பெர்னாமா
வகை | தேசிய செய்தி நிறுவனம் |
---|---|
வடிவம் | தொலைத் தட்டச்சு செய்திகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு |
உரிமையாளர்(கள்) | ![]() |
வெளியீட்டாளர் | ![]() |
ஆசிரியர் | டத்தோ யோங் சூ ஹியோங் (தலைமை நிர்வாகி) விஸ்வக்குமார் சங்கையா (மூத்த நிர்வாகி) |
நிறுவியது | உருவாக்கம் 1967 பணித் தொடக்கம் 26 மே 1968 |
அரசியல் சார்பு | அரசாங்க சார்பு நிலை |
மொழி | ஆங்கில மொழி மலாய் மொழி சீன மொழி தமிழ் மொழி |
தலைமையகம் | ![]() |
இணையத்தளம் | www.bernama.com/bernama/v7/index.php |
பெர்னாமா (மலாய்: Berita Nasional Malaysia; ஆங்கில மொழி: Malaysian National News Agency) என்பது மலேசிய அரசாங்கத்தின் செய்தி நிறுவனம். மலேசியத் தகவல், தொடர்பு, கலாசார அமைச்சின் கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமாக இயங்கி வருகிறது. Berita Nasional Malaysia எனும் மலாய்ச் சொற்களின் சுருக்கம்தான் BERNAMA அல்லது பெர்னாமா என்று அழைக்கப்படுகிறது.
பெர்னாமா, 1967 ஆம் ஆண்டில் ஒரு நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. அதன் பணிகள் 1968 மே 26இல் தொடங்கின. இந்தச் செய்தி நிறுவனத்தை மலேசிய அரசாங்கம் நடத்தி வருவதால் அதன் செய்திகளும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வலது சாரித் தன்மை உடையதாகவும் அரசு சார்பு கொண்டதாகவும் உள்ளன. உலகம் முழுமையும் இந்த நிறுவனத்திற்கு 300க்கு மேற்பட்ட செய்தியாளர்களும் நிருபர்களும் உள்ளனர்.[1]
பின்னணி[தொகு]
கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக் சாலையில், மலேசிய தேசிய நூலகத்திற்கு அருகாமையில் அமைந்து இருக்கும் பெர்னாமா மாளிகையில் இருந்து இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. மலேசியாவின் எல்லா மாநிலங்களிலும் பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன.
ஜகார்த்தா, சிங்கப்பூர், புது டில்லி, பாங்காக், பெய்ஜிங், டுபாய் ஆகிய நகரங்களில் நிரந்தரமான செய்தியாளர்கள் உள்ளனர். வாஷிங்டன், மெல்பர்ன், லண்டன், மணிலா, டாக்கா, வான்கூவர் ஆகிய நகரங்களில் நிருபர்கள் உள்ளனர். மலேசியாவின் பெரும்பாலான செய்தி ஊடகங்கள் பெர்னாமாவின் சந்தாதாரர்களாக உள்ளன.
தமிழ்ச் செய்திகள்[தொகு]
1998 செப்டம்பர் மாதம் பெர்னாமா தனது ஒலி - ஒளி ஊடகச் சேவையைத் தொடங்கியது. இந்த நிறுவனம் 24 மணி நேர வானொலி, தொலைக்காட்சி செய்திச் சேவையை மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில், ஆஸ்ட்ரோ 502வது ஒளி அலைவரிசையில் வழங்கி வருகிறது.[2]
சில தகவலகங்கள்[தொகு]
இந்தியா
- F17, 1st floor,
- Hauz Khas Enclave,
- புது டில்லி இந்தியா11016
சிங்கப்பூர்
- 6, இயூ தோங் சென் சாலை
- சிங்கப்பூர் 059817
இந்தோனேசியா
- விஸ்மா அந்தாரா
- Lantai 16, Suite 1609, Jalan Medan Merdeka Selatan 17
- ஜகார்த்தா 10110 இந்தோனேசியா
தாய்லாந்து
- தாய் பிங் கோபுர வீடமைப்பு
- Unit 2237, 582 Sukhumvit 63 Klongtua Vattana,
- பாங்காக் 10110, தாய்லாந்து