சரவாக் இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சரவாக் இராச்சியம்
State of Sarawak
சுதந்திர இராச்சியம் (1888 வரை)
ஐக்கிய இராச்சியத்தின் காப்புநாடு

 

1841–1941
1945–1946

 

 

கொடி சின்னம்
குறிக்கோள்
இலத்தீன்: Dum Spiro Spero[1][2]
(நான் சுவாசிக்கும்போது, நான் நம்புகிறேன்)[2]
நாட்டுப்பண்
கடலுக்கு அப்பால் சென்றது
1920களில் சரவாக் இராச்சியம்
தலைநகரம் கூச்சிங்
மொழி(கள்) ஆங்கிலம், இபான், மெலனாவு, பிதாயு, சரவால் மலாய், சீனம்
அரசாங்கம் முழுமையான முடியாட்சி,[3][4] காப்புநாடு
வெள்ளை இராசா
 -  1841–68 ஜேம்சு புரூக் (முதலாவது)
 -  1917–46 சார்லசு வைனர் புரூக் (கடைசி)
வரலாற்றுக் காலம் புதிய பேரரசுவாதம்
 -  நிறுவல் 24 செப்டம்பர் 1841
 -  காப்புநாடு 14 சூன் 1888
 -  சப்பானிய ஆளுகை 16 திசம்பர் 1941
 -  கூட்டுப்படைகளின் விடுவிப்பு 10 சூன் 1945
 -  முடிக்குரிய குடியேற்ற நாடு 1 சூலை 1946
பரப்பளவு
 -  1945 124,450 km² (Expression error: Unrecognized punctuation character ",". sq mi)
மக்கள்தொகை
 -  1841 est. 8,000 
 -  1848 est. 150,000 
 -  1893 est. 300,000 
 -  1933 est. 475,000 
 -  மதிப்பீடு. 600,000 
     அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km²  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
நாணயம் சரவாக் டொலர்
தற்போதைய பகுதிகள்  மலேசியா

சரவாக் இராச்சியம் அல்லது சரவாக் நாடு (State of Sarawak) என்பது போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பிரித்தானியக் காப்புநாடாகும். புரூணை சுல்தானகத்தில் இருந்து யேம்சு புரூக் என்ற ஆங்கிலேயர் பெற்ற சில பகுதிகளைக் கொண்ட ஒரு சுதந்திர நாடாக இது உருவாக்கப்பட்டது. 1850 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா 1850 இலும், ஐக்கிய இராச்சியம் 1864 இலும் இதனைத் தனி நாடாக அங்கீகரித்தன.

தனிநாடாக இது அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து, யேம்சு புரூக் புரூணையில் இருந்து மேலும் சில பகுதிகளை சரவாக்குடன் இணைத்துக் கொண்டார். இவரது ஆட்சிக்கு எதிராக நாட்டில் பல கிளர்ச்சிகள் இடம்பெற்றன. இக்கிளர்ச்சிகளை அடக்குவதற்கு ஏற்பட்ட செலவுகளாலும், அக்காலப்பகுத்யில் நிலவி வந்த பொருளாதார மந்த நிலையினாலும், புரூக் பெரும் கடனாளியானார். யேம்சு புரூக்கிற்குப் பின்னர் அவரது மருமகன் சார்லசு புரூக் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவரது ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் ஏற்றம் கண்டது, அரசுக் கடன்கள் குறைந்தன. பொதுக் கட்டமைப்புகள் உருவாகின. 1888 ஆம் ஆன்டில் இந்நாடு பிரித்தானியாவின் ஆளுகைக்குட்பட்ட காப்புநாடாக அறிவிக்கப்பட்டது.

பொருளாதார வளர்ச்சியை உயர்த்துவதற்காக, சார்லசு புரூக் சீனாவில் இருந்தும் சிங்கப்பூரில் இருந்தும் தொழிலாளர்களை வரவழைத்து வேளாண்மைப் பணிகளில் ஈடுபடுத்தினார். மிக விரைவிலேயே, சரவாக் உலகின் மிளகு உற்பத்தியில் முன்னணி இடத்திற்கு வந்தது. அத்துடன் எண்ணெயும் இயற்கை மீள்ம உற்பத்தியிலும் முன்னிலைக்கு வந்தது. சார்லசு புரூக்கிற்குப் பின்னர் அவரது மகன் சார்லசு வைனர் புரூக் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால் இரண்டாம் உலகப் போர், மற்றும் சப்பானியரின் வருகை இந்த இராச்சியத்திற்கு முடிவுப் புள்ளியாக அமைந்தது. 1942 இல் இப்பிராந்தியம் சப்பானியரின் இராணுவ ஆளுகைக்குக் கீழ் வந்தது. போரின் இறுதியில், 1946 இல் இது பிரித்தானிய முடிக்குரிய குடியேற்ற நாடாகியது. வைனர் ஆத்திரேலியாவில் தஞ்சம் அடைந்தார்.[5] பெரும்பாலான ஆத்திரேலிய, பிரித்தானியப் போர்க் கைதிகள் சரவாக்கில் சிறை வைக்கப்பட்டனர். பசிபிக் போர்க் காலத்தில் கூட்டுப் படைகள் கிழக்கில் தமது இருப்பை நிலை நிறுத்தினர். பின்னர் அவர்கள் போர்னியோ தீவை விடுவித்தனர். இக்காலப் பகுதியில், சரவாக்கின் முக்கிய நகரங்கள் குண்டுகளால் தாக்கப்பட்டன.[6] 1945 ஆகத்து 15 இல் சப்பானியப் படைகள் சரணடைந்ததை அடுத்து போர் முடிவடைந்தது. 1945 செப்டம்பரில் இருந்து சரவாக்கின் நிர்வாகம் பிரித்தானிய இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. வைனர் புரூக் நாட்டின் நிர்வாகத்தைக் கவனிக்கும் பொருட்டு நாடு திரும்பினார், ஆனாலும், அதன் நிருவாகத்தை பிரித்தானியாவிடம் அவர் ஒப்படைத்தார். 1946 சூலை 1 இல் சரவாக் பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாகியது.[7][8][9] இவ்விராச்சியம் 1963 செப்டம்பர் 16 இல் சரவாக் என்ற பெயரில் மலேசியக் கூட்டமைப்பில் ஒரு மாநிலமாக இணைந்தது.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Barley 2013, பக். 101.
  2. 2.0 2.1 Straumann 2014, பக். 63.
  3. Storey 2012, பக். 7.
  4. Great Britain. War Office 1942, பக். 123.
  5. Bayly & Harper 2005, பக். 217.
  6. Tan 2011.
  7. Yust 1947, பக். 382.
  8. Lockard 2009, பக். 102.
  9. Sarawak State Government 2014.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவாக்_இராச்சியம்&oldid=2782405" இருந்து மீள்விக்கப்பட்டது