கினபாலு மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கினபாலு மலை
Mount Kinabalu
京那巴鲁
MtKinabalu view from kundasan.jpg
கினபாலு மலையின் அழகிய தோற்றம்
உயர்ந்த இடம்
உயரம்4,095 m (13,435 ft)
இடவியல் முக்கியத்துவம்4,095 m (13,435 ft) 
உலகின் 20ஆவது பிரதான மலை
புவியியல்
கினபாலு மலை Mount Kinabalu 京那巴鲁 is located in மலேசியா
கினபாலு மலை Mount Kinabalu 京那巴鲁
கினபாலு மலை
Mount Kinabalu
京那巴鲁
போர்னியோவில் அமைவிடம்
அமைவிடம்சபா, போர்னியோ,
 மலேசியா
மலைத்தொடர்குரோக்கர் மலைத் தொடர்
Climbing
First ascentமலை ஏறுதல்[1]
மார்ச் 1851
இங்கிலாந்து ஹியூ லோ
1888
இங்கிலாந்து ஜான் வொயிட் ஹெட்

கினபாலு மலை (மலாய்: Gunung Kinabalu) என்பது தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவில் இருக்கும் மிகப் புகழ் பெற்ற மலையாகும். இந்த மலை கிழக்கு மலேசியாவின் சபா மாநிலத்தில் இருக்கிறது. கினபாலு தேசியப் பூங்காவில் இந்த மலை இருக்கிறது. உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.[2]

வட போர்னியோவில் இருக்கும் குரோக்கர் மலைத் தொடரிலும். மலாயாத் தீவு கூட்டத்திலும் இந்த மலை, மிக உயரமான மலையாகும். உலகின் பிரதான மலைகளில் கினபாலு மலை 20ஆவது இடத்தைப் பெறுகிறது.[3]

பொது[தொகு]

1997ஆம் ஆண்டு செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளைக் கொண்டு கினபாலு மலையின் உயரத்தை மறு ஆய்வு செய்தார்கள்.. அதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 4095 மீட்டர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே அதன் உயரம் 4101 மீட்டர்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.[4]

கினபாலு மலையின் சுற்றுச் சூழல் அமைப்பு, உலகின் முக்கியமான உயிரியல் தளமாகக் கருதப்படுகிறது. இங்கு 4500 வகையான தாவரங்கள், 326 வகையான பறவைகள், 100 வகையான் பாலூட்டிகள் வாழ்கின்றன.உலகின் அபூர்வமான ராபிள்சியா தாவரமும், ஓராங் ஊத்தான் எனும் மனிதக் குரங்குகளும் இந்த மலைத் தொடரில்தான் இருக்கின்றன.[5] யுனெஸ்கோ எனும் ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் மரபுடைமை தகுதியை கினபாலு வனப்பூங்கா பெற்றுள்ளது.[6]

வரலாறு[தொகு]

உலகின் மிக அரிதான தாவரங்களும், விலங்குகளும் கினபாலு மலையில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு இமாலய, ஆஸ்திரேலிய, இந்தோ மலாயா பகுதிகளைச் சேர்ந்த உயிர்ப் பொருட்கள் இருக்கின்றன. ஐரோப்பா, வட அமெரிக்காவில் உள்ள உயிர்ப் பொருட்களில் பாதி இங்கு இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே, உலகின் மிக முக்கியமான உயிர்ப் பொருள்களின் தளமாக கினபாலு மலைப் பூங்கா போற்றப்படுகிறது.[7]

1851இல் போர்னியோவில் காலனித்துவ ஆளுநர்களில் ஒருவராக இருந்த பிரித்தானியர் ஹியூ லோ என்பவர்தான் முதன் முதலில் கினபாலு மலையின் உச்சியை அடைந்தார் என்று சொல்லப்படுகிறது. அது தவறாகும். ஹியூ லோவின் மலையேற்றத்திற்கான சான்றுகள் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டு இருந்ததால் அவரின் பெயர் வரலாற்றில் முதலிடம் பெறுகிறது.

ஜான் வொயிட்ஹெட்[தொகு]

ஆனால், ஜான் வொயிட்ஹெட் எனும் தாவரவியலாளர்தான், கினபாலு மலையின் உச்சியை அடைந்த முதல் மனிதர் ஆகும்.[8] அவர் 1888இல் அந்தச் சாதனையைச் செய்தார். அதற்கு முன், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே, பூர்வீகக் குடிமக்கள் மலை உச்சியை அடைந்து இருக்கலாம் என்பதற்கான சான்றுகளும் அண்மையில் கிடைத்துள்ளன. இருப்பினும், அந்தச் சான்றுகள் இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லை.

இப்போதைய காலங்களில் கினபாலு மலையை ஏறுவது என்பது எளிதாக இருக்கலாம். இரண்டே நாட்களில் ஏறி இறங்கிவிடலாம். ஆனால், 150 ஆண்டுகளுக்கு முன்னால், அந்த மலையில் ஏறுவது என்பது மிகவும் கடினமான செயலாக இருந்தது. 1851இல் லாபுவான் தீவின் பிரித்தானிய அரசு ஆளுநராக ஹியூ லோ என்பவர் இருந்தார். துடிப்புமிக்க மத்திய இளைஞர். அப்போது அவருக்கு வயது 27. மலை ஏறுவதில் மூன்று வாரங்கள் போராட்டங்கள் செய்தார். முயற்சி வெற்றி பெறவில்லை.

ஹியூ லோ[தொகு]

ஹியூ லோ என்பவர் மலாயாவில் பல வளர்ச்சி மாற்றங்களைச் செய்தவர். மலேசிய இந்தியர்களுக்கு நிறைய உதவிகளைச் செய்த நல்ல ஒரு மனிதர். ரோணா, அரோண்டா, ரஜூலா, ஜலகோபால் போன்ற கப்பல்கள் தமிழ்நாட்டில் இருந்து தமிழர்களை மலாயாவுக்கு கொண்டு வருவதற்கு முன்னரே, ஹியூ லோ தமிழர்களை மலாயாவில் கொண்டு வந்து சேர்த்தவர்.

மலாயாவில் ரப்பரை அறிமுகம் செய்த மாமனிதர் என்று மலேசியர்கள் இன்றுவரை புகழ்கின்றனர். எந்த ஒரு மலேசிய வரலாற்றுப் பாட நூலிலும் ஹியூ லோவின் பெயர் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும். அந்த அளவிற்கு மலேசியாவில் புகழ் பெற்றவர். மலேசியர்களின் மனங்களின் ஆழமான வரலாற்றுச் சுவடுகளைப் பதித்துச் சென்ற பிரித்தானியர்களில் ஹியூ லோ முதலிடம் வகிக்கிறார்.

கியாவ் கிராமம்[தொகு]

முதன் முதலில் கினபாலு மலையின் உச்சி அடைவதில் ஹியூ லோ பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டார். 42 பேர் அடங்கிய குழுவினருடன் அந்த மலையில் ஏறினார். ஏறுவதற்கு ஒன்பது நாட்கள் பிடித்தன.[9] ஹியூ லோவுடன் ஜான் வொயிட்ஹெட் எனும் தாவரவியலாளரும் உடன் சென்றார். அங்கு அவர்கள் கண்ணைக் கவரும் அழகிய பறவைகளைக் கண்டார்கள்.

கினபாலு மலையின் ஆகக் கீழே கியாவ் எனும் ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் இருந்துதான் ஹியூ லோ குழுவினர் தங்களின் பயணத்தைத் தொடங்கினார்கள். இங்கேதான் மலேசியப் புகழ் கடமாயான் நீர்வீழ்ச்சியும் இருக்கிறது. அங்குள்ள கிராமவாசிகள் அக்குழுவினர்களுக்கு வழிகாட்டிகளாகவும் சுமை தூக்குபவர்களாகவும் உதவிகள் செய்தனர்.

லிலியன் கிப்ஸ்[தொகு]

கியாவ் கிராமத்திற்கு அருகாமையில் புண்டு தகான் எனும் கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் இருந்தவர்கள்தான் பெரும்பாலான வழிகாட்டிகளையும் சுமை தூக்குபவர்களையும் வழங்கினார்கள். புண்டு தகான் கிராமத்தில் குந்திங் லகாடான் எனும் இளைஞர் இருந்தார். அவர்தான் கினபாலு மலை ஏறிய முதல் பூர்வீக வழிகாட்டி ஆகும். பிரித்தானிய தாவரவியலாளர் லிலியன் கிப்ஸ் என்பவர்தான் கினபாலு மலை உச்சியை அடைந்த முதல் பெண்மணி ஆகும். 1910 பிப்ரவரி மாதம் அந்தச் சாதனையைச் செய்தார்.

கினபாலு மலையின் இயற்கை மகத்துவத்தை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்த பெருமை லிலியன் கிப்ஸ் எனும் பெண்மணியையே சாரும். இவர் ஒரு தாவரவியலாளர். கினபாலு மலைச் சாரலில் கிடைத்த தாவரங்களைச் சேகரித்தார். அவற்றை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். இங்கிலாந்து தாவர அரசக் கழகம் அந்தத் தாவரங்களின் அரியத் தன்மைகளுக்கு அங்கீகாரம் வழங்கியது. 1964 ஆம் ஆண்டு கினபாலு மலை மலேசிய அரசாங்கத்தின் அரசிதழ்ப் பதிவைப் பெற்றது.

ஒவ்வோர் ஆண்டும் 200,000 பேர் கினபாலு மலையின் அடிவாரம் வரை செல்கின்றனர். அவர்களில் பத்து விழுக்காட்டினர் மட்டுமே மலையின் உச்சிகுச் சென்று ஏறி பெருமை கொள்கின்றனர்.[10]

2015 பூகம்பம்[தொகு]

5 ஜூன் 2015 ஆம் திகதி காலை மணி 07:15, கினாபாலு மலையை சுற்றியுள்ள பகுதிகள் பூகம்பத்தால் சேதமடைந்தது. மலையேறிகள் மற்றும் மலை வழிகாட்டிகள் உள்ளிட்ட பதினெட்டு பேர்கள் பூகம்பத்தால் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த மகத்தான நிலச்சரிவால் கொல்லப்பட்டனர். ராணவு மற்றும் மேற்கு சபா பகுதிகளும் பூகம்பத்தால் பாதிக்கபட்டன. “டொங்கி இயர்” என அழைக்கப்படும் கினாபாலு மலை உச்சி பெரிதும் சேதமடைந்தது.[11]

படத் தொகுப்பு[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Mt Kinabalu: a guide to the climb of a lifetime.". மூல முகவரியிலிருந்து 2013-01-10 அன்று பரணிடப்பட்டது.
 2. Mount Kinabalu is the most dramatic feature in Sabah and the tallest peak between the Himalayas & the New Guinea.
 3. "World Top 50 Most Prominent Peaks". மூல முகவரியிலிருந்து 2012-11-10 அன்று பரணிடப்பட்டது.
 4. "On 19 Aug 1997, everyone has learnt from the local and national newspapers that the official height of Mount Kinabalu is 4,095.2m (13,432.26 ft), not 4,101 m (13,455 ft).". மூல முகவரியிலிருந்து 1 அக்டோபர் 2013 அன்று பரணிடப்பட்டது.
 5. "Kinabalu National Park, about 90 kilometres from Kota Kinabalu, is one of the world's most significant natural environments.". மூல முகவரியிலிருந்து 2012-11-26 அன்று பரணிடப்பட்டது.
 6. It has been designated as a Centre of Plant Diversity for Southeast Asia and is exceptionally rich in species with examples of flora from the Himalayas, China, Australia, Malaysia, as well as pan-tropical flora.
 7. In December 2000, UNESCO recognised Mount Kinabalu as Malaysia's first World Heritage Site.[தொடர்பிழந்த இணைப்பு]
 8. Hiung, C. S., R. Mandalam, and C. Chin. 2004. The Hugh Low Trail: The Quest for the Historical Trail to the Summit of Kinabalu. The Sabah Society, Kota Kinabalu.
 9. "In 1851, Sir Hugh Low, then the Colonial Secretary for the British crown colony of Labuan, took nine days to reach the summit plateau, traveling in a group of 42 people.". மூல முகவரியிலிருந்து 2012-06-18 அன்று பரணிடப்பட்டது.
 10. "oday more than 200,000 people visit the park each year. Of these, about ten percent have successfully reached the summit.". மூல முகவரியிலிருந்து 2012-06-18 அன்று பரணிடப்பட்டது.
 11. "Sabah quake: Donkey’s Ear Peak on Mount Kinabalu destroyed". Star Media Group Berhad. பார்த்த நாள் 1 May 2019.

படக்காட்சி[தொகு]

கினபாலு மலையின் அகலப் பரப்புக் காட்சி

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mount Kinabalu
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கினபாலு_மலை&oldid=3366073" இருந்து மீள்விக்கப்பட்டது