரு நிலப்பகுதியே வடக்கு போர்னியோ நிலப்பகுதி ஆகும்.

வரலாறு[தொகு]

1876-ஆம் ஆண்டில், அமெரிக்க வணிகர் ஜோசப் வில்லியம் டோரே (Joseph William Torrey) என்பவரிடம் இருந்து போர்னியோவின் மேற்கு கடற்கரையில் ஒரு சிறிய நிலத்தை குஸ்டாவ் ஓவர்பெக் வாங்கினார்.

1879-ஆம் ஆண்டில், குஸ்டாவ் ஓவர்பெக், அந்த நிலத்தின் அனைத்து உரிமைகளையும் ஆல்பிரட் டெண்ட் (Alfred Dent) என்பவருக்கு மாற்றிக் கொடுத்தார். 1881-ஆம் ஆண்டில், அந்த நிலத்தை நிர்வகிக்க, வடக்கு போர்னியோ தற்காலிக சங்கம் (North Borneo Provisional Association Ltd) எனும் ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது.[2]

வடக்கு போர்னியோ தற்காலிக சங்கம்[தொகு]

அதே ஆண்டு அந்த நிலத்திற்கு பிரித்தானிய அரசாங்கத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

1882-ஆம் ஆண்டு, வடக்கு போர்னியோ தற்காலிக சங்கம் என்பது வடக்கு போர்னியோ சார்ட்டர்ட் நிறுவனம் (North Borneo Chartered Company) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த நிறுவனம்தான் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் ஆகும்.

பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு பிரித்தானிய அரச அங்கீகாரம் வழங்கப்பட்டது; அருகாமையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்த இசுபானியர்களையும்; இந்தோனேசியாவில் இருந்த டச்சு அதிகாரிகளையும் கவலையடையச் செய்தது.

மாட்ரிட் ஒப்பந்தம்[தொகு]

இதன் விளைவாக, இசுபானியர்கள் வடக்கு போர்னியோவில் தங்கள் உரிமையையும் கேட்கத் தொடங்கினார்கள். 1885-ஆம் ஆண்டில் ’மாட்ரிட் புரோட்டோகால்’ (Madrid Protocol) எனப்படும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.[3]

அந்த வகையில் பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டத்தில் இசுபானியர்களின் செல்வாக்கு அங்கீகரிப்பட்டது. அந்தச் செல்வாக்கு வடக்கு போர்னியோவிற்கு அப்பால் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் உறுதி செய்யப்பட்டது.

மற்ற ஐரோப்பிய அரசுகளிடம் இருந்து மேலும் உரிமை கோரல்களைத் தவிர்ப்பதற்காக, 1888-இல் பிரித்தானியப் பாதுகாப்புப் பகுதியாக வடக்கு போர்னியோ மாற்றம் செய்யப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rutter, Owen (1922). "British North Borneo - An Account of its History, Resources and Native Tribes". Cornell University Library. Constable & Company Ltd, London. p. 157.
  2. Great Britain. Foreign Office (1888). British and Foreign State Papers. H.M. Stationery Office. 
  3. Northwestern University (1935). United Kingdom of Great Britain and Northern Ireland, etc. (Colonies, Protectorates and Mandated Territories). Northwestern University. http://digital.library.northwestern.edu/league/le0294al.pdf. 
  4. Renton, Alexander Wood; Robertson, Maxwell Anderson; Pollock, Frederick; Bowstead, William (1908). Encyclopædia of the laws of England with forms and precedents by the most eminent legal authorities. Sweet & Maxwell. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_போர்னியோ&oldid=3511017" இருந்து மீள்விக்கப்பட்டது