லங்காவி
லங்காவி | |
---|---|
Langkawi District | |
மலேசியா | |
குறிக்கோளுரை: சுற்றுலா நகரம் (City of Tourism) | |
கெடாவில் லங்காவி அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 6°21′N 99°48′E / 6.350°N 99.800°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
நகரம் | லங்காவி |
தொகுதி | குவா |
உள்ளூராட்சி | லங்காவி நகராண்மைக் கழகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 478.48 km2 (184.74 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 85,588 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 07xxx |
மலேசியத் தொலைபேசி எண் | +6-09 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | KV |
லங்காவி அல்லது லங்காவி மாவட்டம் (ஆங்கிலம்: Langkawi; மலாய்: Langkawi; சீனம்: 浮罗交怡县) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். லங்காவி என்பது ஒரு தீவு; ஒரு நகரம்; ஒரு மாவட்டம் ஆகும். மலேசியப் பெருநிலத்தில் இருந்து 30 கி.மீ. அப்பால் அந்தமான் கடலும் மலாக்கா நீரிணையும் இணைகின்ற பகுதியில் இருக்கின்றது.
இந்தத் தீவுக் குழுமத்தில் 104 தீவுகள் உள்ளன. அதில் லங்காவி தீவு என்பது ஆகப் பெரிய தீவு ஆகும். இந்தத் தீவைக் கெடாவின் பொன் கலன் (Jewel of Kedah;மலாய்: Langkawi Permata Kedah) என்றும் அழைப்பார்கள்.[1]
இந்தத் தீவுக் குழும மாவட்டம், வடமேற்கு மலேசியாவின் கடற்கரையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும்; தாய்லாந்து எல்லையை ஒட்டி உள்ள கோ தருடா (Ko Tarutao) எனும் தீவிற்கு சில கிலோமீட்டர் தெற்கிலும் அமைந்துள்ளது.
பொது
[தொகு]லங்காவி தீவு கெடாவின் நிர்வாக மாவட்டங்களில் ஒன்றாகும். குவா அதன் பெரிய நகரமாக உள்ளது. லங்காவிக்கு அருகாமையில் அமைந்து இருக்கும் பந்தாய் செனாங் (Pantai Cenang) தீவு, மிகவும் பிரபலமான கடற்கரை மற்றும் சுற்றுலாப் பகுதியாகும்.
இந்தத் தீவுகள் கெடா மாநிலத்தின் ஒரு பகுதியாகும். லங்காவி தீவு தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ளது. இதன் மக்கள் தொகை 64,792. லங்காவி தீவிற்கு அருகாமையில் உள்ள தூபா தீவில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர்.[2][3]
மற்றத் தீவுகளில் மனிதக் குடியேற்றம் இல்லை. லங்காவித் தீவில் பெரிய பட்டணம் துவா ஆகும். லங்காவி தீவு ஒரு தீர்வையற்றச் சுற்றுலா மையமாகத் திகழ்கின்றது.[4]
சொல் பிறப்பியல்
[தொகு]லங்காவி என்றால் மலாய் மொழியில் செம்பழுப்பு கழுகு என்று பொருள் படும். மலாய் மொழியில் helang என்றால் கழுகு. இதன் சுருக்கம் "lang". Kawi என்றால் செம்பழுப்பு என்று பொருள். இரு சொற்களையும் சேர்த்து Langkawi என்று அழைக்கப் படுகின்றது.[5]
2008-ஆம் ஆண்டில் கெடா சுல்தான் அப்துல் ஹாலிம் முவட்சாம் ஷா தம் பொன் விழாவின் போது லங்காவி தீவிற்கு கெடாவின் பொன் கலன் என்று சிறப்புப் பெயர் சூட்டினார்.[6]
புவியியல்
[தொகு]லங்காவியின் மொத்தப் பரப்பளவு 47,848 எக்டர். லங்காவி தீவு வடக்கில் இருந்து தெற்கு வரை 25 கி.மீ நீளம் கொண்டது. தீவு முழுமையும் காடுகள் நிறைந்து உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளும் உள்ளன.[7]
லங்காவி மாவட்ட நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]லங்காவி மாவட்டம் 6 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
- ஆயர் அங்காட் - Ayer Hangat
- போகோர் - Bohor
- கெடவாங் - Kedawang
- குவா நகரம் - Kuah
- பாடாங் மாட்சிராட் - Padang Matsirat
- உலு மலாக்கா - Ulu Melaka
தட்ப வெப்ப நிலை
[தொகு]லங்காவி சம தட்ப வெப்ப நிலையைக் கொண்ட ஓர் இடமாகும். ஆண்டுக்கு 2,400 மி.மீ. (94 அங்) மழை பெய்கிறது. டிசம்பர் மாத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரையில் வரட்சியான காலம். மார்ச் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரையில் நீண்ட மழைக் காலம். ஆகஸ்டு மாதத்தில் அதிகமாக மழை பெய்கிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், லங்காவி மழைப்பொழிவு - 2020 | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பொழிவு mm (inches) | - | ||||||||||||
மழைப்பொழிவுmm (inches) | 18.3 (0.72) |
45.4 (1.787) |
227.7 (8.965) |
198.3 (7.807) |
201.1 (7.917) |
212.5 (8.366) |
248.9 (9.799) |
487.4 (19.189) |
318.4 (12.535) |
280.3 (11.035) |
238.3 (9.382) |
68.4 (2.693) |
2,545 (100.197) |
ஆதாரம்: Malaysian Meteorological Department |
தட்பவெப்ப நிலைத் தகவல், லங்காவி மழைப்பொழிவு - 2019 | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பொழிவு mm (inches) | 11.2 (0.441) |
78 (3.07) |
97 (3.82) |
321.4 (12.654) |
166.6 (6.559) |
338.4 (13.323) |
326.8 (12.866) |
326 (12.83) |
365.6 (14.394) |
370.8 (14.598) |
231.6 (9.118) |
32 (1.26) |
2,665.4 (104.937) |
ஆதாரம்: Malaysian Meteorological Department |
தட்பவெப்ப நிலைத் தகவல், லங்காவி மழைப்பொழிவு - 2018 | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பொழிவு mm (inches) | 37 (1.46) |
152.8 (6.016) |
160.8 (6.331) |
228.6 (9) |
195.4 (7.693) |
51 (2.01) |
317.6 (12.504) |
286.6 (11.283) |
301.8 (11.882) |
260.6 (10.26) |
272.8 (10.74) |
61.6 (2.425) |
2,326.6 (91.6) |
ஆதாரம்: Malaysian Meteorological Department |
தட்பவெப்ப நிலைத் தகவல், லங்காவி மழைப்பொழிவு - 2017 | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பொழிவு mm (inches) | 4.8 (0.189) |
5.2 (0.205) |
430 (16.93) |
113.2 (4.457) |
168.8 (6.646) |
233.6 (9.197) |
140.8 (5.543) |
693 (27.28) |
426.2 (16.78) |
225.4 (8.874) |
90.4 (3.559) |
46.4 (1.827) |
2,577.8 (101.488) |
ஆதாரம்: Malaysian Meteorological Department |
ஆண்டு | மழைப் பொழிவு |
---|---|
Source | Department Of Statistics Malaysia பரணிடப்பட்டது 2015-01-09 at the வந்தவழி இயந்திரம் |
மக்கள்தொகையியல்
[தொகு]லங்காவியில் உள்ள 99 தீவுகளில் நான்கு தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர்.
- லங்காவி (புலாவ் லங்காவி, முக்கிய தீவு)
- துபா தீவு
- ரெபாக் தீவு
- டாயாங் புந்திங் தீவு
மக்கள்தொகை ஏறக்குறைய 99,000. அவர்களில் 65,000 பேர் லங்காவி தீவில் வாழ்கிறார்கள். இவர்களில் 90% மலாய்க்காரர்கள். மற்ற இனக் குழுக்களில் முக்கியமாக சீனர்கள், இந்தியர்கள் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள்.
அதிகாரப்பூர்வ மொழி
[தொகு]இசுலாம் மதம் மலாய் இனத்தவர்களால் முதன்மையாகப் பின்பற்றப்படுகிறது. மற்ற முக்கிய மதங்கள் இந்து மதம் (முக்கியமாக இந்தியர்கள் மத்தியில்), பௌத்தம் (முக்கியமாக சீன மற்றும் தாய்லாந்து மக்கள் மத்தியில்), மற்றும் கிறிஸ்தவம் (பெரும்பாலும் சீனர்கள்).
மலாய் மொழி அதிகாரப்பூர்வ மொழி. ஆங்கிலம் பரவலாகப் பேசப்படுகிறது. உள்ளூர் மக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது. பெரும்பாலான பழங்குடியினர் கெடா மலாய் மொழியில் பேசுகிறார்கள். சிறுபான்மையினர் சீனம், சயாமிய மொழி மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் பேசுகிறார்கள்.
இனக்குழு | 2010[8] | |
---|---|---|
எண்ணிக்கை | % | |
மலாய்க்காரர்கள் | 79,146 | 83.51% |
இதர பூமிபுத்ராக்கள் | 153 | 0.16% |
சீனர்கள் | 4,325 | 4.56% |
இந்தியர்கள் | 1,747 | 1.84% |
இதர மக்கள் | 217 | 0.23% |
மலேசியர் அல்லாதவர் | 9,189 | 9.70% |
மொத்தம் | 94,777 | 100% |
லங்காவி காட்சியகம்
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ "Pantai Cenang - Everything you Need to Know About Pantai Cenang". langkawi-info.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-03.
- ↑ Charles de Ledesma; Mark Lewis; Pauline Savage (2006). the Rough Guide to Malaysia, Singapore and Brunei (5th ed.). Rough Guides. p. 218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84353-687-1.
- ↑ "Langkawi Eagle Square - Dataran Lang". Langkawi Insight.
- ↑ "Shopping in Langkawi". ABC Langkawi இம் மூலத்தில் இருந்து 2012-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120716191000/http://www.abclangkawi.com/index.php/shopping-in-langkawi/. பார்த்த நாள்: 2011-10-18.
- ↑ Holly Hughes; Sylvie Murphy; Alexis Lipsitz Flippin; Julie Duchaine (14 January 2010). Frommer's 500 Extraordinary Islands. John Wiley & Sons. p. 237. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-59518-3. பார்க்கப்பட்ட நாள் 9 February 2014.
- ↑ Mohamed Zahir Haji Ismail (2000). The Legends of Langkawi. Utusan Publications & Distributors. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789676110275.
- ↑ "Geography". Langkawi Online. Archived from the original on 23 ஏப்பிரல் 2015.
- ↑ "Taburan Penduduk Dan Ciri-Ciri Asas Demografi 2010" (PDF). Department of Statistics, Malaysia. p. 63. Archived from the original (PDF) on 28 September 2011.
மேலும் காண்க
[தொகு]- பொதுவகத்தில் Langkawi District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.