செர்டாங் கெடா
செர்டாங் கெடா Serdang, Kedah ஜோர்ஜ் டவுன் பினாங்கு பெருநகர பகுதி | |
---|---|
நாடு | மலேசியா |
மாநிலம் | கடாரம் |
உருவாக்கம் | 1800 |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | அப்துல் ரகுமான் பின் ஹாஜி |
நேர வலயம் | MST (ஒசநே+8) |
செர்டாங் கெடா, (Serdang Kedah) மலேசியாவின் கடாரம் மாநிலத்தில்,உள்ள ஒரு முக்கிய நகரம் ஆகும். இது பண்டார் பாரு மாவட்ட நிர்வாக நகரம் ஆகும். இந்த நகரத்திற்கு அருகாமையில் கூலிம் நகரமும், பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால் நகரமும், பேராக் மாநிலத்தின் பாரிட் புந்தார் மற்றும் சிலாமா நகரமும் உள்ளன. [1]
தமிழர்கள்[தொகு]
செர்டாங்கில் வாழும் மக்களில் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பவர்கள் மலாய்க்காரர்கள் ஆகும். அடுத்த நிலையில் 15 விழுக்காடு சீனர்களும் 10 விழுக்காடு தமிழர்களும் இருக்கின்றார்கள். இங்கு இனப் பாகுபாடு இல்லாமல் மூன்று இன மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள்.
தமிழ்ப்பள்ளி[தொகு]
இங்கு மூன்று தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவை :
- கணேசர் தமிழ்ப்பள்ளி - செர்டாங் நகர் அருகில்
- புந்தார் தமிழ்ப்பள்ளி - தோட்டபுறம்
- சோம் தமிழ்ப்பள்ளி - தோட்டபுறம்
இருப்பிடம்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Portal rasmi MDBB". http://www.mdbb.gov.my/home.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://kumari.mullimalar.in/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0/.