உள்ளடக்கத்துக்குச் செல்

பாலிங் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாலிங் (மக்களவை தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாலிங் (P016)
மலேசிய மக்களவைத் தொகுதி
கெடா
Baling (P016)
Federal Constituency in Kedah
மக்களவைத் தொகுதி
மாவட்டம்பாலிங் மாவட்டம்; கெடா
வாக்காளர் தொகுதிபாலிங் தொகுதி
முக்கிய நகரங்கள்பாலிங்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
நீக்கப்பட்ட காலம்1959
கட்சிபெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்முகமது தௌபிக் சொகாரி
(Mohammed Taufiq Johari)
வாக்காளர்கள் எண்ணிக்கை168,847
தொகுதி பரப்பளவு261 ச.கி.மீ
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் பாலிங் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (89.6%)
  சீனர் (4.3%)
  இதர இனத்தவர் (1.2%)

பாலிங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Baling; ஆங்கிலம்: Baling Federal Constituency; சீனம்: 加油联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், பாலிங் மாவட்டத்தில் (Baling District) உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P016) ஆகும்.

பாலிங் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாலிங் தொகுதி 50 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[1]

பொது

[தொகு]

பாலிங் நகரம்

[தொகு]

பாலிங் (Baling) நகரம், மலேசியா, கெடா, பாலிங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். தாய்லாந்து நாட்டின் தெற்கே இருக்கும் பெத்தோங் நகருக்கு மிக அருகில் இந்தப் பாலிங் நகரம் அமைந்து உள்ளது. சுங்கை பட்டாணி நகரில் இருந்து 56 கி.மீ. வடக்கே உள்ளது.

கெடா மாநிலத்தில் 12 மாவட்டங்கள் உள்ளன. அந்த மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தின் பெயர் பாலிங் மாவட்டம். அந்த மாவட்டத்தில் தான் பாலிங் நகரம் அமைந்து உள்ளது.

பாலிங் மாவட்டம்

[தொகு]

கெடா மாநிலத் தலைநகரமான அலோர் ஸ்டார் நகரில் இருந்து ஏறக்குறைய 110 கி.மீ தொலைவில் இந்த மாவட்டம் அமைந்து உள்ளது. இந்த மாவட்டத்திற்குத் தெற்கே பேராக் மாநிலம்; வடக்கே தாய்லாந்து நாட்டின் பெத்தோங் நகரம் உள்ளன.

மலேசிய வரலாற்றில் சிறப்பு பெற்ற நகரங்களில் பாலிங் நகரமும் ஒன்றாகும். 1948-ஆம் ஆண்டில் இருந்து 1960-ஆம் ஆண்டு வரை, மலாயா பொதுவுடைமைப் போராளிகளுக்கு எதிராகப் பாலிங் மாவட்டத்தில் அவசரகாலப் பிரகடனம் செய்யப் பட்டது.

மலாயா வரலாற்றில் புகழ்பெற்ற பாலிங் பேச்சு இங்குதான் நடைபெற்றது. மலாயா பொதுவுடைமை கட்சிக்கும் மலாயா அரசாங்கத்திற்கும் இடையே அந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.[2]

பாலிங் பேச்சு

[தொகு]

பாலிங் பேச்சு அல்லது பாலிங் பேச்சுவார்த்தை (மலாய்: Rundingan Damai Baling; ஆங்கிலம்: Baling Talks) எனும் பேச்சுவார்த்தை பாலிங் நகரத்தில், 1955 டிசம்பர் மாதம் 28 - 29-ஆம் தேதிகளில், மலாயா பொதுவுடைமை கட்சிக்கும் (Communist Party of Malaya - CPM); மலாயா அரசாங்கத்திற்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையாகும். பாலிங் அரசாங்க ஆங்கிலப் பள்ளியில் (Government English School) நடைபெற்றது.[3]

மலாயா அவசரகால நிலைமையைத் தீர்க்கும் முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் மலாயா அரசாங்கத்தைப் பிரதிநிதித்து துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman), டத்தோ சர் டான் செங் லோக் (Dato Sir Tan Cheng Lock), சிங்கப்பூர் முதலமைச்சர் டேவிட் மார்சல் (David Marshall) ஆகியோர் கலந்து கொண்டனர்.[4][5]

பாலிங் நாடாளுமன்றத் தொகுதி

[தொகு]
பாலிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பாலிங் தொகுதி சுங்கை மூடா தொகுதியில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டு, பாலிங் தொகுதி என மறுபெயரிடப்பட்டது
மலாயா கூட்டரசு நாடாளுமன்றம்
1-ஆவது 1959–1963 அருன் அப்துல்லா
(Harun Abdullah)
கூட்டணி
(அம்னோ)
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது 1963–1964 அருன் அப்துல்லா
(Harun Abdullah)
கூட்டணி
(அம்னோ)
2-ஆவது 1964–1969
1969–1971 நாடாளுமன்றம் ஒத்திவைப்பு[6]
3-ஆவது 1971–1973 சாபி அப்துல்லா
(Shafie Abdullah)
கூட்டணி (அம்னோ)
1973–1974 கூட்டணி (அம்னோ)
4-ஆவது 1974–1978
5-ஆவது 1978–1982 மொகட் நக்காய் அகமத் மொகட்.
(Mohd. Nakhaie Ahmad Mohd.)
பாஸ்
6-ஆவது 1982–1986 செரோஜி அரோன்
(Seroji Haron)
பாரிசான் (பாஸ்)
7-ஆவது 1986–1990 ராஜா அரிபின் ராஜா சுலைமான்
(Raja Ariffin Raja Sulaiman)
8-ஆவது 1990–1995
9-ஆவது 1995–1999
10-ஆவது 1999–2004 தைப் அசாமுடன் முகமட் தாயிப்
(Taib Azamudden Md Taib)
பாஸ்
11-ஆவது 2004–2008 மசித்தா இப்ராகிம்
(Mashitah Ibrahim)
பாரிசான் (அம்னோ)
12-ஆவது 2008–2013 தைப் அசாமுடன் முகமட் தாயிப்
(Taib Azamudden Md Taib)
பாஸ்
13-ஆவது 2013–2018 அப்துல் அசீஸ் அப்துல் ரகீம்
(Abdul Azeez Abdul Rahim)
பாரிசான் (அம்னோ)
14-ஆவது 2018–2022
15-ஆவது 2022–present அசன் சாத்
(Hassan Saad)
பெரிக்காத்தான் (பாஸ்)

பாலிங் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள் 132,099 -
வாக்களித்தவர்கள் 110,353 82.75%
செல்லுபடி வாக்குகள் 109,064 100.00%
செல்லாத வாக்குகள் 1,289 -
பெரும்பான்மை 29,137 26.71%
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான் நேசனல்

பாலிங் வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள் (%)
அசன் சாத்
(Hassan Saad)
பெரிக்காத்தான் 64,493 59.13%
அப்துல் அசீஸ் அப்துல் ரகீம்
(Abdul Azeez Abdul Rahim)
பாரிசான் 35,356 32.42%
சொகாரி அப்துல்லா
(Johari Abdullah)
பாரிசான் 8,636 7.92%
பசீர் அப்துல் ரகுமான்
(Bashir Abdul Rahman)
உள்நாட்டு போராளிகள் கட்சி 579 0.53%

மேற்கோள்கள்

[தொகு]
  • "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
  • "15th General Elaction Malaysia".

மேலும் காண்க

[தொகு]

வார்ப்புரு:கெடா மக்களவைத் தொகுதிகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிங்_மக்களவைத்_தொகுதி&oldid=4016038" இலிருந்து மீள்விக்கப்பட்டது