அப்துல்லா உக்கும் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KD01   KJ17 

அப்துல்லா உக்கும் நிலையம்
Abdullah Hukum Station
அப்துல்லா உக்கும் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்50621, பங்சார் சாலை, கோலாலம்பூர், மலேசியா
ஆள்கூறுகள்3°7′7″N 101°40′22″E / 3.11861°N 101.67278°E / 3.11861; 101.67278
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
பிரசரானா மலேசியா (இயக்குபவர்: ரேபிட் ரெயில்)
தடங்கள் கிள்ளான் துறைமுக வழித்தடம்
கிளானா ஜெயா வழித்தடம்
நடைமேடை2 பக்க நடைமேடைகள்
இருப்புப் பாதைகள்2 (எல்ஆர்டி)
3 (கேடிஎம் கொமுட்டர்)
இணைப்புக்கள்பாதசாரி நடைபாதை வழியாக  KB01  மிட்வெளி கேஎல் சுற்றுச்சூழல் நகரம்; மிட்வெளி நகரம்
கட்டமைப்பு
தரிப்பிடம்KTMB நிறுத்துமிடம்
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KD01   KJ17 
வரலாறு
திறக்கப்பட்டது1 செப்டம்பர் 1998 (எல்ஆர்டி)
28 அக்டோபர் 2018 (கேடிஎம் கொமுட்டர்)
சேவைகள்
முந்தைய நிலையம்   கோலாலம்பூர்   அடுத்த நிலையம்
Blank
   
Blank
பங்சார் (கோம்பாக்)
 
கிளானா ஜெயா
 
கெரிஞ்சி (புத்ரா)
Blank
   
Blank
கோலாலம்பூர் சென்ட்ரல் (தஞ்சோங் மாலிம்)
 
கிள்ளான் துறைமுகம்
 
அங்காசாபுரி (கிள்ளான்)
அமைவிடம்
Map
அப்துல்லா உக்கும் நிலையம்

அப்துல்லா உக்கும் நிலையம் (ஆங்கிலம்: Abdullah Hukum Station மலாய்: Stesen Komuter Abdullah Hukum); சீனம்: 阿卜杜拉胡库姆站) என்பது மலேசியா, கோலாலம்பூர், மாநகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். உயர்த்தப்பட்ட நிலையில் உள்ள இந்த நிலையத்தில் 1998 செப்டம்பர் 1-ஆம் தேதி எல்ஆர்டி இலகு விரைவு தொடருந்து சேவை தொடக்கப்பட்டது. அதன் பின்னர் 2018 அக்டோபர் 28-ஆம் தேதி கொமுட்டர் தொடருந்து சேவை தொடக்கப்பட்டது.[1]

மின்மயமாக்கப்பட்ட இந்த நிலையம் கோலாலம்பூர், பங்சார் சாலையில் அமைந்துள்ளது. அத்துடன் கிள்ளான் துறைமுக வழித்தடம் (Port Klang Line) கிளானா ஜெயா வழித்தடம் (Kelana Jaya Line) ஆகிய இரு வழித்தடங்களினால் இந்த நிலையம் சேவை செய்யப்படுகிறது.

பொது[தொகு]

மத்திய வணிக பெருநகரமான கோலாலம்பூரின் தெற்கே பங்சார் சாலை மற்றும் கேஎல் சுற்றுச்சூழல் நகரம் KL Eco City ஆகியவற்றுகு இடையே இந்த நிலையம் அமைந்துள்ளது. அத்துடன் பங்சார் சாலை மற்றும் கிள்ளான் ஆற்றுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு கிராமமான கம்போங் அஜி அப்துல்லா உக்கும் (Kampung Haji Abdullah Hukum) என்ற கிராமத்தின் பெயரால் இந்த நிலையத்திற்கு பெயரிடப்பட்டது. இந்தக் கிராமம் இப்போது ஒரு சுற்றுச்சூழல் நகரமாக மாறியுள்ளது.[2]

கேஎல் சுற்றுச்சூழல் நகரத்தைத் தவிர, அப்துல்லா உக்கும் நிலையத்திற்கு அருகிலுள்ள மற்றொரு முக்கிய அடையாளமானது தெனாகா நேசனல் நிறுவனத்தின் தலைமையகம் ஆகும். இந்த நிறுவனம் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் பங்சார் சாலையின் மேற்புறத்தில் அமைந்துள்ளது..[3]

அமைப்பு[தொகு]

கிள்ளான் துறைமுக வழித்தடம்
வாயில் இடம் இலக்கு படம்
A மேற்குப் பகுதி கேஎல் சுற்றுச்சூழல் நகரம்
B உயர்த்தப்பட்ட இணைப்பு பாலம் இணைப்பு பாலம் >>> கேஎல் சுற்றுச்சூழல் நகரம் - மிட்வெளி நகரம்
 KB01  மிட்வெளி கொமுட்டர்)
C கேடிஎம் நிலையத்திற்கும் எல்ஆர்டி நிலையத்திற்கும் இடை வாசல் KTM LRT
கிளானா ஜெயா வழித்தடம்
C கேடிஎம் நிலையத்திற்கும் எல்ஆர்டி நிலையத்திற்கும் இடை வாசல் KTM LRT
D கிழக்குப் பகுதி பங்சார் சாலை பங்சார் சாலை, பேருந்து நிறுத்தம், வாடகைக்கார் மற்றும் தனியார் வாகன நிறுத்தம், தெனாகா நேசனல் தலைமையகத்திற்கு பாதசாரி பாலம்

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Abdullah Hukum train station in KL Eco City opened" (in en). Edge Prop. 2018-11-06. https://www.edgeprop.my/content/1441911/abdullah-hukum-train-station-kl-eco-city-opened. 
  2. "An Iconic Station - Abdullah Hukum Welcomes You" (PDF). பார்க்கப்பட்ட நாள் 26 October 2018.
  3. "KL Eco City, another major landmark near the Abdullah Hukum Station" (in en). New Straits Times. 2019-11-16. https://www.nst.com.my/news/nation/2019/11/539220/last-you-can-now-reach-mid-valley-lrt-thanks-new-pedestrian-bridge. 

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]