உள்ளடக்கத்துக்குச் செல்

டான் ஸ்ரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டான் ஸ்ரீ (மலாய்: Tan Sri) என்பது மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கிய விருதுகளில் ஒன்றாகும். 'பாங்லிமா மாங்கு நெகாரா' (Panglima Mangku Negara (PMN)) [1] விருதையும் 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' (Panglima Setia Mahkota (PSM)) விருதையும், டான் ஸ்ரீ விருது என்று அழைக்கிறார்கள். 1957ஆம் ஆண்டில் இருந்து பொது மக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

மலேசியக் கூட்டரசு விருதுகள் பட்டியலில் 'பாங்லிமா மாங்கு நெகாரா' விருது 7ஆவது இடத்திலும், 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' விருது 8ஆவது இடத்திலும் தகுதிகள் வகிக்கின்றன. இந்த விருது வழங்கப்படுவதிலும் சில கட்டுப்பாடுகள், வரைமுறைகள் உள்ளன.

மலேசியாவில் உயிரோடு வாழ்பவர்களில் 75 பேர் மட்டுமே 'பாங்லிமா மாங்கு நெகாரா' (Panglima Mangku Negara) விருதைப் பெற்று இருக்க முடியும். அதே போல 'பாங்லிமா செத்தியா மக்கோத்தா' (Panglima Setia Mahkota) விருதை 250 பேர் மட்டுமே பெற்று இருக்க முடியும்.[2]

புவான் ஸ்ரீ

[தொகு]

டான் ஸ்ரீ விருதைப் பெற்ற ஒருவரின் துணைவரை புவான் ஸ்ரீ (Puan Sri) என்று அழைக்க வேண்டும். இதே விருது பெண்களுக்கு தனிப்பட்ட வகையில் கிடைக்குமானால் அவரை டான் ஸ்ரீ என்றே அழைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, மலேசிய அரசியல்வாதி டான் ஸ்ரீ தேவகி கிருஷ்ணனைச் சொல்லலாம்.[3] மலேசியப் பேரரசரைத் தவிர மலேசிய மாநிலங்களின் சுல்தான்களும் ஆளுநர்களும் டத்தோ விருதை வழங்கும் தகுதிகளைப் பெற்று உள்ளனர்.

மலேசியாவின் தற்போதைய துணைப் பிரதமருக்கு டான் ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் அன்று அழைக்கப்படுகிறார். வெளிநாட்டவர்கள் மலேசியாவிற்கு வழங்கியுள்ள அரிய சேவைகளுக்காக டான் ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. மலேசியத் தமிழர்களில் டான் ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம், டான் ஸ்ரீ எம். தம்பிராஜா பெற்றுள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்_ஸ்ரீ&oldid=3294229" இலிருந்து மீள்விக்கப்பட்டது