மலேசிய நடுவண் வங்கி
Appearance
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
---|---|
துவக்கம் | சனவரி 26, 1959 |
ஆளுனர் | நோர் சம்சியா யூனோஸ் (Nor Shamsiah Mohd Yunus) |
மத்திய வங்கி | மலேசியா |
நாணயம் | மலேசிய ரிங்கிட் MYR (ஐ.எசு.ஓ 4217) |
வலைத்தளம் | www |
பேங்க் நெகாரா மலேசியா ஆங்கிலம்: Central Bank of Malaysia; மலாய்: Bank Negara Malaysia (BNM); ஜாவி: بڠك نڬارا مليسيا) என்பது மலேசியாவின் நடுவண் வங்கியாகும்.
1959-ஆம் ஆண்டு, சனவரி 26-ஆம் நாள் தோற்றுவிக்கப்பட்டது. பணத்தை அச்சடித்தல்; மலேசிய அரசுக்கு நிதி ஆலோசகராகச் சேவை செய்தல்; போன்றவை இதன் முக்கியப் பணிகள் ஆகும். இதன் தலைமையகம் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் உள்ளது.
இந்த வங்கி மட்டுமே மலேசிய ரிங்கிட்டைப் புழக்கத்தில் வெளியிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரே நிறுவனம் ஆகும்.
வங்கியின் அதிகாரங்கள்
[தொகு]மலேசியா நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட மத்திய வங்கி சட்டத்தின் மூலம் இந்த வங்கி அதிகாரம் பெற்று இயங்குகிறது.
தற்போதைய சட்டம், காலம் மற்றும் எதிர்காலத்தின் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அவ்வப்போது புதிய சட்டம் உருவாக்கப்பட்டு; திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
ஆளுநர்கள்
[தொகு]ஆளுநர் | காலம் | |
---|---|---|
1 | டான் ஸ்ரீ வில்லியம் ஓவர்ட் வில்காக் | 26 சனவரி 1959 - ஜூலை 1962 |
2 | துன் இசுமாயில் முகமது அலி | ஜூலை 1962 - சூலை 1980 |
3 | டான் ஸ்ரீ அப்துல் அசீஸ் தாகா | ஜூலை 1980 - ஜூன் 1985 |
4 | டான் ஸ்ரீ டத்தோ ஜாபார் உசேன் | ஜூன் 1985 - மே 1994 |
5 | டான் ஸ்ரீ டத்தோ அகமத் பின் முகமட் டான் | மே 1994 - ஆகஸ்ட் 1998 |
6 | டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ அலி அபுல் அசன் சுலைமான் | 15 செப்டம்பர் 1998 - 30 ஏப்ரல் 2000 |
7 | டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் செத்தி அக்தார் அசீஸ் | 1 மே 2000 - 30 ஏப்ரல் 2016 |
8 | டான் ஸ்ரீ முகம்மது பின் இப்ராகிம் | 1 மே 2016 - 15 சூன் 2018 |
9 | டத்தோ நோர் அம்சியா முகமட் யூனுசு | 1 சூலை 2018 – |
அந்நிய செலாவணி கையிருப்பு
[தொகு]31 சூலை 2004 | US$54 பில்லியன் |
31 டிசம்பர் 2004 | US$66 பில்லியன் |
31 சூலை 2005 | US$78 பில்லியன் |
31 மார்ச் 2007 | US$88 பில்லியன் |
31 சூலை 2007 | US$99 பில்லியன் |
31 டிசம்பர் 2007 | US$101 பில்லியன்[1] |
31 மார்ச் 2008 | US$120 பில்லியன்[2] |
29 அக்டோபர் 2021 | US$116 பில்லியன்[3] |
மேலும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இசுலாமிய பணவர்த்தக சட்டம் பரணிடப்பட்டது 2011-02-02 at the வந்தவழி இயந்திரம்
மேலும் காண்க
[தொகு]- ↑ "BNM Press Statements". bnm.gov.my. Archived from the original on 25 January 2009. பார்க்கப்பட்ட நாள் 17 January 2008.
- ↑ "International Reserves of BNM as at 31 March 2008". Bank Negara Malaysia இம் மூலத்தில் இருந்து 14 ஏப்ரல் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080414022122/http://www.bnm.gov.my/index.php?ch=8&pg=14&ac=1606.
- ↑ "International Reserves of BNM as at 29 October 2021". Bank Negara Malaysia. https://www.bnm.gov.my/-/international-reserves-of-bank-negara-malaysia-as-at-29-october-2021.