கடசான் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடசான் மொழி
Boros Dusun
Boos Kadazan
Kadazan Language
Kadazan Tangaa
நாடு(கள்)வடக்கு போர்னியோ (கிழக்கு மலேசியா)
பிராந்தியம்சபா, லபுவான்
இனம்220,000 கடசான் (2018)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
200,000  (date missing)
ஆஸ்திரோனீசிய மொழிகள்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3ஐ.எசு.ஓ 639-3
மொழிக் குறிப்புcoas2100[1]

கடசான் மொழி, (மலாய்: Bahasa Kadazan; ஆங்கிலம்: Coastal Kadazan அல்லது Kadazan Language அல்லது Boos Kadazan); என்பது மலேசியா, சபா மாநிலத்தில் உள்ள கடசான் மக்களின் (Kadazan People) பேச்சு வழக்கினைச் சார்ந்த மொழியாகும். அத்துடன் இந்த மொழி கடசான்-டூசுன் மொழி இனத்தைச் சேர்ந்த மொழி என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவின் (West Coast Division) பெனாம்பாங் (Penampang); பாப்பார் (Papar); மெம்பாக்குட் (Membakut); பியூபோர்ட் மாவட்டம் (Beaufort District); ஆகிய பகுதிகளில் உள்ள மக்களால் இந்த மொழி அதிகமாய்ப் பேசப்படுகின்றது.[2]

சிறப்பியல்புகள்[தொகு]

பிரித்தானிய காலனித்துவ அரசாங்கத்தின் ஆங்கில மொழிப் பயன்பாட்டினாலும்; மலேசிய நடுவண் அரசாங்கத்தின் மலாய் மொழி பயன்பாட்டுத் தாக்கத்தினாலும்; கடசான் மொழியின் பயன்பாடு குறைந்து வருகிறது. இந்தத் தாக்கங்கள் பிற சபா தாய்மொழிகளையும் பாதித்து வருகின்றன.

இந்த மொழியின் வீழ்ச்சியைத் தடுக்கும் கொள்கைகளைச் சபா மாநில அரசாங்கம் அறிமுகப்படுத்தி வருகின்றது. பொதுப் பள்ளிகளில் கடசான் மொழி மற்றும் பிற பழங்குடி மொழிகளைப் பயன்படுத்துவது வலியுறுத்தப்பட்டு வருகிறது. சபா மாநிலத்தில் கடசான் மொழி அதிகாரப்பூர்வமாக மொழியாக மாற்றப் படுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சபா கடசான்டூசுன் கலாச்சார சங்த்தின் (Kadazandusun Cultural Association Sabah) முயற்சிகளின் கீழ், 1995-ஆம் ஆண்டில், மத்திய பூண்டு-லிவான் பேச்சுவழக்கு (Bundu-Liwan Dalect), தரப்படுத்தப்பட்ட "கடசான்-டூசுன்" (Kadazandusun) மொழிக்கு அடிப்படையான மொழியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டது.[3][4]

மேற்கு கரை பிரிவு[தொகு]

சபா மாநிலத்தில் மேற்கு கரை பிரிவு அமைவிடம்

மேற்கு கரை பிரிவு (West Coast Division) சபா மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் 7,588 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. அத்துடன் 1,440 கி.மீ. நீளமான கடற்கரையையும் கொண்டது. மாநில நிலப்பரப்பில் 10.3%; மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 30% கொண்டுள்ளது. இங்கு கணிசமான அளவிற்கு கடசான் மக்கள் வாழ்கின்றனர்.

பஜாவ் (Bajau), பிசாயா (Bisaya), புரூணை மலாய்க்காரர்கள் (Bruneian Malay), டூசுன் (Dusun), இல்லானுன் (Illanun), கடசான் (Kadazan) மற்றும் கெடாயன் (Kedayan) பூர்வீகப் பழங்குடி மக்களுடன் கணிசமான எண்ணிக்கையிலான சீனர்களையும் உள்ளடக்கியது.[5][6]

மேற்குக் கடற்கரைப் பிரிவு பின்வரும் நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது:

மேற்கோள்[தொகு]

  1. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Coastal Kadazan". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  2. "The Kadazandusun language community is the largest language community of Sabah, Malaysia. The Kadazandusun language has 13 notable dialects with more than 300,000 speakers living in the districts of Ranau, Tambunan, Penampang, Papar, Tuaran, Kota Belud, and those parts of Kota Kinabalu outside the city". பார்க்கப்பட்ட நாள் 4 January 2023.
  3. "Official Language & Dialects". Kadazandusun Cultural Association Sabah (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
  4. Lasimbang, Rita; Kinajil, Trixie (2004). "Building Terminology in the Kadazandusun Language" (in en). Current Issues in Language Planning 5 (2): 131–141. doi:10.1080/13683500408668253. 
  5. Frans Welman (9 March 2017). Borneo Trilogy Volume 1: Sabah. Booksmango. pp. 167–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-616-245-078-5.
  6. Danny Wong Tze-Ken (2004). Historical Sabah: The Chinese. Natural History Publications (Borneo). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-812-104-0.

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடசான்_மொழி&oldid=3653233" இலிருந்து மீள்விக்கப்பட்டது