சுங்கை தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 4°00′N 101°19′E / 4.000°N 101.317°E / 4.000; 101.317
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுங்கை தொடருந்து நிலையம்
Sungkai Railway Station
சுங்கை தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்30100, சுங்கை, மலேசியா
ஆள்கூறுகள்4°00′N 101°19′E / 4.000°N 101.317°E / 4.000; 101.317
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
நடைமேடை2 நடை மேடை
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
தரிப்பிடம்KTMB நிறுத்துமிடம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
வரலாறு
திறக்கப்பட்டது1893
மறுநிர்மாணம்2007
மின்சாரமயம்2007
சேவைகள்
முந்தைய நிலையம்   சுங்கை   அடுத்த நிலையம்
தாப்பா
 
  Gold  
  சிலிம் ரீவர் >>> கோலாலம்பூர்
தாப்பா
 
  Silver  
  சிலிம் ரீவர் >>> கோலாலம்பூர்
அமைவிடம்
Map
சுங்கை தொடருந்து நிலையம்


சுங்கை தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Sungkai Railway Station மலாய்: Stesen Keretapi Sungkai); சீனம்: 宋溪火车站) என்பது மலேசியா, பேராக், பத்தாங் பாடாங் மாவட்டம், சுங்கை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.

சுங்கை, பீடோர், பீக்காம் நகரங்களுக்கும் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமப் பகுதிகளுக்கும் இந்த நிலையம் சேவை செய்கிறது. 2007 மார்ச் மாதத்தில் சுங்கை நகருக்கான புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது.[1]

பொது[தொகு]

இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் சுங்கை நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.[2]

இந்த நிலையத்தின் ஒரு முனையில் சரக்கு முற்றம் உள்ளது. இது ரவாங்-ஈப்போ மின்மயமாக்கப்பட்ட இரட்டை வழித்தடத் திட்டத்திற்கு (Rawang-Ipoh Electrified Double Tracking Project) முன்னதாக உருவாக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

பேராக், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் சுங்கை நகருக்கு அருகில் உள்ள தாமான் பெர்மாய் ஜெயா (Taman Permai Jaya) எனும் வீடுமனைப் பகுதியில் இந்த நிலையம் அமைந்துள்ளது. [3]

பேராக் இரயில்வே[தொகு]

1901-ஆம் ஆண்டில், பேராக் இரயில்வே எனும் பேராக் தொடருந்து சேவைக்கான (Perak Railway) தொடருந்து சேவை; சிலாங்கூர் தொடருந்து சேவையுடன் (Selangor Railways) ஒன்றிணைக்கப்பட்டு பின்னர் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவை (Federated Malay States Railways) என அறியப்பட்டது.

பேராக் இரயில்வே எனும் பேராக் தொடருந்து சேவைக்கான தொடருந்து பாதைகள் முதன்முதலில் ஈப்போவில் தான் அமைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தாப்பாவிலும் அமைக்கப்பட்டன. பேராக் தொடருந்து சேவை 20 ஆண்டுகள் சேவை செய்தது. [4]

கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை[தொகு]

கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே சேவையாற்றுகின்றன.

கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது. ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது. [5][6]

அதே வேளையில், புக்கிட் மெர்தாஜாம், பாடாங் ரெங்காஸ் நிலையங்களை இணைக்கும்  1  பாடாங் ரெங்காஸ் வழித்தடம் (KTM Komuter Padang Rengas Line) 10 ஜூலை 2015 அன்று திறக்கப்பட்டது.

பழைய சுங்கை தொடருந்து நிலையம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Sungkai KTM Railway Station is a KTM train station located at and named after the town of Sungkai, Perak. The Station is located at the north eastern side of town and was opened and electrified in March 2007 as part of the double tracking project between Rawang and Ipoh". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 26 July 2023.
  2. "The KTM Sungkai Railway Station (Stesen Keretapi Sungkai) is located in the state of Perak, Malaysia along the KTM Berhad North - South (West Coast) Line. Sungkai Railway Station is served by ETS trains that operate on the KL Sentral - Ipoh - KL Sentral route". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 26 July 2023.
  3. "Sungkai railway station is a railway station located in Taman Permai Jaya, Sungkai, Perak, Malaysia. This station provides KTM Intercity and ETS service". Transport Malaysia. 24 November 2010. பார்க்கப்பட்ட நாள் 26 July 2023.
  4. "First railway station in Ipoh was constructed in 1894. It served the town for 20 years. It was a single storey building with no accommodations". 8 February 2020. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  5. "Padang Rengas Railway Station (GPS: 4.77739, 100.85816) is a train station in Padang Rengas, Perak. The station is located between the Taiping Railway Station in the northwest and the Kuala Kangsar Railway Station in the east. The KTM Electric Train Service serves this station". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.
  6. "Trains from Padang Rengas to Ipoh". 5 January 2023. பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]