கோலாகங்சார் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 4°46′35″N 100°55′54″E / 4.77639°N 100.93167°E / 4.77639; 100.93167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோலாகங்சார் தொடருந்து நிலையம்
Kuala Kangsar Railway Station
கோலாகங்சார் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கோலாகங்சார், பேராக்
ஆள்கூறுகள்4°46′35″N 100°55′54″E / 4.77639°N 100.93167°E / 4.77639; 100.93167
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
நடைமேடை2 பக்க நடை மேடைகள்
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
வரலாறு
மறுநிர்மாணம்2013
மின்சாரமயம்2015
சேவைகள்
முந்தைய நிலையம்   கோலாகங்சார்   அடுத்த நிலையம்
தைப்பிங் (பாடாங் பெசார்)
 
  Platinum  
  ஈப்போ
தைப்பிங் (பட்டர்வொர்த்)
 
  Platinum  
  ஈப்போ
பாடாங் ரெங்காஸ் (பாடாங் பெசார்)
 
  Gold  
  சுங்கை சிப்புட்
பாடாங் ரெங்காஸ் (பட்டர்வொர்த்)
 
  Gold  
  சுங்கை சிப்புட்
அமைவிடம்
Map
கோலாகங்சார் தொடருந்து நிலையம்

கோலாகங்சார் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kuala Kangsar Railway Station மலாய்: Stesen Keretapi Kuala Kangsar); சீனம்: 瓜拉江沙火车站) என்பது தீபகற்ப மலேசியா, பேராக், கோலாகங்சார் மாவட்டம், கோலாகங்சார் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். [1]

இந்த நிலையம் கோலாகங்சார் நகரத்திற்கும்; மற்றும் கோலாகங்சார் மாவட்டத்தின் சுற்றுப்புறங்களுக்கும் சேவை செய்கிறது.

ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் (Ipoh-Padang Besar Electrification and Double-Tracking Project) ஒரு பகுதியாக 2015-ஆம் ஆண்டில், தற்போதைய கோலாகங்சார் நிலையம் கோலாகங்சார் நகரத்தில் கட்டப்பட்டது.

பொது[தொகு]

சூலை 2008-இல் கம்போங் தாலாங் சிம்பாங் தீகாவில் ஒரு புதிய தொடருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பழைய நிலையம் தொடருந்து அருங்காட்சியகமாகத் தக்கவைக்கப்பட்டது.[2]

கோலாகங்சார் நிலையம் மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடத்தில் உள்ளது. இந்த நிலையம்; கேடிஎம் இடிஎஸ் சேவைகளுக்கு ஒரு நிறுத்தமாகும்.[3]

கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை[தொகு]

கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே சேவையாற்றுகின்றன.

கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது. ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது. [4][5]

அதே வேளையில், புக்கிட் மெர்தாஜாம், பாடாங் ரெங்காஸ் நிலையங்களை இணைக்கும்  1  பாடாங் ரெங்காஸ் வழித்தடம் (KTM Komuter Padang Rengas Line) 10 ஜூலை 2015 அன்று திறக்கப்பட்டது.

கோலாகங்சார் நகரம்[தொகு]

கோலாகங்சார் நகரம் (Kuala Kangsar), பேராக் மாநிலத்தின் அரச நகரம். இங்கேதான் மலேசியாவின் முதல் ரப்பர் மரக் கன்று நடப்பட்டது. பிரித்தானிய தாவரவியலாளர் எச். என். ரிட்லி முதல் ரப்பர் கன்றை நட்டு உலக ரப்பர் ஏற்றுமதியில் மலேசியாவை முதல் நிலைக்கு கொண்டு வந்தார். இந்த நகரத்தின் மக்கள் தொகை 39,331.

கோலாகங்சார் நகரத்தில் தான் மலேசியாவில் முதன் முதலில் ரப்பர் மரக் கன்று நடப்பட்டது. உலக ரப்பர் உற்பத்தி ஏற்றுமதியில் மலேசியாவை முதன்மை படுத்தி முதல் நிலைக்கு கொண்டு வந்த பெருமை அவரையே சாரும். அவர் நட்ட அந்த ரப்பர் மரம் வளர்ந்து இன்று வரை கோலாகங்சார் நகரில் காட்சி அளிக்கின்றது. கோலாகங்சார் நகரத்திற்கு வருபவர்கள் அந்த மரத்தைப் பார்க்காமல் செல்வது இல்லை.

மலேசியாவின் முதல் ரப்பர் மரம்[தொகு]

இந்த ரப்பர் மரம் மலேசியாவின் ஒரு வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாக்கப் பட்டு வருகிறது. பார்க்க வருபவர்கள் அதைத் தொட்டுத் தடவிப் பார்ப்பதைத் தடுக்க மரத்தைச் சுற்றிலும் வேலி அமைக்கப் பட்டுள்ளது. மலேசியாவின் இந்த முதல் ரப்பர் மரத்திற்கு இப்போது வயது 100க்கும் மேல் ஆகிறது.

கோலாகங்சார் நகரம் கங்சார் ஆற்றுக் கரையோரம் உருவாக்கப் பட்டது. இந்த ஆறு பேராக் ஆற்றுடன் கலக்கிறது. 1877–1887 ஆண்டுகளில் பேராக் மாநிலத்தை ஆட்சி செய்தவர் சுல்தான் யூசுப் சரிபுடின் முசபர் சா. இந்தச் சுல்தான் தான் கோலாகங்சார் அரச நகரத்தை உருவாக்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Located in the Royal town of Perak, the KTM Kuala Kangsar Railway Station has trains operating on the North -South Line stopping off here, with the new high-speed Electric Train Services (ETS) making travel to Kuala Kangsar fast and convenient". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 23 July 2023.
  2. "Kuala Kangsar Railway Station (GPS: 4.77655, 100.93199) is a railway station in Kuala Kangsar, Perak. It serves both the KTM Intercity, and since 11 July 2015, the KTM Electric Train Service, or ETS". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 July 2023.
  3. "There are currently 11 direct train services a day from Kuala Lumpur Sentral Station to Kuala Kangsar". 4 August 2018. பார்க்கப்பட்ட நாள் 23 July 2023.
  4. "Padang Rengas Railway Station (GPS: 4.77739, 100.85816) is a train station in Padang Rengas, Perak. The station is located between the Taiping Railway Station in the northwest and the Kuala Kangsar Railway Station in the east. The KTM Electric Train Service serves this station". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.
  5. "Trains from Padang Rengas to Ipoh". 5 January 2023. பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]