மலேசிய நிதி அமைச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய நிதி அமைச்சு
Kementerian Kewangan
Ministry of Finance

(MOF)

மலேசிய நிதி அமைச்சகம்
துறை மேலோட்டம்
அமைப்பு31 ஆகத்து 1957; 66 ஆண்டுகள் முன்னர் (1957-08-31)
ஆட்சி எல்லைமலேசிய அரசாங்கம்
தலைமையகம்Ministry of Finance Complex, No. 5, Persiaran Perdana, Precinct 2, Federal Government Administrative Centre, 62592 புத்ராஜெயா
பணியாட்கள்21,745 (2019)
ஆண்டு நிதிMYR 9,805,756,000 (2021)
அமைச்சர்
பொறுப்பான துணை அமைச்சர்கள்
 • அகமட் மசலான்
  (Ahmad Maslan),
  * 1. துணை நிதியமைச்சர்
 • இசுடீபன் சிம்
  (Steven Sim),
  * 2. துணை நிதியமைச்சர்
அமைப்பு தலைமைகள்
 • சொகான் மகமுட் மெரிக்கன்
  (Johan Mahmood Merican),
  * பொதுச் செயலர்
 • (காலி),
  * 1. துணைப் பொதுச் செயலாளர்
 • ரசிதா பிந்தி முகமது சைஸ்
  (Rashidah binti Mohd Sies),
  * 2. துணைப் பொதுச் செயலாளர்
 • அனிசு ரிசானா பிந்தி முகமட் சைனுதீன்
  (Anis Rizana binti Mohd Zainudin),
  * 3. துணைப் பொதுச் செயலாளர்
வலைத்தளம்www.mof.gov.my
அடிக்குறிப்புகள்
முகநூலில் மலேசிய நிதி அமைச்சு

மலேசிய நிதி அமைச்சு (மலாய்: Kementerian Kewangan Malaysia; ஆங்கிலம்: Ministry of Finance, Malaysia) (MOF) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். அரசாங்கச் செலவுகள் (Government Expenditure); மற்றும் வருவாயை உயர்த்துதல் (Government Revenue Raising) ஆகிய நிதி விவகாரங்களைக் கவனிக்கும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறது.[1]

பொருளாதாரக் கொள்கையை (Economic Policy) உருவாக்குவதும்; மலேசிய வரவு-செலவு மதிப்பீட்டுத் திட்டத்தைத் (Malaysian Federal Budget) தயாரிப்பதும் இந்த அமைச்சின் முக்கியப் பங்காகும். அத்துடன் நிதித் துறை சார்ந்த சட்டங்கள் (Financial Legislation) மற்றும் நிதி ஒழுங்குமுறைகளையும் (Financial Regulation) மேற்பார்வை செய்கிறது. இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயாவின் நிதி அமைச்சக வளாகத்தில் (Ministry of Finance Complex) உள்ளது.

பொது[தொகு]

மலேசியாவின் மிக முக்கியமான அமைச்சுகளுள் ஒன்றாகக் கருதப்படும் இந்த நிதி அமைச்சின் தலைவர் நிதி அமைச்சர் எனப்படுவார். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில், நிதியமைச்சர் மலேசிய நடுவண் அரசாங்கத்தின் வருடாந்திர வரவு-செலவு மதிப்பீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்.

மலேசியப் பணவியல் கொள்கையை (Monetary Policy); மலேசியாவின் மத்திய வங்கியான மலேசிய நடுவண் வங்கி (Central Bank of Malaysia) கையாள்கிறது. இந்த நடுவண் வங்கியின் தலைவரை யாங் டி பெர்துவான் அகோங் (Yang di-Pertuan Agong) எனும் மலேசியப் பேரரசர் நியமிக்கிறார்.

முக்கியமான பதவி[தொகு]

நிதியமைச்சர் பதவி மிகவும் மூத்த அரசு பதவியாகக் கருதப்படுகிறது. வரலாற்று ரீதியாக முன்பு, நிதி அமைச்சர் பதவியை வகித்தவர்கள் மலேசியப் பிரதமர் அல்லது மலேசிய துணைப் பிரதமராக பணியாற்றி இருக்கிறார்கள்.

நிதி அமைச்சராகப் பணியாற்றுவது பிரதமராகப் பொறுப்பு ஏற்பதற்கான முக்கியத் தகுதியாகக் கருதப்பட்டாலும் அது அவசியம் அல்ல. நிதி அமைச்சர் பதவியை வகிக்காமலேயே ஒருவர் மலேசிய நாட்டின் பிரதமராக முடியும். இன்றுவரை ஐந்து மலேசிய நிதி அமைச்சர்கள் மலேசியப் பிரதமராக பதவி வகித்து உள்ளனர்.

பொறுப்பு துறைகள்[தொகு]

 • அரசாங்கச் செலவுகள் (Government Expenditure)
 • அரசாங்க வருவாய் உயர்த்துதல் (Government Revenue Raising)
 • பொருளாதாரக் கொள்கை (Economic Policy)
 • வரவு-செலவு மதிப்பீட்டுத் திட்டம் (Malaysian Federal Budget)
 • நிதித் துறை சார்ந்த சட்டங்கள் (Financial Legislation)
 • நிதி ஒழுங்குமுறைகள் (Financial Regulation)

அமைப்பு[தொகு]

 • நிதி அமைச்சர்
 • துணை நிதி அமைச்சர்
   • பொதுச் செயலாளர்
    • பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
     • வருமான வரி சிறப்பு ஆணையர்கள் (Special Commissioners of Income Tax)
     • சட்டப் பிரிவு (Legal Division)
     • சுங்க மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (Customs Appeal Tribunal)
     • நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
     • உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
     • ஒழுங்கமைவு பிரிவு (Integrity Division)
     • சரக்கு சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (GST Appeal Tribunal)
    • துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை) (Policy)
     • தேசிய வரவு செலவு கணக்கு அலுவலகம் (National Budget Office)
     • பன்னாட்டுப் பிரிவு (International Division)
     • நிதி மற்றும் பொருளாதார பிரிவு (Fiscal and Economics Division)
     • வரி பிரிவு Tax Division)
     • கடன் அறிக்கை முகமைகளின் பதிவாளர் அலுவலகம் (Registrar Office of Credit Reporting Agencies)
    • துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை) (Management)
     • ஊதியக் கொள்கை மற்றும் மேலாண்மைப் பிரிவு (Remuneration Policy and Management Division)
     • அரசு கொள்முதல் பிரிவு (Government Procurement Division)
     • சபா கூட்டரசு கருவூலம் (Sabah Federal Treasury)
     • சரவாக் கூட்டரசு கருவூலம் (Sarawak Federal Treasury)
     • தகவல் தொழில்நுட்ப பிரிவு (Information Technology Division)
    • துணைப் பொதுச் செயலாளர் (முதலீடு) (Investment)
     • பொது சொத்து மேலாண்மை பிரிவு (Public Asset Management Division)
     • அரசு முதலீட்டு நிறுவனங்கள் பிரிவு (Government Investment Companies Division)
     • சட்டப்பூர்வ உத்திசார் மேலாண்மை பிரிவு (Statutory Body Strategic Management Division)
     • உத்திசார் முதலீட்டு பிரிவு (Strategic Investment Division)

கூட்டரசு துறைகள்[தொகு]

 • கூட்டரசு கருவூலம்
  • (Federal Treasury)
  • (Perbendaharaan Malaysia)

அமைச்சு சார்ந்த அரசு நிறுவனங்கள்[தொகு]

 • மலேசிய மயமாக்கல் வாரியம்
  • (Malaysian Totalisator Board)
  • (Lembaga Totalisator Malaysia)
 • ஓய்வூதிய நிதி (ஒருங்கிணைக்கப்பட்டது)
 • மலேசிய காப்புறுதி வைப்புத் தொகை நிறுவனம்
  • (Malaysian Deposit Insurance Corporation)
  • (Perbadanan Insurans Deposit Malaysia) (PIDM)

அமைச்சு சார்ந்த சட்டங்கள்[தொகு]

அரசாங்கச் செலவுகள்; அரசாங்க வருவாய் உயர்த்துதல்; பொருளாதாரக் கொள்கை; வரவு-செலவு மதிப்பீட்டுத் திட்டம்; நிதித் துறை சார்ந்த சட்டங்கள்; நிதி ஒழுங்குமுறைகள் சார்ந்த சட்டப் பொறுப்புகள், இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

 • வருமான வரிச் சட்டம் 1967
  • Income Tax Act 1967 [Act 53]
 • நிதி நடைமுறைச் சட்டம் 1957
  • Financial Procedure Act 1957 [Act 61]
 • விற்பனை வரிச் சட்டம் 1972
  • Sales Tax Act 1972 [Act 64]
 • சூதாட்ட வரிச் சட்டம் 1972
  • Gaming Tax Act 1972 [Act 65]
 • கணக்காளர்கள் சட்டம் 1967
  • Accountants Act 1967 [Act 94]
 • தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் 1974
  • Bank Simpanan Nasional Act 1974 [Act 146]
 • சேவை வரிச் சட்டம் 1975
  • Service Tax Act 1975 [Act 151]
 • இசுலாமிய மேம்பாட்டு வங்கிச் சட்டம் 1975
  • Islamic Development Bank Act 1975 [Act 153]
 • அசைய சொத்து ஆதாய வரிச் சட்டம் 1976
  • Real Property Gains Tax Act 1976 [Act 169]
 • கலால் வரிச் சட்டம் 1976
  • Excise Act 1976 [Act 176]
 • துன் ரசாக் அறக்கட்டளைச் சட்டம் 1976
  • Tun Razak Foundation Act 1976 [Act 178]
 • கருவூல மசோதா (உள்ளூர்) சட்டம் 1946
  • Treasury Bills (Local) Act 1946 [Act 188]
 • குதிரைப்பந்தயச் சூதாட்டச் சட்டம் 1948
  • Betting Sweepstake Duties Act 1948 [Act 201]
 • சுங்கச் சட்டம் 1967
  • Customs Act 1967 [Act 235]
 • கருவூல வைப்புத் தொகை பற்றுச்சீட்டுச் சட்டம் 1952
  • Treasury Deposit Receipts Act 1952 [Act 236]
 • மதிப்பீட்டாளர்கள் மற்றும் குடியிருப்பு முகவர்கள் சட்டம் 1981
  • Valuers, Appraisers and Estate Agents Act 1981 [Act 242]
 • குலுக்கல் பரிசு சட்டம் 1952
  • Lotteries Act 1952 [Act 288]
 • சரக்கு வாகன வரிச்சட்டம் 1983
  • Goods Vehicle Levy Act 1983 [Act 294]
 • முதலீடுகள் நிலை உயர்வுச் சட்டம் 1986
  • Promotion of Investments Act 1986 [Act 327]
 • நிதி (வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்) சட்டம் 1986
  • Finance (Banking and Financial Institutions) Act 1986 [Act 330]
 • உரிமை கோரப்படாத பணச் சட்டம் 1965
  • Unclaimed Moneys Act 1965 [Act 370]
 • நிதி அமைச்சர் (ஒருங்கிணைப்பு) சட்டம் 1957
  • Minister of Finance (Incorporation) Act 1957 [Act 375]
 • முத்திரை சட்டம் 1949
  • Stamp Act 1949 [Act 378]
 • சேர்மப் பந்தயச் சட்டம் 1967
  • Pool Betting Act 1967 [Act 384]
 • வெளிநாட்டுக் கடன் சட்டம் 1963
  • External Loans Act 1963 [Act 403]
 • மேம்பாட்டு நிதிச் சட்டம் 1966
  • Development Funds Act 1966 [Act 406]
 • லங்காவி வளர்ச்சி நிறுவனச் சட்டம் 1990
  • Lembaga Pembangunan Langkawi Act 1990 [Act 423]
 • தீர்வை இல்லா மண்டலங்கள் சட்டம் 1990
  • Free Zones Act 1990 [Act 438]
 • லபுவான் நிறுவனங்கள் சட்டம் 1990
  • Labuan Companies Act 1990 [Act 441]
 • லபுவான் வணிக நடவடிக்கை வரி சட்டம் 1990
  • Labuan Business Activity Tax Act 1990 [Act 445]
 • ஊழியர் சேமநிதிச் சட்டம்
  • Employees Provident Fund Act 1991 [Act 452]
 • கடனீட்டுத் துறை (மத்திய சேமிப்புகள்) சட்டம் 1991
  • Securities Industry (Central Depositories) Act 1991 [Act 453]
 • அரசு கடனீட்டு ஆணையச் சட்டம் 1993
  • Securities Commission Act 1993 [Act 498]
 • மலேசிய உள்நாட்டு வருவாய் வாரியச் சட்டம் 1995
  • Inland Revenue Board of Malaysia Act 1995 [Act 533]
 • பெட்ரோலியம் (வருமான வரி) சட்டம் 1967
  • Petroleum (Income Tax) Act 1967 [Act 543]
 • லபுவான் அக்கரை நிதிச் சேவைகள் ஆணையச் சட்டம் 1996
  • Labuan Offshore Financial Services Authority Act 1996 [Act 545]
 • லபுவான் அக்கரை அறங்காவலர் சட்டம் 1996
  • Labuan Offshore Trusts Act 1996 [Act 554]
 • நிதி அறிக்கை சட்டம் 1997
  • Financial Reporting Act 1997 [Act 558]
 • தானா அர்த்தா நேசனல் மேலாண்மை சட்டம் 1998
  • Pengurusan Danaharta Nasional Berhad Act 1998 [Act 587]
 • ஆதாயக் குவியல் சட்டம் 1998
  • Windfall Profit Levy Act 1998 [Act 592]
 • பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருவாய் சட்டம் 2001
  • Anti-Money Laundering, Anti-Terrorism Financing and Proceeds of Unlawful Activities Act 2001 [Act 613]
 • நிதி நிறுவனங்கள் வளர்ச்சி சட்டம் 2002
  • Development Financial Institutions Act 2002 [Act 618]
 • இசுலாமிய நிதிச் சேவை வாரியச் சட்டம் 2002
  • Islamic Financial Services Board Act 2002 [Act 623]
 • கூட்டுப் பங்கு நீக்கம் (கோலாலம்பூர் பங்குச் சந்தை) சட்டம் 2003
  • Demutualisation (Kuala Lumpur Stock Exchange) Act 2003 [Act 632]
 • ஓய்வூதிய நிதி சட்டம்
  • Retirement Fund Act 2007 [Act 662]
 • மூலதனச் சந்தைகள் மற்றும் சேவைகள் சட்டம் 2007
  • Capital Markets and Services Act 2007 [Act 671]
 • மலேசிய மத்திய வங்கி சட்டம் 2009
  • Central Bank of Malaysia Act 2009 [Act 701]
 • லபுவான் நிதிச் சேவைகள் மற்றும் பத்திரங்கள் சட்டம் 2010
  • Labuan Financial Services and Securities Act 2010 [Act 704]
 • லபுவான் இசுலாமிய நிதிச் சேவைகள் மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2010
  • Labuan Islamic Financial Services and Securities Act 2010 [Act 705]
 • லபுவான் அறக்கட்டளைச் சட்டம் 2010
  • Labuan Foundations Act 2010 [Act 706]
 • மலேசிய காப்புறுதி வைப்புத் தொகைச் சட்டம் 2011
  • Malaysia Deposit Insurance Corporation Act 2011
 • பணச் சேவைகள் வணிகச் சட்டம் 2011
  • Money Services Business Act 2011 [Act 731]
 • நிதிச் சேவைகள் சட்டம் 2013
  • Financial Services Act 2013 [Act 758]
 • இசுலாமிய நிதிச் சேவைகள் சட்டம் 2013
  • Islamic Financial Services Act 2013 [Act 759]
 • சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2014
  • Goods and Services Tax Act 2014 [Act 762]

சான்றுகள்[தொகு]

 1. "Economic & Fiscal Outlook and Federal Government Revenue Estimates 2023". பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ministry of Finance (Malaysia)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_நிதி_அமைச்சு&oldid=3692091" இலிருந்து மீள்விக்கப்பட்டது