பிரசரானா மலேசியா
வகை | அரசு சார்ந்த நிறுவனம் |
---|---|
முதன்மை நபர்கள் | டான் ஸ்ரீ சமாலுடின் இப்ராகிம் தலைவர் முகமட் அசருடின் மாட் சா தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். புரொட்யூத் தத் |
தொழில்துறை | பொது போக்குவரத்து. விரைவு இலகு போக்குவரத்துச் சேவை (எல்ஆர்டி), ஒற்றைத் தண்டூர்தி, ரேபிட் பேருந்து, பேருந்து |
சேவைகள் | உரிமையாளர் மற்றும் நடத்துநர் தற்போது: எதிர்காலத்தில்: நடத்துநர் தற்போது: |
பணியாளர் | 8,500+ |
தாய் நிறுவனம் | மலேசிய நிதி அமைச்சு |
பிரசரானா மலேசியா (ஆங்கிலம்: Prasarana அல்லது Malaysian Infrastructure Limited; மலாய்: Prasarana Malaysia Berhad) என்பது மலேசிய நிதி அமைச்சுக்கு சொந்தமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் மலேசிய அரசாங்கம் 100% பங்குகளைக் கொண்டுள்ளது. கோலாலம்பூர் நகரின் பொது போக்குவரத்து அமைப்பை மறுசீரமைப்பதற்கான அரசாங்க நடவடிக்கையின் கீழ் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.[1]
மலேசிய நிதி அமைச்சு (ஒருங்கிணைத்தல்) சட்டம் 1957-இன் (Minister of Finance Incorporation Act 1957) கீழ் ஒரு நிறுவன அமைப்பாக தொடங்கப்பட்டது. தற்போதைய நிலையில் பிரசரானா மலேசியா, மலேசியாவில் பல வகையான பொது போக்குவரத்துச் சேவைகளை நடத்தி வருகிறது.[2]
பொது
[தொகு]மலேசியாவில் மிகப்பெரிய பொது போக்குவரத்து நிறுவனங்களில் பிரசரானா மலேசியா நிறுவனமும் ஒன்றாகும். மற்ற பெரிய போக்குவரத்து நிறுவனம் டிரான்சுநேசனல் குழுமம் (Konsortium Transnasional) ஆகும். அது தனியார் நிறுவனம். பிரசரானா மலேசியா நிறுவனம் பேருந்து மற்றும் பெருநகர் இலகு சேவைகளை (Light Metro Services) நடத்தி வருகிறது.[3]
துணை நிறுவனங்கள்
[தொகு]பிரசரானா மலேசியாவின் நான்கு நிறுவனங்கள்;–
- ரேபிட் தொடருந்து (Rapid Rail)
- ரேபிட் பேருந்து (Rapid Bus)
- பிரசரானா ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் பொறியியல் சேவைகள் நிறுவனம் (Prasarana * Integrated Management and Engineering Services Sdn Bhd) (PRIME)
ஒருங்கிணைந்த வளர்ச்சி நிறுவனம் (Prasarana Integrated Development Sdn Bhd) (PRIDE)[4]
சேவைகள்
[தொகு]- ரேபிட் கேஎல் தொடருந்துகள் - Rapid Rail Sdn Bhd
- ரேபிட் கேஎல் பேருந்துகள் - Rapid Bus Sdn Bhd
- ரேபிட் பினாங்கு பேருந்துகள் - Rapid Bus Sdn Bhd
- ரேபிட் குவாந்தான் பேருந்துகள் - Rapid Bus Sdn Bhd
- மலேசிய ரேபிட் அட்டை தொட்டு செல் - Touch 'n Go Card
- முத்தியாரா அட்டை - ரேபிட் பினாங்கு Mutiara Pass Rapid Penang[5]
காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Prasarana eyes RM55bil rail jobs in Saudi Arabia". thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 29 November 2014.
- ↑ "Station Naming Rights - Business Opportunities MyRapid Your Public Transport Portal". www.myrapid.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
- ↑ Monihuldin, Mahadhir (29 May 2023). "KL Sentral LRT station renamed KL Sentral redONE". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-29.
- ↑ "Subsidiaries - Corporate Information | MyRapid Your Public Transport Portal". www.myrapid.com.my. பார்க்கப்பட்ட நாள் 2020-06-25.
- ↑ "Prasarana wins Makkah metro consultancy contract". railwaygazette.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2014.