பாலோ தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 2°11′13″N 103°11′39″E / 2.18694°N 103.19417°E / 2.18694; 103.19417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலோ தொடருந்து நிலையம்
PalohRailway Station
  கேடிஎம்  இண்டர்சிட்டி  
பொது தகவல்கள்
அமைவிடம்பாலோ, குளுவாங் மாவட்டம், ஜொகூர், மலேசியா
ஆள்கூறுகள்2°11′13″N 103°11′39″E / 2.18694°N 103.19417°E / 2.18694; 103.19417
உரிமம் மலாயா தொடருந்து
இயக்குபவர்மலாயா தொடருந்து நிறுவனம் (KTM)
தடங்கள் மலாயா மேற்கு கடற்கரை 
நடைமேடை1 நடைமேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking இலவசம்
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇரட்டைப் பாதை மற்றும் மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் சீரமைப்புக்காக மூடப்பட்டுள்ளது
வரலாறு
திறக்கப்பட்டது1909
சேவைகள்
முந்தைய நிலையம்   பாலோ   அடுத்த நிலையம்
Blank
   
Blank
பெக்கோக்
<<<
கிம்மாஸ்
 
 Ekspres Timuran 
தெற்கு நகரிடை சேவை
 
குளுவாங்
>>>
ஜொகூர் பாரு
அமைவிடம்
Map
பெக்கோக் தொடருந்து நிலையம்

பாலோ தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Paloh Railway Station; மலாய்: Stesen KTMB Paloh) என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டம், பாலோ நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பாலோ நகரத்தின் மையப் பகுதியில் அமைந்து இருப்பதால், பாலோ நகரத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது.[1]

மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM West Coast Railway Line) அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளை வழங்குகிறது. பாலோ நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், பாலோ நகரத்தின் பெயரில் இந்த நிலையம் அழைக்கப்படுகிறது.[2]

பொது[தொகு]

கிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கப்பட்ட இரட்டை கண்காணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய பாலோ நிலையம் கட்டப்படுகிறது. இந்த நிலையம் 23 ஜூன் 2021 அன்று மூடப்பட்டு, அதற்குப் பதிலாக பாலோ நகரத்தில் ஒரு தற்காலிக நிலையம் அமைக்கப்பட்டது.

புதிய, வேகமான கேடிஎம் இடிஎஸ் மின்சாரச் தொடருந்து சேவைகளுக்கு இடமளிக்கும் வகையில், ஜொகூர் மாநிலத்தில் உள்ள தொடருந்து வழித்தடங்களில் தற்போது மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.[3]

மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டமே மலேசிய மின்மயமாக்கல் திட்டம் ஆகும்.[4]

புதிய பாலோ நிலையம் திறக்கப்பட்டதும், பழைய நிலையம் இடிக்கப்படும் என்று மலாயா தொடருந்து நிறுவனம் (KTM) அறிவித்துள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Paloh Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 7 April 2024.
  2. "The Paloh Railway Station provides KTM Intercity train services". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 7 April 2024.
  3. "The railway line in this part of the country is currently undergoing upgrading work which is being done to accommodate the newer, faster Electric Train Services (ETS). (Jadual) Ekspres Selatan". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 7 April 2024.
  4. "List Of Station - KTM Berhad". பார்க்கப்பட்ட நாள் 7 April 2024.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலோ_தொடருந்து_நிலையம்&oldid=3929218" இலிருந்து மீள்விக்கப்பட்டது