உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய நாடாளுமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய நாடாளுமன்றம்
Parliament of Malaysia
Parlimen Malaysia
14-ஆவது மக்களவை, 2018–2023
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
அவைகள்
வரலாறு
தோற்றுவிப்பு11 செப்டம்பர் 1959; 65 ஆண்டுகள் முன்னர் (1959-09-11)
முன்புமலாயா கூட்டமைப்பின் சட்டமன்றம்
தலைமை
காலியாக உள்ளது
10 மே 2024 முதல்
ஜொகாரி அப்துல், பாக்காத்தான்பி.கே.ஆர்
19 டிசம்பர் 2022 முதல்
அம்சா சைனுதீன், பெரிக்காத்தான்பெர்சத்து
19 டிசம்பர் 2022 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்292
மேலவை 70
மக்களவை 222
மலேசிய மேலவை அரசியல் குழுக்கள்
10 மே 2024

அன்வார் இப்ராகிம் முதலாம் அமைச்சரவை (52)

  •      காகாசான் (2)
   சபா அன்புக் கட்சி (1)

எதிரணி (10)

காலி (8)
மலேசிய மக்களவை அரசியல் குழுக்கள்
24 செப்டம்பர் 2022

அன்வார் இப்ராகிம் முதலாம் அமைச்சரவை (147)

நம்பிக்கை மற்றும் வழங்கல் (6)

எதிரணி (69)

  மூடா (1)
மலேசிய மேலவை செயற்குழுக்கள்
4
  • தேர்வுக் குழு
  • அவைக் குழு
  • சலுகைகள் குழு
  • நிலையியல் கட்டளைக் குழு
மலேசிய மக்களவை செயற்குழுக்கள்
5
  • தேர்வுக் குழு
  • பொது கணக்கு குழு
  • அவைக் குழு
  • சலுகைகள் குழு
  • நிலையியல் கட்டளைக் குழு
தேர்தல்கள்
நியமனங்கள்
வாக்களிப்பு முறைகள்
19 நவம்பர் 2022
அடுத்த மலேசிய மக்களவை தேர்தல்
பிப்ரவரி 17, 2027க்குள்
கூடும் இடம்
மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம், கோலாலம்பூர், மலேசியா
வலைத்தளம்
www.parlimen.gov.my

மலேசிய நாடாளுமன்றம் (Parliament of Malaysia) என்பது மலேசியாவின் அரசமைப்புச் சபையாகும். இது வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை அடிப்படையாகக் கொண்டது. மலேசிய நாடாளுமன்றம் மக்களவை மற்றும் மேலவை ஆகியவற்றைக் கொண்ட ஈரவைகளைக் கொண்டது. யாங் டி பெர்துவான் அகோங் (மன்னர்) நாட்டின் தலைவர் என்ற வகையில் நாடாளுமன்றத்தின் மூன்றாவது அங்கம் ஆகும்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நாடாளுமன்றம் கூடுகிறது. மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம், கோலாலம்பூர், பெர்தானா தாவரவியல் பூங்காவில், மலேசிய தேசிய நினைவுச் சின்னத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

மலாயா கூட்டமைப்பு

[தொகு]

வரலாற்று அடிப்படையில், 1957-ஆம் ஆண்டில், பிரித்தானியர்களிடம் இருந்து மலேசிய விடுதலை பெற்றது. அதன் பின்னர்1963-ஆம் ஆண்டில் மலேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் எந்த ஒரு மாநிலமும் நாடாளுமன்றங்களைக் கொண்டிருக்கவில்லை.

1863-ஆம் ஆண்டு முதல், சரவாக் மாநிலம் மட்டும் அதன் நிர்வாகப் பணிகளுக்காக சொந்த மாநிலச் சட்டமன்றத்தைக் கொண்டிருந்தது. மலாயா, சிங்கப்பூர், சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் சட்டம் இயற்றும் சட்டமன்றங்களை உருவாக்குவதற்கு பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் அனுமதி வழங்கி இருந்தது. இருப்பினும், அவை உச்சக்கட்ட சட்டங்களை உருவாக்கும் தகுதிகளைப் பெற்று இருக்கவில்லை.[1]

சரவாக் விசயத்தில், வெள்ளை இராசாக்களும் பிரித்தானிய சரவாக் முடியாட்சி ஆளுநர்களும் உச்சக்கட்டத் தகுதிகளைப் பெற்று இருந்தனர். தீபகற்ப மலேசியாவைப் பொருத்த வரையில் பிரித்தானிய மலாயாவின் ஆணையர்களான மலாயாவின் ஐக்கிய இராச்சிய உயர் ஆணையர்கள் மட்டுமே உச்சக்கட்ட அதிகாரங்களைக் கொண்டிருந்தனர். சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் பொறுப்புகள் பொதுமக்களிடம் வழங்கப்படவில்லை.

ரீட் ஆணையம்

[தொகு]

மலாயாவின் அரசியலமைப்பை ரீட் ஆணையம் வரைவு செய்தது. ரீட் ஆணையம் (Reid Commission) என்பது பிரித்தானியரிடம் இருந்து மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், மலாயா அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நடுநிலையான ஆணையமாகும். இந்த ஆணையத்தின் பரிந்துரைகளுக்குப் பின்னர், 1957 ஆகஸ்டு 31-ஆம் தேதி பிரித்தானியரிடம் இருந்து மலாயா விடுதலை பெற்றது.

மலாயா ஆட்சி முறை பிரித்தானிய முறையைப் பின்பற்றியது. இந்த முறை ஓர் ஈரவை நாடாளுமன்றம் ஆகும். மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டது ஓர் அவை; அதற்கு மக்களவை என்று பெயர். மற்ற ஓர் அவையான மேலவைக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் உள்ளன. மேலவையின் சில உறுப்பினர்கள் நாட்டின் பேரரசரால் நியமிக்கப்படுகிறார்கள்.

மலேசிய அரசியலமைப்பு

[தொகு]

1959-ஆம் ஆண்டு வரை மலாயாவின் சட்டமன்ற அமைப்பாக மலாயா கூட்டமைப்பின் சட்டமன்றம் தொடர்ந்து செயல்பட மலேசிய அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியது. பின்னர் 1959-இல், விடுதலைக்குப் பிந்தைய முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. மலாயாவின் முதல் நாடாளுமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.[2]

மலாயாவின் முதல் நாடாளுமன்றக் கூட்டம், 1959 செப்டம்பர் மாதம், மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தன்னார்வப் படையின் தலைமையக கட்டிடத்தில் (Federated Malay States Volunteer Force) கூடியது. அந்தக் கட்டிடம் அப்போது மேக்சுவெல் சாலையில் ஒரு குன்றின் உச்சியில் இருந்தது. தற்போது அந்தச் சாலை துன் இசுமாயில் சாலை என்று அழைக்கப்படுகிறது. மேலவை கீழே இருந்த தரை தளத்தின் மண்டபத்தில் கூடியது. மக்களவை முதல் தளத்தில் உள்ள மண்டபத்தில் கூடியது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம்

[தொகு]

மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான், 1959 டிசம்பரில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் கட்ட பரிந்துரைத்தார். கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு RM 18 மில்லியன் செலவானது. செப்டம்பர் 1962-இல் கட்டுமானம் தொடங்கியது.

18 மாடிகள் கொண்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில், இரு அவைகளுக்கும் மூன்று மாடிகள் ஒதுக்கப்பட்டன. மற்ற மாடிகளில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்டன.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா; மலேசியாவின் மூன்றாவது மலேசியப் பேரரசர் துவாங்கு சையத் புத்ரா இப்னி அல்மர்கூம் சையத் அசன் சமாலுல்லைல் அவர்களால், 21 நவம்பர் 1963 அன்று நடைபெற்றது.[3][4]

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2013-ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல்

[தொகு]
[உரை] – [தொகு]
மலேசியாவில் 2013 மே 5 இல் நடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள்
கட்சி (கூட்டணி) வாக்குகள் வாக்கு % இடங்கள் வாக்கு % +/–
தேசிய முன்னணி BN 5,237,699 47.38 133 59.91 7*
அம்னோ UMNO 3,252,484 29.42 88 39.64 Increase9
மலேசிய சீனர் சங்கம் MCA 867,851 7.85 7 3.15 8
மலேசிய இந்திய காங்கிரசு MIC 286,629 2.59 4 1.80 Increase1
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி PBB 232,390 2.10 14 6.31
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி Gerakan 191,019 1.73 1 0.45 1
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி SUPP 133,603 1.21 1 0.45 5
ஐக்கிய சபா கட்சி PBS 74,959 0.68 4 1.80 Increase1
சரவாக் மக்கள் கட்சி PRS 59,540 0.54 6 2.70
சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி SPDP 55,505 0.50 4 1.80
ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு UPKO 53,584 0.48 3 1.35 1
Liberal Democratic Party LDP 13,138 0.12 0 0.00 1
ஐக்கிய சபா மக்கள் கட்சி PBRS 9,467 0.09 1 0.45
மக்கள் முற்போக்குக் கட்சி PPP 7,530 0.07 0 0.00
மக்கள் கூட்டணி PR 5,623,984 50.87 89 40.09 Increase7
மக்கள் நீதிக் கட்சி PKR 2,254,328 20.39 30 13.51 1
ஜனநாயக செயல் கட்சி DAP 1,736,267 15.71 38 17.12 Increase10
மலேசிய இஸ்லாமிய கட்சி PAS 1,633,389 14.78 21 9.46 2
மாநில சீர்திருத்தக் கட்சி STAR 45,386 0.41 0 0.00
அகில மலேசிய இஸ்லாமிய முன்னணி Berjasa 31,835 0.29 0 0.00
சரவாக் தொழிலாளர் கட்சி SWP 15,630 0.14 0 0.00
சபா முற்போக்கு கட்சி[a] SAPP 10,099 0.09 0 0.00 2
Love Malaysia Party PCM 2,129 0.02 0 0.00
மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி KITA 623 0.01 0 0.00
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி பெர்சமா 257 0.00 0 0.00
சுயேட்சைகள் IND 86,935 0.79 0 0.00
செல்லுபடியான வாக்குகள் 11,054,577
பழுதடைந்த வாக்குகள்|202,570
மொத்த வாக்குகள் (84.84%) 11,257,147 100.0 222 100.0
வாக்களிக்காதோர் 2,010,855
பதிவு செய்த வாக்காளர்கள் 13,268,002
சாதாரண வாக்காளர்கள் 12,885,434
தொடக்க வாக்காளர்கள் 235,826
அஞ்சல் வாக்குகள் 146,742
வாக்கு வயது (21 இற்கும் மேற்பட்டோர்) 17,883,697
மலேசிய மக்கள் தொகை 29,628,392

மூலம்: Election Commission of Malaysia
மூலம்: Nohlen et al. [1]

  1. 2008 தேர்தலின் பின்னர் சபா முற்போக்கு கட்சி தேசிய முன்னனியில் இருந்து விலகியதனால், 2 மேலதிக இடங்கள் இழப்பு ஏற்பட்டது.

2022-ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தல்

[தொகு]
ed {{{2}}}
கட்சி வேட்பாளர்கள் வாக்குகள் இடங்கள்
வாக்குகள் % வெற்றி % +/–
பாக்காத்தான் அரப்பான் PH 213 5,801,327 37.46 83 37.3
மக்கள் நீதிக் கட்சி PKR 99 0 0.00 31 14.1
ஜனநாயக செயல் கட்சி DAP 55 0 0.00 40 18.2
அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி) AMANAH 54 0 0.00 8 3.6
ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு UPKO 5 0 0.00 2 0.9
மலேசிய ஐக்கிய மக்களாட்சி கூட்டணி MUDA 6 74,392 0.48 1 0.5 புதிது
பெரிக்காத்தான் நேசனல் PN 170 4,700,819 30.35 73 33.2
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி (சபா தவிர்த்து) BERSATU 86 0 0.00 28 12.7
மலேசிய இஸ்லாமிய கட்சி PAS 62 74763 0.00 44 20.0
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி GERAKAN 20 0 0.00 0 0
இணைக்கப் படாத நேரடி வேட்பாளர்கள் PN 2 ? 0.00 1 0 புதிது
பாரிசான் நேசனல் BN 178 3,462,231 22.36 30 13.6
அம்னோ UMNO 117 0 0.00 26 11.8
மலேசிய இந்திய காங்கிரசு MIC 9 0 0.00 1 0.5
மலேசிய சீனர் சங்கம் MCA 44 0 0.00 2 0.9
ஐக்கிய சபா மக்கள் கட்சி PBRS 2 0 0.00 1 0.5
மலேசிய அன்புக் கட்சி PCM 1 0 0.00 0 0
மலேசியா மக்கள் சக்தி கட்சி MMSP 1 0 0.00 0 0 புதிது
அகில மலேசிய இந்தியர் முன்னேற்ற முன்னனி IPF 1 0 0.00 0 0 புதிது
மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் KIMMA 1 0 0.00 0 0 புதிது
இணைக்கப் படாத நேரடி வேட்பாளர்கள் BN 2 0 0.00 1 0.5
சரவாக் கட்சிகள் கூட்டணி GPS 31 610,812 3.94 22 10.0
ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி PBB 14 0 0.00 14 6.4
சரவாக் மக்கள் கட்சி PRS 6 0 0.00 5 2.3
சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி PDP 4 0 0.00 1 0.5
சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி SUPP 7 0 0.00 2 0.9
சபா மக்கள் கூட்டணி GRS 13 202,376 1.31 6 2.7
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி BERSATU Sabah 6 0 0.00 4 1.8
ஐக்கிய சபா கட்சி PBS 4 0 0.00 1 0.5
தாயகம் ஒற்றுமை கட்சி STAR 2 0 0.00 1 0.5
சபா முற்போக்கு கட்சி SAPP 1 0 0.00 0 0
சபா பாரம்பரிய கட்சி WARISAN 51 281,732 1.82 3 1.4
மலேசிய தேசிய கட்சி PBM 5 9159 0.00 1 0.5
சமூக மக்களாட்சி நல்லிணக்கக் கட்சி KDM 7 0 0.00 1 0.5 புதிது
தாயக இயக்கம் GTA 125 108,654 0.70 0 0
உள்நாட்டு போராளிகள் கட்சி PEJUANG 68 0 0.00 0 0 புதிது
அனைத்து மலேசிய இசுலாமிய முன்னணி BERJASA 9 0 0.00 0 0
மலேசிய வலிமைமிகு பூமிபுத்ரா கட்சி PUTRA 31 0 0.00 0 0 புதிது
இந்திய முஸ்லிம் கூட்டணி கட்சி IMAN 4 0 0.00 0 0 புதிது
காகாசான் பங்சா GB 13 0 0.00 0 0 புதிது
PSM-PRM கூட்டணி 17 0 0.00 0 0
மலேசிய சமூகக் கட்சி PSM 1 0 0.00 0 0
மலேசிய மக்கள் கட்சி PRM 16 0 0.00 0 0
சரவாக் ஐக்கிய மக்கள் கூட்டணி PERKASA 14 62,943 0.41 0 0
ஐக்கிய சரவாக் கட்சி PSB 7 0 0.00 0 0 புதிது
சரவாக் பூர்வீக மக்கள் கட்சி PBDS 3 0 0.00 0 0
இருவாட்சி நிலக் கட்சி PBK 4 0 0.00 0 0
சபா மக்கள் ஒற்றுமைக் கட்சி PPRS 1 0 0.00 0 0
மக்கள் முதல் கட்சி PUR 1 0 0.00 0 0
சரவாக் மக்கள் விழிப்புணர்வு கட்சி SEDAR 1 0 0.00 0 0 புதிது
சுயேட்சைகள் IND 107 109,459 0.71 2 0.9
செல்லுபடியாகும் வாக்குகள் 0
செல்லாத வாக்குகள் 0
மொத்த வாக்குகள் (வாக்காளர் எண்ணிக்கை: 0.00%) 15,487,338 100.00 222 100.00 TBA
வாக்கு அளிக்காதவர் 0
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 21,173,638
சாதாரண வாக்காளர்கள் 20,905,366
காலை நேரத்து வாக்காளர்கள் 265,531
அஞ்சல் வாக்காளர்கள் 365,686
வாக்களிக்கும் வயது 18-க்கும் மேல் 21,173,638
மலேசியாவின் மக்கள்தொகை 32,258,900

சான்று: Election Commission of Malaysia (SPR)[5]

2023-ஆம் ஆண்டு நாடாளுமன்ற அமைப்பு

[தொகு]
பாரிசான் நேசனல் தலைமையிலான எதிர்க்கட்சி (100) பாக்காத்தான் அரப்பான் தலைமையிலான கூட்டணி அரசு (122)*
79 18 3 1 8 113
பாரிசான் நேசனல் GS O WR பாக்காத்தான் அரப்பான்
மலேசிய நாடாளுமன்றம் (மக்களவை), 16 சூலை 2018 (222 தொகுதிகள்)
பாரிசான் நேசனல் தலைமையிலான கூட்டணி அரசு (115)* பாக்காத்தான் அராப்பான் தலைமையிலான எதிர்க்கட்சி (104)
41 39 19 8 9 7 7 90
பாரிசான் நேசனல் பெரிக்காத்தான் நேசனல் GPS GRS வேறு WR பாக்காத்தான் அராப்பான்
மலேசிய நாடாளுமன்றம் (மக்களவை), 10 அக்டோபர் 2022 (219 இடங்கள் - 3 காலி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Official Portal of the Sarawak Government". sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 15 May 2024.
  2. Dieter Nohlen, Florian Grotz & Christof Hartmann (2001) Elections in Asia: A data handbook, Volume II, p152 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-924959-8
  3. The Straits Times: Architect who has evolved own style over the years, 2 November 1963, page 1; accessed 23 February 2014
  4. The Straits Times: The big step forward, 2 November 1963, page 1; accessed 23 February 2014
  5. "Dashboard SPR". PILIHAN RAYA UMUM KE-15. Suruhanjaya Pilihan Raya Malaysia. Archived from the original on 20 September 2020. பார்க்கப்பட்ட நாள் 5 November 2022.


மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_நாடாளுமன்றம்&oldid=4094583" இலிருந்து மீள்விக்கப்பட்டது